கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மின் கட்டணம் மாதமொன்றுக்கு 28 மில்லியன் ரூபா என வைத்தியசாலையின் பணிப்பாளர் நாயகம் அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார். எகோ பவர் லங்கா பொறியியற்துறை நிறுவனம் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு சூரிய சக்தியினால் மின்சாரம் உற்பத்தி செய்யும் கருவியொன்றை அன்பளிப்புச் செய்துள்ளது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார். தற்பொழுது ஒரு கட்டடத்தில் மாத்திரம் பொருத்தப்பட்டுள்ள சூரிய மின் உற்பத்தி இயந்திரம், வைத்தியசாலையின் சகல...
போர் குற்ற விசாரணைகளை மேற்கொள்வதற்கு சர்வதேச நீதிபதிகள் அழைக்கப்படுவார்களா எனபது குறித்து தெளிவுபடுத்தும்படி அரசாங்கத்துக்கு உத்தரவு பிறப்பிக்க முடியாதென்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தேசப்பற்றுள்ள தேசிய அமைப்பின் தலைவர் குணதாச அமரசேகர தாக்கல் செய்த மனுவொன்றை தள்ளுப்படி செய்த பின்னர் தலைமை நிதிபதி ஸ்ரீபவன் இதனை அறிவித்தார். போர் குற்ற விசாரணைகளை மேற்கொள்வதற்கு சர்வதேச நீதிபதிகளை அழைக்க அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். அரசாங்கம்...
முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நீதியான விசாரணைகளை நடாத்த தயார் என அரசாங்கம் அறிவித்துள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்ட  அமைச்சரவைப் பேச்சாளரான சுகாதாரத்துறை அமைச்சர் ராஜித்த சேனாரத்னவிடம் முன்னாள் போராளிகளின் மர்ம மரணம் தொடர்பில் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து கேட்டபோது அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார். இது தொடர்பில் அவர்  தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்.வட மாகாண  அமைச்சர்களுடன் தான் நடாத்திய சந்திப்பின்...
யாழ். வடலியடைப்பு பிள்ளையார் கோவில் வீதியில் பிறந்து 10 நாட்களேயான ஆண் சிசுவை பெட்டிக்குள் வைத்துவிட்டுச் சென்றதாகக் கூறப்படும்  தாயை இன்று புதன்கிழமை கைதுசெய்துள்ளதாக இளவாலைப் பொலிஸார் தெரிவித்தனர். அளவெட்டியைச் சேர்ந்த 36 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயே கைதுசெய்யப்பட்டவராவார் குறித்த பெண் வடலியடைப்பு பகுதியை சேர்ந்த திருமணமாகாத இளைஞருடன் பேணி வந்த தகாத உறவினால் குறித்த சிசு பிறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் ஏழ்மை காரணமாக குறித்த சிசுவை வடலிடையப்பிலுள்ள குறித்த இளைஞரின்...
திருகோணமலை-வடக்கு கல்வி வலயத்துக்குட்பட்ட ரொட்டவெவ பிரதேசத்திலுள்ள பிரபல முஸ்லிம் பாடசாலை ஒன்றில் 11ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவியை, பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் ஆசிரியரொருவரை New;W பிற்பகல் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  கிண்ணியா-ரொட்டவெவ பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான, டி.சபீர்கான் (வயது 33) என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக பொலிஸ் அவசர அழைப்புக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைய, விசாரணைகளை...
கனகாம்பிகை புத்தகோவில் விவகாரம் பௌத்த மதத்திற்கு முரணானது என பாலியகொட  கங்காராம பௌத்த விகாரையின்    மதகுரு விமலகனா  தேரர் தெரிவித்தார் இன்றைய  தினம் செவ்வாய் கிழமை 09.08.2016 கிளிநொச்சி பொன்னகர் பகுதிக்கு கம்போடியா பௌத்த மதகுரு லெச் சொனான்   சகிதம்  வருகைதந்த  பாலியகொட  கங்காராம பௌத்த விகாரையின்    மதகுரு விமலகனா தேரர் அங்குள்ள நூறு குடும்பங்களுக்கு பாலியகொட  கங்காராம விகாரையின் நிதி உதவியில்  உணவுப் பொருட்கள், மற்றும் ஆடைகள் அடங்கிய...
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஸவின் வங்கிக் கணக்குகளை விசாரணைக்கு உட்டுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பூகொட மாவட்ட நீதவான் டி.ஏ.ருவான் பத்திரண இவ்வாறு அனுமதி வழங்கியுள்ளார். மல்வானை மாபிட்டிகம பிரதேசத்தில் 16 ஏக்கர் காணியை 64 மில்லியன் ரூபாவிற்கு கொள்வனவு செய்தமை மற்றும் அந்தக் காணியில் 125 மில்லியன் ரூபா செலவில் வீடு கட்டியமை ஆகியன தொடர்பில் நிதிச் சலவை சட்டத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தப்படுகின்றது. நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினா...
  கட்சி ஒழுக்கத்தை மீறியவர்கள் தற்பொது மன்னிப்பு கோரி வருவதாக அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கட்சியின் ஒழுக்கத்தை மீறிச் செயற்பட்ட உறுப்பினர்கள் சிலர் தற்போது மன்னிப்பு கோரி கடிதங்களை அனுப்பி வைப்பதாகத் தெரிவித்துள்ளார். சிலர் நேரடியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து மன்னிப்பு கோரியுள்ளனர். எனவே, கட்சி தொடர்பிலான தீர்மானங்கள் மிகவும் அவதானத்துடனும் நிதானத்துடனும் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மஹிந்த தரப்பின் பலர் தற்போது ஜனாதிபதி மைத்திரிபாலவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறெனினும்...
அரசியல்வாதிகளினால் மட்டும் நாட்டை கட்டியெழுப்ப முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அரசியல்வாதிகளினால் மட்டும் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது எனவும், புத்திஜீவிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இணைந்து கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளார். பொருளாதாரப் பிரச்சினை, அரசியல் பிரச்சினை மற்றும் சமூகப் பிரச்சினை போன்றவனவற்றுக்க தீர்வு காண புத்திஜீவிகளின் ஒத்துழைப்பு அவசியம் என தெரிவித்துள்ளார்.
இம்பால்: ஆயுதப் படையினருக்கு சிறப்பு அதிகாரம் அளிக்கும் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி மணிப்பூரில் 16 ஆண்டுகாலம் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்த இரோம் ஷர்மிளா இன்று தம்முடைய போராட்டத்தைக் கைவிட்டார். இதனையடுத்து நீதிமன்றம் அவரை ஜாமீனில் விடுதலை செய்தது. மணிப்பூரில் 2000-ம் ஆண்டில் போலீஸ் வாகன அணிவகுப்பின் மீது குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்கள் 10 பேர் கொல்லப்பட்டனர். வடகிழக்கு மாநிலங்களில் ஆயுதப்...