யாழ் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 20 ஆம் திகதி யாழ்ப்பாண முஸ்லிம் மக்களின் மீள் குடியேற்றத்திற்கான விசேட நடமாடும் சேவை யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரியில் இடம்பெறப் போவதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் யாழ்ப்பாணம், சாவகச்சேரி மற்றும் வேலணை ஆகிய பிரதேச செயலக பிரிவுகளை உள்ளடக்கியதாக இவ் விசேட நடமாடும் சேவை இடம்பெறும் என யாழ் மாவட்ட பிரதேச செயலர் தெரிவித்தார். எனவே இதனை ஒரு நல்ல சந்தர்ப்பமாக யாழ் முஸ்லிம்கள் பயன்படுத்திக்கொள்ள...
  அநுராதபுர யுகத்தின் சத்தாதிஸ்ஸ மன்னனின் மகன் லஞ்சதீச மன்னனால் 1500 வருடங்களுக்கு முன்னர் புதைக்கப்பட்ட செங்கல் பெட்டகம், புராதன பொருட்கள் அம்பாறை, ரஜகல தென்னவில் தோண்டியெடுப்பு அம்­பாறை, புரா­தன ரஜ­க­ல­தென்ன பகு­தியில் மேற்­கொள்­ளப்­பட்ட அகழ்­வா­ராய்ச்­சியின் போது சுமார் 1500 வரு­டங்கள் பழைமை வாய்ந்­த­தாக கரு­தப்­படும் சங்கு உட்­பட பல புரா­தன பொருட்கள்  கண்­டெ­டுக்­கப்­பட்­டுள்­ளன.     இதன்­போது சங்கு, கல்­வெட்டு ஒன்றின் பகுதி, வழி­காட்டல் குறி என்­பன கண்­டெ­டுக்­கப்­பட்­ட­தாக ஜய­வர்­த­ன­புர பல்­க­லைக்­க­ழ­கத்தின் வர­லாறு மற்றும்...
இந்திய மற்றும் மேற்கிந்தியத்தீவு அணிகளுக்கிடையிலான 3 வது ரெஸ்ட் போட்டி மேற்கிந்தியத்தீவில் நடைபெற்று வருகிறது ஆட்டத்தின் இரண்டாம் நாளாகிய நேற்று இந்திய அணி  சகல இலக்குகளையும் இழந்து 353 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிவரும் மேற்கிந்தியத்தீவுகள் 107 ஓட்டங்களுக்கு ஒரு இலக்கை இழந்திருந்தது. மேற்கிந்தியத்தீவு அணி சார்பாக டரன் பிராவோ 18 ஓட்டங்களையும் பிரத் வெயிட்  53 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளனர் முன்னதாக இந்திய அணி சார்பாக அஷ்வின் , சகா சதம்...
யாழ் குடாநாட்டு கடற்பகுதியில் அதிகரித்து வரும் றோலர் படகுகளால் சாதாரண மீனவர்கள் பாதிக்கப்படுவதாக கவலை வெளியிட்டுள்ள மீனவர்கள்  இது தொடர்பாக  மேலும் தெரிவிக்கையில் சமீப காலமாக யாழ்ப்பாண கடற்பகுதியில் குறிப்பாக குருநகர் இறங்குதுறைப் பகுதியில் அதிகமான றோலர் படகுகள் மீன் பிடியில் ஈடுபடுவதால் சாதாரண மீனவ குடும்பங்கள் பாதிப்பிற்குள்ளாவதாக மீனவர்கள்   கவலை வெளியிட்டுள்ளனர். யாழ் குருநகர் இறங்குதுறைப் பகுதியில் அதிகளவிலான றோலர் படகுகள் மூலம் மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபடுவதன் காரணத்தால்...
