வவுனியா சிறுமி கங்காதரன் ஹரிஸ்ணவியின் பாலியல் துஸ்பிரயோகக் கொலை வழக்கின் சந்தேக நபராகிய பாலசிங்கம் ஜனார்த்தனனுக்கு வவுனியா மேல் நீதிமன்றம் புதனன்று அரச தரப்பு சட்டவாதியின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நிபந்தனையுடன் கூடிய பிணை வழங்கியுள்ளது. ஆறு மாதங்களாக இந்த சந்தேக நபர் எதுவித குற்றச்சாட்டுக்களுமின்றி விளக்கமறியலில் இருந்து வருவதாகத் தெரிவித்து அவரைப் பிணையில் செல்ல அனுமதிக்க வேண்டும் எனக் கோரி வவுனியா மேல் நீதிமன்றத்தில் அவர் சார்பில் பிணை...
  வீட்டு முற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்த 01 வருடமும் 6 மாதங்களுமான சிறுமி மதில் இடிந்து வீழ்ந்து மரணமானதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர். அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஸ்டெடன் தோட்டத்தைச் சேர்ந்த வை.லக்மிதா என்ற சிறுமியே இவ்வாறு மரணமானார். 10.08.2016 புதன்கிழமை மாலை 6.30 மணியளவில் தனது பெரிய தந்தையின் வீட்டு முற்றத்தில் அக்காவுடன் விளையாடிக் கொண்டிருந்த வேளையில் வீட்டு முற்றத்தில் அமைக்கப்பட்டிருந்த மதில் உடைந்ததால் 5 அடி பள்ளத்தில் வீழ்ந்த சிறுமி படுகாயமடைந்துள்ளார்....
யாழ்ப்பாணத்தில் கடந்த 7ஆம் திகதி உயிரிழந்த முன்னாள் போராளியின் பூதவுடலை பொறுப்பேற்க எவரும் இல்லாத நிலையில் கடந்த இரண்டு நாட்களாக யாழ் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் யாழ்ப்பாணம் – ஆனைக்கோட்டை – கோம்பயன் மணல் மயானத்தில் தகனம் செய்யப்பட்டுள்ளது. புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளியான கிளிநொச்சி – பூநகரி கருக்காய்தீவைச் சேர்ந்த 53 வயதான நடராஜா...
ஆடிய காலும்…. பாடிய வாயும் சும்மா இருக்காது என்பார்கள்.. அந்தவகையில் திருமணத்திற்கு பின்னர் சினிமாவில் நடிக்கமால் ஒதுங்கியிருந்த சினேகா மீண்டும் திரைக்கு வருகிறார். பிரசன்னாவை திருமணம் செய்த சினோவிற்கு ஆண் குழந்தை பிறந்து ஒரு வருடம் ஆகியுள்ள நிலையில், மீண்டும் நடிக்க முடிவு செய்துள்ளாராம். ஆனால் வெள்ளி திரையில் இல்லை.. சின்னத்திரையில்… தனியார் தொலைக்காட்சி நடத்தும் ரியாலிட்டி ஷோவில் நடுவராக சினேகா பங்கேற்கிறாராம். இந்த ரியாலிட்டி ஷோ விரைவில் சின்னத்திரையில் ஒளிபரப்பாகவுள்ளதாக கூறப்படுகிறது.
  ‘‘வாழ்க்கையில் பட்ட கஷ்டங்களை திரும்பிப் பார்ப்பது அவசியம். திருமண மண்டபங்களில் 1,000 ரூபாய்க்காக நான் பன்னீர் தெளிக்கும் வேலை பார்த்து இருக்கிறேன்’’ என்று நடிகை சமந்தா கூறினார். திருமணம் நடிகை சமந்தாவுக்கும், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுக்கும் திருமணம் முடிவாகி உள்ளது. இந்த வருடம் இறுதியில் இவர்கள் திருமணம் ஐதராபாத்தில் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது. திருமணத்துக்காக புதிய படங்களில் நடிப்பதை அவர் நிறுத்தி விட்டார். திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு அவர்...
