மத்திய வங்கியின் அதிகாரிகள் இன்று கோப் குழுவின் முன்னிலையில் ஆஜராகவுள்ளனர்.
மத்திய வங்கி அதிகாரிகளை கோப் குழுவில் இன்று முன்னிலையாகுமாறு, அந்தக் குழுவின் தலைவர் சுனில் ஹந்துநெத்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மத்திய வங்கியின் சர்ச்சைக்குரிய பத்திரங்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்வதற்காக கோப் குழுவில் முன்னிலையாகுமாறு கோரப்பட்டுள்ளது.
இந்த விசாரணை தொடர்பிலான அறிக்கையை இரண்டு வாரத்திற்குள் நாடாளுமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி தெரிவித்துள்ளார்.
பெற்றோரின் அரவணைப்பு கிடைக்காத மாணவி ஒருவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டுச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.தங்கொட்டுவ பிரதேசத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 16 வயது மாணவியே கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டைவிட்டுச் சென்றுள்ளதாக தங்கொட்டுவ பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் பிற்பகல் 11.30 அளவில் குறித்த மாணவி வீட்டை விட்டுச் சென்றுள்ளதாகவும், அவரால் எழுதப்பட்ட கடிதம் ஒன்றையும் மீட்டுள்ளதாக மாணவியின்...
பிரபல ரகர் வீரர் வசிம் தாஜூடின் கொலை தொடர்பில் உரிய விசாரணை நடத்தவில்லை என முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகர மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தாஜூடின் சடலத்தின் உடற்பாகங்கள் காணாமல் போனமைக்கு சட்ட வைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகர பொறுப்பு சொல்ல வேண்டுமென சுகாதார மற்றும் போசாக்கு அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கடிதமொன்றை அமைச்சு, கொழும்பு மேலதிக நீதவான் நிசாந்த பீரிஸிற்கு விளக்கம் அளித்துள்ளது.
அரச சேவையிலிருந்து ஓய்வு...
தென்கொரியாவிற்கான விஜயமொன்றை மேற்கொண்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்று காலை நாடு திரும்பியுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஸ இன்று காலை 10.30 மணியளவில் சிங்கப்பூர் விமானசேவைக்கு சொந்தமான விமானத்தின் மூலம் கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தை வந்தடைந்துள்ளார்.
இதேவேளை, தென்கொரியாவில் மஹிந்த ராஜபக்ஸவுக்கும் தென்கொரிய பிரதமர் ஹூவான் கியோ ஆனிற்கும் இடையில் பேச்சுவார்த்தை ஒன்றும் இடம்பெற்றுள்ளது.
இதன்போது இலங்கையின் தற்போதைய அரசியல் பொருளாதார நிலைமைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு தென்கொரியா...
நுவரெலியா மாவட்டத்தில் உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் விபரங்களை உடனடியாக திரட்டுமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பணிப்புரை
Thinappuyal -
நுவரெலியா மாவட்டத்தில் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு வெளிமாவட்ட மாணவர்களுக்கு இறுதி நேரங்களில் அனுமதி வழங்கப்பட்டிருப்பது தொடர்பாக நுவரெலியா கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளில் கல்விப் பொதுத் தராதர உயர்தர வகுப்புகள் காணப்படும் பாடசாலைகளில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் விபரங்களை உடனடியாகத் திரட்டுமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தனக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக நுவரெலியா வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.ஜி.பியதாஸ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில் வெளிமாவட்ட மாணவர்களுக்கு இறுதி...
இதற்கமைய குறித்த உணவகம் காலவரையின்றி மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இராணுவத்தினரால் நடாத்தப்படும் வர்த்தக நிலையங்கள், சிகை அலங்கார நிலையங்கள் மற்றும் உணவகங்கள் என்பன இராணுவ முகம்களை அன்மித்த பொது இடங்களில் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது
.
சக்ராம் அமிரி, மிக இளவயதில் விஞ்ஞானியாகியும் தேசத்துரோகத்திற்காக தூக்கிலிடப்பட்ட ஒரு சோக மனிதன் ஆவார்.
ஈரானில் பிறந்து வளர்ந்த குர்திஸ் இன இளைஞன் சக்ராம் அமிரி. இவர் மிக இளவயதிலேயே அணு பாவனை தொடர்பான ஈரானின் உயர்சபையில் அங்கத்தவரானார்.
விஞ்ஞானியான இவர், ஈரானின் பாதுகாப்பின் உச்சத்தகவல்களை அறிந்த இவர் சவுதி மதீனா யாத்திரைக்குச் சென்றிருந்த போது காணமல் போனார்.
சக்ராம் அமிரி அமெரிக்காவின் தந்திர வலைக்குள் வீழ்ந்த போது அவருடைய வயது 30...
நெற்றி வியர்வை சிந்தி நாட்டின் தேசிய பொருளாதாரத்தை வலுவடையச் செய்யும் விவசாயிகளுக்காக அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட வேண்டிய சகல பொறுப்புக்களையும் நிறைவேற்றுவதற்கு அரச கொள்கைக்கு அமைய தான் கட்டுப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.
இன்று (11) முற்பகல் எம்பிலிப்பிட்டி புத்தி மண்டபத்தில் நடைபெற்ற மகாவலி மகா விவசாயி, சிறந்த மகாவலி விவசாய அமைப்புக்கான பரிசுகள் மற்றும் விருதுகளை வழங்கும் வைபவத்தில் உரையாற்றியபோதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இதனைத் தெரிவித்தார்.
வறுமை...
தலவாக்கலை நகரில் அட்டன் நுவரெலியா பிரதான வீதியின் ஓரங்களில் அமைக்கப்பட்ட வடிகான்கள் பல மூடியிடப்படாமலும் ஆங்காங்கே சில மூடிகள் உடைந்தும் காணப்படுவதால் பல்வேறு அசௌகரியங்களை அனுபவித்து வருவதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். மேலும் தலவாக்கலை நகரிலிருந்து தலவாக்கலை நகரசபை வரையிலான பிரதான வீதியில் இருமருங்கிலும் காணப்படுகின்ற வடிகான்களே இவ்வாறு உடைந்த நிலையிலும் மூடப்படாமலும் காணப்படுகின்றன. 100க்கு மேற்பட்ட குழிகள் ஆங்காங்கே மூடப்படாமல் காணப்படுகின்றன. இதன் மேல் காணப்பட்ட...
வடக்கு சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் அவர்களின் கோரிக்கைக்கிணங்க கடந்த 16.05.2016 அன்று தொடக்கம் வடக்குக்கு விஜயம் செய்த ஒஸ்ரியா மற்றும் நெதர்லாந்து நாட்டு பிரதிநிதிகள் வடக்கின் ஜந்து மாவட்டங்களிலும் உள்ள வைத்தியசாலைகளை பார்வையிட்டு விரைவில் அவற்றின் அபிவிருத்திக்கு உதவுவதாக உறுதியளித்து சென்றிருந்தனர்.
அதன் தொடர்ச்சியாக கடந்த 03.08.2016 மீண்டும் வடக்கிற்கு வருகை தந்த குறித்த ஒஸ்ரியா மற்றும் நெதர்லாந்து நாட்டு பிரதிநிதிகள் ஏற்கனவே உறுதியளித்ததற்கமைவாக மாகாணத்தில் சில வைத்தியசாலைகளுக்கு விஜயம்...