மாடு வளர்ப்பு (பட்டி) கொட்டகைக்குள் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்ந்துகொண்டிருந்த 6 பேரை பொகவந்தலாவ பொலிஸார் கைது செய்துள்ளனர். பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரிட்வெல் செல்வகந்த தோட்டத்தில் 12.08.2016 வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவிலேயே இவர்களைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். கொசல்கமுவ ஒயா ஆற்றுப்பகுதியிலுள்ள செல்வகந்த தோட்டத்தில் மாடு வளர்ப்பு பட்டிக்குள் மாடு வளர்ப்பு பணியில் ஈடுபடுவதுபோல் இரகசியமாக மாணிக்கக்கல் அகழ்வு வேலையில் ஈடுபடுவதாக பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த இடத்தைச்...
ஈழம் தமிழ் நாடக மரபுக்கு நீண்டதோர் செழுமையான பாரம்பரியம் உண்டு, பல்லாயிரக்கணக்கான நாடகர்களின்  பங்களிப்பினாலேயே இம்மரபு  உருவானது.வரலாறு சிலரைப் பதிவு செய்து வைத்துள்ளது.சிலரைப் பதிவு செய்யவில்லை.அப்படிப் பதிவு செய்யக் கூடியவர்களுள் முக்கியமான ஒருவர் நண்பர் பாலதாஸ். 70 வயது தாண்டியுள்ள அவர் செயற்பாடுகள் பற்றிவரும் இம்மலர் இக்குறையைப்போக்கும் விதத்தில் அமையும் என எதிர் பார்க்கிறேன் ஈழத்துத் தமிழ் நாடக மரபு  மரபுவழி நாடகம்,நவீன நாடகம் என இருகிளைப்பட்டு வளர்ந்து வந்துள்ளது. இவ்விரு...
இலங்கையின் 25 வீதமானவர்கள் போசாக்கியின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது. மோசமான காலநிலை காரணமாக இவ்வாறு இலங்கையில் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. மழை வெள்ளம், வரட்சி உள்ளிட்ட இயற்கை அனர்த்தங்களினாலும் இவ்வாறு உணவு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இலங்கையின் சுமார் 33 வீதமான சனத்தொகையினர் போசாக்கான உணவு வேளைக்காக செலவிட முடியாத வறுமையில் வாடுவதாக சுட்டிக்காட்டியுள்ளது. உரிய வாழ்வாதார திட்டங்கள் இல்லாத காரணத்தினால் இவ்வாறு மக்கள் உணவுத் தட்டுப்பாட்டை எதிர்நோக்கி வருவதாகத்...
  நாட்டுக்கு தாக்குதல் விமானங்கள் அவசியமானவை என அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார். இலங்கை விமானப்படை எட்டு தாக்குதல் விமானங்களையும் ஆயுதங்களையும் கொள்வனவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் சரியான தீர்மானமேயாகும் என அவர் இன்றைய தினம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். குறைந்தபட்சம் எட்டு தாக்குதல் விமானங்கள் தேவைப்படுவதாக விமானப்படையினர் கோரியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்த விமானங்கள் அவசியமற்றவை என சிலர் கருதக் கூடும் என்ற...
ஜனநாயகத்தைத் தழைக்கச் செய்வதற்காக உருவாக்கப்பட்ட நல்லாட்சி அரசாங்கம் கொண்டு வரவுள்ள புதிய அரசியலமைப்பு நாட்டின் அரசியல் போக்கைப் புதிய பாதையில் கொண்டு செல்ல உதவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நடைமுறையில் உள்ள ஜனாதிபதி ஆட்சி முறையை மாற்றியமைப்பது, புதிய தேர்தல் முறையைக் கொண்டு வருவது, நாடு எதிர்நோக்கியுள்ள எரியும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது என்ற மூன்று விடயங்களை உள்ளடக்கியதாக புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு அந்நியரிடமிருந்து சுதந்திரமடைந்ததில்...
தாய்லாந்தில் தொடர் குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. தாய்லாந்தின் சுற்றுலா நகரங்களில் இவ்வாறு தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவங்களில் குறைந்தபட்சம் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர். தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தாய்லாந்து மக்கள் நீண்ட விடுமுறை கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்த போது இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.
காணாமல் போனோர் அலுவலகம் குறித்த சட்டம் நிறைவேற்றப்பட்டதாக ஏற்றுக்கொள்ள முடியாது என கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். பாராளுமன்ற வளாகத்தில் நேற்றைய தினம் மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நிலையியற் கட்டளையின் அடிப்படையில் சட்டத்தை உரிய முறையில் நிறைவேற்றவதற்கு சபாநாயகர் தவறிவிட்டதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். இதனால் குறித்த சட்டம் நிறைவேற்றப்பட்டதாக ஏற்றுக்கொள்ள முடியாது எனஅவர் குறிப்பிட்டுள்ளார். பெரும் எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் அவையில் பிரசன்னமாகியிருக்காத வேளையில் எவ்வாறு சட்டம்...
  நீதியான, போர்க்குற்ற விசாரணையை உறுதி செய்யாது வெறும் பொருளாதார நன்மைகளை எமது மக்களுக்கு அளிப்பது அவர்களை விலைக்கு வாங்குவதாக அமையும். என வடமாகாண சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். வேலணை பகுதியில் முன்னாள் ஜனாதிபதியும் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் , நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் தலைவியுமான கௌரவ சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்க அம்மையார் அவர்களின் தலைமையின் கீழ் மழை நீர் சேகரிக்கும் நீர்த் தாங்கிகளை பொது மக்களிடம் கையளிப்புச் செய்யும் நிகழ்வு நடைபெற்றது. அந்நிகழ்வில் கலந்து கொண்டு...
காணாமல் போனோர் அலுவலகம் குறித்த சட்டத்திற்கு ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரதன தேரர் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். காணாமல் போனோர் அலுவலகம் குறித்த சட்டம் நேற்றைய தினம் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்டம் நிறைவேற்றப்பட்ட விதம் ஏமாற்றமளிக்கும் வகையில் அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். திருத்தங்கள் செய்யாது சட்டம் அமுல்படுத்தப்பட்டு உள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஒரு சில திருத்தங்கள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டதாகவும் அந்த திருத்தங்கள் போதுமானதல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான விடயங்களை மேற்கொள்ள மக்கள்...
வடக்கை இராணுவ கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கான முயற்சியா இது? யாழ்ப்பாணத்தை வழியாகப் பயன்படுத்தி இந்தியர்கள் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் இணைந்து கொள்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் இணைந்து கொள்ள இந்தியர்கள் யாழ்ப்பாணத்தை ஓர் வழியாக பயன்படுத்திக் கொள்கின்றனர் என தெரிவிக்;கப்பட்டுள்ளது. பொதுவாக பங்களாதேஸ் அல்லது டுபாய் வழியாகவே இதுவரை காலமும் இந்தியர்கள் ஆப்கானிஸ்தானுக்கு சென்று தீவிரவாத இயக்கத்தில் இணைந்து கொண்டனர். எனினும், இந்தப் பாதைகள் கடுமையாக கண்காணிக்கப்பட்டு வருவதனால் யாழ்ப்பாணத்தை தெரிவு...