விமானப்படைக்காக பல்நோக்கு போர் விமானங்கள் மற்றும் அதனோடு தொடர்புடைய ஆயுதங்களையும் கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இன்று புதன்கிழமை அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில்  அமைச்சரவை இணை பேச்சாளரும், ஊடகத்துறை அமைச்சருமான கயந்த கருணாதிலக இந்த விடயத்தை தெரிவித்தார். இலங்கையின் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில் ஓர் அரசிடமிருந்து பிறிதொரு அரசுக்கு பொருள் கொள்வனவு செய்யும் அடிப்படையின் கீழ், இந்த விமானக்கொள்வனவு இடம்பெறவுள்ளதாகவும் அவர்...
புனர்வாழ்வு முகாம்களில்  தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்பட்டதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்களை அரசாங்கத்தின் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஜானக்க ரத்நாயக்க நிராகரித்துள்ளார். இறுதிக்கட்ட போரின் போது கைதுசெய்யப்பட்ட மற்றும் சரணடைந்த முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வு முகாம்களில் விச ஊசி ஏற்ற வேண்டிய அவசியம் தமக்கு இருக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ள அவர் இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கவலை அடைவதாகவும் தெரிவித்திருக்கின்றார். பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க பொறிமுறைகள்...
தென் மாகாண சபையில் அங்கம் வகிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 33 உறுப்பினர்களில் 27 பேரும் ஜனநாயகக் கட்சியின் ஒரு உறுப்பினரும் கூட்டு எதிர்க்கட்சிக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக மாகாண சபை உறுப்பினர் சமிலி விதானாச்சி தெரிவித்துள்ளார். இதன் காரணமாக தென் மாகாண சபையில் பெரும்பான்மை பலத்தை இழந்துள்ளதாகவும், முதலமைச்சர் ஷான் விஜேலால் டி சில்வா தொடர்ந்தும் முதலமைச்சராக பதவி வகிக்க முடியாத நிலைமையும் ஏற்பட்டுள்ளது. முதலமைச்சர் தனது பதவியை...
காணாமற் போனோர் அலுவலகம் தொடர்பான சட்டமூலத்துக்கு ஆதரவளிப்போர் தேசத் துரோகிகளாகவே கருதப்படுவர் என மெதகொடஅயதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார். குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்படுவதற்கு  ஆதரவளிக்கக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமைக்கப்படவுள்ள குறித்த அலுவலகமானது வேறு ஒரு தரப்பினரால் நிர்வகிக்கப்படவுள்ளதோடு,இதன்மூலம் நடைபெறும் செயற்பாடுகளுக்கு எதிராக உயர்நீதிமன்றத்துக்கு கூட செல்லமுடியாது எனவும் தேரர் தெரிவித்துள்ளார். எனவே எமது நாட்டு சோற்றினை உண்டு, பால் குடித்தவர்கள் எவராவது குறித்தசட்டமூலத்திற்கு கையை உயர்த்துவோர்களானால் அவர்கள் தேசத்துரோகிகள் என்றும் தேரர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை...
இலங்கையில் ஆண்கள் மத்தியில் வாய்ப் புற்றுநோய் அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சகம் வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. மார்பாக புற்று நோய் பெண்கள் மத்தியில் கூடுதலாக காணப்படுவது போல் வாய்ப்புற்று நோய் ஆண்கள் மத்தியில் கூடுதலாக காணப்படுவதாக அறிக்கை கூறுகிறது. ஆண்டு தோறும் 2500 வாய்ப்புற்று நோயாளர்கள் அடையாளம் காணப்படுவதாகவும் இந் நோயாளர்களில் 78 சத வீதமானோர் ஆண்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது. புற்று நோயாளர்களின் மரண எண்ணிக்கையில் கூடுதலான மரணங்கள் வாய்ப் புற்று நோய்...