மன்னார் – பள்ளிமுனை கடற்பரப்பில் தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட பள்ளிமுனை கிராமத்தைச் சேர்ந்த 3 மீனவர்களை இன்று (வியாழக்கிழமை) காலை கைது செய்த கடற்படையினர், குறித்த மீனவர்களை மன்னார் மாவட்ட கடற்தொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் கையளித்துள்ளனர்.
இந்த 3 மீனவர்கள் தடை செய்யப்பட்ட தங்கூசி வலைத்தொகுதிகள் ஐந்தைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட போதே கடற்படையினர் குறித்த மீனவர்களை கைது செய்துள்ளனர்.
கைது...
அரணாயக்க திவிநெகும திணைக்களத்திற்கு சொந்தமான கட்டடத்தின் கூரையில் ஏறி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட ஐவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மண்சரிவு அபாயம் உள்ள வலயமாக பெயரிடப்பட்டுள்ள இடங்களில் மக்களை மீள குடியேற்ற மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானத்திற்கு எதிர்ப்பு வெளியிட்டு அண்மையில் அரநாயக்க பிரதேச செயலக அலுவலகத்தின் முன் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது, அப்பகுதியில் இருந்த திவிநெகும திணைக்களத்தின் கட்டடத்தின் கூரையின் மேல் ஏறி குறித்த ஐவரும் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறியே,...
சி.எஸ்.என் தொலைக்காட்சி அலைவரிசையில் சட்டவிரோதமாக முதலிடப்பட்ட ரூபா 157.5 மில்லியன் பணம்அரசுடைமையாக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
நேற்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டின்போது, அமைச்சரவை பேச்சாளரும் சுகாதாரம் மற்றும் சுதேச மருத்துவத்துறை அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
இது குறித்து, பொலிஸ் நிதி மோசடி பிரிவினர் நேற்றைய தினம் கடுவெல நீதவான் நீதிமன்றில் விடுத்த கோரிக்கையை அடுத்து, நீதிமன்றம் அதற்கு அனுமதி வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை, முன்னாள்...
தாய்லாந்தைச் சேர்ந்த முன்னணி சிமெந்து உற்பத்தி நிறுவனம் இலங்கையில் முதலிட தனது விருப்பத்தை தெரிவித்துள்ளது.
சியாம் சிற்றி என அழைக்கப்படும் இந்த நிறுவனத்தின் உயர் மட்ட பிரதிநிதிகள் குழு ஒன்று நேற்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளது. இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள பிரதிநிதிகள் குழு இலங்கை தற்போது பொருளாதாரத்தில் முன்னேற்றமடைந்து வருவதாகவும் முதலீடுகளை மேற்ககொள்வதற்கு சிறந்த நாடெனவும் எதிர்காலத்தில் இலங்கையில் மேலும் பல முதலீடுகளை மேற்கொள்ள...
நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக சபை நடவடிக்கைகளை ஒத்திவைத்த சபாநாயகர் கரு ஜயசூரிய, கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு கூடிய நாடாளுமன்ற அமர்வில், காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் அமைப்பதற்கான சட்டமூலம் குறித்து விவாதிக்கப்படவிருந்தது.
குறித்த சட்டமூலத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் கை மற்றும் கழுத்தில் கறுப்புப் பட்டிகளை அணிந்துவந்த ஒன்றிணைந்த எதிரணியினர், நாடாளுமன்றில் குழப்ப நிலையை...
யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் மேற்கொண்ட முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா, யாழ்.மாவட்ட செயலகத்தில் முதன்முறையாக அமைக்கப்பட்டுள்ள இவ் ஒன்றிணைந்த சேவைகள் மையத்திற்கான அலுவலகத்தை திறந்துவைத்தார்.
இந் நிகழ்வில், வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
கழுவிய மற்றும் கழுவப்படாத, பெண்களின் உள்ளாடைகளை திருடினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஒருவரை கைதுசெய்துள்ள பொலிஸார், பெண்களின் உள்ளாடைகள் அடங்கிய இரண்டு மூடைகளையும் கைப்பற்றியுள்ளனர்.
பண்டாரவளை பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவரே, முல்லேரியா பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். வயரிங் செய்பவர் போல தன்னை அறிமுகப்படுத்திகொண்ட அவர், சுமார் 14 வீடுகளில் இவ்வாறு உள்ளாடைகளை களவெடுத்துள்ளார்.
சண்டேலீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, இராணுவ புலனாய்வுப் பிரிவு அதிகாரி உள்ளிட்ட 63 புலனாய்வு அதிகாரிகளின் வங்கிக் கணக்குகளை பரிசோதிக்க பொலிஸாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இன்று குறித்த வழக்கு கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்ப ட்டபோது, இந்தக் கொலை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் இரகசியப் பொலிஸார் விடுத்த கோரிக்கையை கருத்தில் கொண்ட நீதவான் சுலோச்சனா வீரசிங்க இந்த...
ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவில் முன்வைக்கப்பட்ட யோசனையை எதிர்கொள்ளும் இயலுமை இல்லாத காரணத்தினால் முன்னாள் ஜனாதிபதி தேர்தலை நடத்தியதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நாடு 9 ஆயிரத்து 500 லட்சம் கோடி ரூபா கடனில் மூழ்கியுள்ளது எனவும் இந்த கடன் பொறியில் இருந்து தப்பிப்பதற்காவும் முன்னாள் ஜனாதிபதி பதவிக்காலம் முடிய இரண்டு வருடங்கள் எஞ்சியிருக்கும் நிலையில் தேர்தலை நடத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற...
வெளிநாட்டு விஜயங்கள் பற்றிய முக்கிய ஆவணங்களை காணவில்லை என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சில் காணப்பட்ட பல முக்கிய ஆவணங்கள் காணாமல் போயுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் மேற்கொண்ட வெளிநாட்டு விஜயங்கள் பற்றிய விபரங்கள் அடங்கிய ஆவணங்களே காணாமல் போயுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அரசாங்க உத்தியோகத்தர்கள் மற்றும் அமைச்சர்களின் வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
உதாரணமாக, 2006ஆம்...