பொருளாதார மத்திய மையம் தொடர்பாக முதியவரின் சாகும் வரையிலான உண்ணாவிரதத்தின் இரண்டாம் நாள்!
Thinappuyal -0
பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைக்குமாறு தா.மகேஸ்வரன் (வயது 73) மேற்கொண்டு வரும் உண்ணாவிரதப் போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கின்றது.
2016 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் வவுனியா மாவட்டத்திற்கு பொருளாதார மத்திய நிலையம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டிருந்து.
எனினும், இத்தெரிவு தொடர்பாக இடம்பெற்ற இழுபறிக்கு பின்னர் மாங்குளம், மதவுவைத்தகுளம் ஆகிய பகுதிகளில் பொருளாதார மத்திய நிலையத்தை இரண்டாக அமைக்க உத்தேசித்துள்ளனர்.
ஆனால், பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைக்க...
வித்தியாவின் கற்பழிப்பு, கொலை ஆகியவற்றின் பின்னர் மாகாண, மாவட்ட, பிரதேச மட்டத்திலான பொலிஸ் பொது மக்கள் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களை ஆரம்பிப்பது தொடர்பில் ஒரு வருடத்திற்கு முன்னரே நாங்கள் நடவடிக்கைகள் எடுத்திருந்தோம்.
எதிர்பாராத அல்லது தவிர்க்க முடியாத காரணங்களால் அவற்றின் தொடர் நடவடிக்கைகள் தடைப்பட்டன. உதாரணத்திற்கு சிரேஷ்ட உப பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்க அவர்கள் தமது முழு ஒத்துழைப்பையும் நல்கிக் கொண்டிருக்கும் போது அவர் மாற்றலுக்கு உள்ளாக்கப்பட்டார்.
இவ்வருடத்தில் ஆரம்பிக்கப்பட்ட...
கடந்த இரண்டு வருடங்களில் மட்டும் 45000 ஐஎஸ் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க தலைமையிலான கூட்டுப்படை தெரிவித்துள்ளது.
சிரியா, ஈராக்கின் பகுதிகளை கைப்பற்றி தங்களுக்கென்று தனி தேசத்தை உருவாக்கி கொண்டுள்ள ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பல்வேறு கொடூரங்களை அரங்கேற்றி வருகிறது.
இவர்களுக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படையினர் தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர்.
இதில் கடந்த இரண்டு வருடங்களில் மட்டும் 45000 ஐஎஸ் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க கூட்டுப்படை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க...
ஜேர்மனி நாட்டில் பொது இடங்களில் இஸ்லாமிய பெண்கள் புர்கா அணிய நிரந்தர தடை விதிக்கும் வகையில் புதிய சட்ட மசோதாவை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.
ஜேர்மனியில் அதிகரித்து வரும் தீவிரவாத அச்சுறுத்தலை தொடர்ந்து அதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு கட்டமாக, ஆளும் கட்சியான கிறித்துவ ஜனநாயக கட்சி இன்று நாடாளுமன்றத்தில் புதிய சட்ட மசோதா ஒன்றை தாக்கல் செய்கிறது.
‘பொது இடங்களில் இஸ்லாமிய...
சுவிஸ் நாட்டில் மது போதையுடன் வாகனம் ஓட்டுபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
சுவிஸ் வாகனம் ஓட்டிகளில் 17 சதவிகிதம் பேர் மது போதையில் மட்டுமே வாகனம் ஓட்டுவதாக ஒப்புக்கொண்டுள்ளனர்.
ஐரோப்பா முழுவதும் எடுக்கப்பட்ட இந்த ஆய்வில் சுவிஸ் மூன்றாவது இடத்தில் உள்ளது. 22 சதவிகிதத்துடன் பிரான்ஸ் முதலிடத்திலும் 18 சதவிகிதத்துடன் பெல்ஜியம் இரண்டாவது இடத்திலும் உள்ளது.