இலங்கையில், கடந்த மூன்று ஆண்டுகளுக்குள் சிறை தண்டனை வழங்கப்பட்டிருந்த 187 சிறைக் கைதிகளுக்கு ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இன்று நாடாளுமன்றம் கூடிய போது, கூட்டு எதிர்கட்சியின் உறுப்பினர் ஜயந்த சமரவிர எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதில் வழங்கிய அமைச்சர் கயந்த கருணாதிலக இதனை தெரிவித்தார். சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ள  கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குவது சம்பந்தமாக ஆராய்ந்து பரிந்துரைகளை முன்வைப்பதற்கு நீதி அமைச்சரினால் ஓய்வுபெற்ற உச்சமன்ற நீதிபதிகள் இருவரின் தலைமையில் விசேட...
யாழ் பூம்புகார் பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்களில் அதிக விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர் இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, யாழ்ப்பாணம் பூம்புகார் பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்களில் விற்பனை செய்யப்படும் அத்தியாவசிய பொருட்கள் உட்பட ஏனைய பொருட்களும் அதிக விலைக்கு விற்கப்படுவதாக அப்பிரதேச மக்கள் தெரிவித்தனர். பொருட்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதால் அங்கு வாழும் ஏழை மக்கள் அன்றாடத் தேவைக்குரிய அத்தியாவசியப் பொருட்களைக்கூட கொள்வனவு செய்ய முடியாதநிலையில்...
காணாமல் போனோர் அலுவலகம் குறித்த சட்ட மூலம் இன்றைய தினம் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது. சில திருத்தங்களுடன் இந்த சட்டம் இன்றைய தினம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்டமானது இராணுவத்திற்கு துரோகம் இழைக்கும் வகையில் அமைந்து விடும் என கூட்டு எதிர்க்கட்சியினர் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர். காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு காணாமல் போனவர்கள் பற்றிய உண்மையான விபரங்களை அளிக்க வேண்டியது அவசியமானது என அரசாங்கம் தெரிவித்துள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் காணாமல் போனோர் அலுவலகம் குறித்த சட்டம்...
அநுராதபுரம் சிறைச்சாலையில் வைத்து சந்தேகத்திற்குரிய ஊசி ஏற்றப்பட்டதால் மனநிலை பாதிக்கப்பட்ட இராசையா ஆனந்தராசா என்ற தமிழ் அரசியல் கைதி மன வைத்திய பரிசோதனகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்து செல்ல ப்பட்டுள்ளார். குறித்த கைதியை உடனடியாக வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்துமாறு தாம் விடுத்த வேண்டுகோளை அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் ஏற்றுக்கொண்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலாநாதன் தெரிவித்தார். இராசையா ஆனந்தராசா என்ற தமிழ் அரசியல் கைதி மனநிலை...
வட மாகாணம் கஞ்சா விற்பனையின் மத்திய நிலையமாக மாறியிருப்பது மிகவும் வெறுப்பையும் வேதனையையும் தருவதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கில் களவு, கொலை, பாலியல் துஸ்பிரயோகம், சிறுவர் துஸ்பிரயோகம் போன்ற செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்ட முதலமைச்சர், போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மக்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். மாகாண மட்டத்திலான பொலிஸ், பொது மக்கள் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் யாழ்ப்பாணத்திலுள்ள முதலமைச்சர் அலுவலக மாநாட்டு மண்டபத்தில் இன்று வியாழக்கிழமை...
யாழ் நல்லூர் கந்தனின் மகோற்சவம் ஆரம்பமாகியுள்ள நிலையில் ஆலயச் சுழலில் பெரும்பாலான கடைகளில் பிளாஸ்டிக்கிலாலான  அர்ச்சனை தட்டுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதை அவதானிக்ககூடியதாக இருக்கின்றது. நல்லூர் மகோற்சவம் அரம்பிப்பதற்கு முன்னரே யாழ் மாநகரசபை ஆணையாளர்  பிளாஸ்டிக் அர்ச்சனை தட்டுகளை விற்பனை செய்ய வேண்டாம் எனவும் அதற்குப் பதிலாக பனை ஓலையால் பின்னப்பட்ட அர்ச்சனை தட்டுகளை பாவிக்குமாறு கேட்டுகொள்ளபட்டமை குறிப்பிடத்தக்கது. பனை அபிவிருத்தி சபையிடம் குறைந்த விலையில் பனை ஓலையால் தயாரிக்கப்பட்ட  அர்ச்சனை தட்டுகளை...