ஐரோப்பாவின் 17 நாடுகளில் குறிப்பாக தனியார் நிறுவனம் ஒன்று இந்த ஆய்வினை...
ஜேர்மனியில் ஏற்படும் தொடர் தாக்குதல்களை தடுக்க புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ள போவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான், சிரியா மற்றும் ஈராக் உட்பட பல்வேறு நாடுகளிலிருந்து வெளியேறும் மக்கள் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளில் தஞ்சமடைகின்றனர். இவர்களில் பெரும்பாலான மக்களுக்கு ஜேர்மன் அடைக்கலம் வழங்கியுள்ளது.
இந்நிலையில் சமீபகாலமாக அங்கு தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன.
எனவே பயங்கரவாத குற்றசாட்டுகளுக்கு உள்ளாகும் அகதிகளை விரைவில் நாட்டை விட்டு வெளியேற்ற அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பிரான்சுக்கு சுற்றுலா வந்த எட்டு வயது சிறுமி கொடூரமாக பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெற்கு பிரான்சின் Ardeche பகுதியிலே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அப்பகுதியின் Saint-Alban-Auriolles பகுதி பெருமளவான வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளை கவரும் இடமாகும்.
இங்கு வருடத்துக்கு 2,70,000 வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் வருகை தருகின்றனர்.
டச்சு நாட்டைச் சேர்ந்த 8 வயது சிறுமி தனது பெற்றொருடன் Saint-Alban-Auriolles பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ளார். இரவு வேளையில் சிறுமிக்கு தனி கூடாரம்...
அறிவுத்திறன் தேர்வில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் போன்ற உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகளை இந்திய சிறுவன் ஒருவர் மிஞ்சி பலரின் பாராட்டுகளை பெற்று வருகிறான்.
லண்டனில் வசித்து வரும் துருவ் தலாடி எனும் 10 வயது சிறுவன் மென்சாவின் அறிவுத்திறன் தேர்வில் அதிகப்படியான மதிப்பெண்களை பெற்று சாதனை படைத்துள்ளான்.
2016 ஜூலையில் நடைபெற்ற மென்சாவின் Cattell III B Paper தேர்வில் 162 மதிப்பெண்கள் பெற்று தலாடி சாதனை படைத்துள்ளான்.
ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீபன் ஹாக்கிங்...
விக்ரம் தமிழ் சினிமாவில் எல்லோருக்கும் பிடித்த நடிகர். காலில் சக்கரம் கட்டித்தான் வேலைப்பார்த்து வருகிறார், தன் மகள் திருமணத்திற்கு.
இந்நிலையில் ஒரு வார இதழில் இவர் அளித்த பேட்டியில் ‘சாமி-2 இன்று எடுத்த முடிவு இல்லை, ஏற்கனவே முடிவு செய்த விஷயம் தான், தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளோம்.
மேலும், பாலாவும் நானும் அடிக்கடி பேசிக்கொள்வோம், சேது, பிதாமகன் போல் ஒரு கதை அமைந்தால் நாளைக்கே ஷுட்டிங் தான்’ என கூறியுள்ளார்.
இது மட்டுமின்றி...
இந்தியாவின் முதல் பெண் ஐபிஎஸ் கிரண்பேடி. இவர் அண்மையில் புதுவை மாநிலத்தின் துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்றார்.
அதன்பிறகு புதுவை தூய்மைக்காக கிரண்பேடி எடுத்து வரும் நடவடிக்கைகள் பொதுமக்களின் பாராட்டுக்களை பெற்றுள்ளது. மேலும் அவர், ரஜினியை புதுவை மாநில வளர்ச்சிக்கு நல்லெண்ணத் தூதராக நியமிக்க விரும்புவதாக தன் விருப்பத்தை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் லதா ரஜினிகாந்த், கிரண்பேடியை நேரில் சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பில் புதுவை மாநிலத்தின் நல்லெண்ண தூதராக ரஜினி பொறுப்பேற்பது குறித்து...