கிளிநொச்சி மாவட்டத்தின் இரணைமடுவில் இலங்கை அரச படைகள் புத்த விகாரை ஒன்றை அமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை பல்வேறு தரப்பினரிடையேயும் அதிர்ச்சியையும் விமர்சனத்தையும் தோற்றுவித்துள்ளது. 2009 முள்ளிவாய்க்காலுக்குப் பின்னர் இலங்கை அரச படைகள் இரணைமடுவை பல்வேறு வகையிலும் ஆக்கிரமித்து வருகின்றது. அத்துடன் அதற்கு முன்னரான விடுதலைப் புலிகளின் காலத்தில் தன் போர் இலக்குககளில் ஒன்றாக இரணைமடுவை வைத்திருந்தது. இரணைமடுக்குளத்தையும் அதன் அருகில் அமைந்துள்ள கனகாம்பிகை அம்மன் ஆலயத்தையும் அண்டிய பிரதேசமே...
வடமாகாண சபையில் உள்ள " ஜிஞ்சர் குரூப் " முதலமைச்சரை துரத்துவதற்காகவே என் மீது குற்றசாட்டுக்களை முன் வைத்தது என வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதன் போது வடமாகாண அமைச்சர்கள் தொடர்பிலான குற்ற சாட்டுக்களை விசாரணை செய்வதற்காக குழு ஒன்று நியமிக்க உள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சபையில் பிரேரணை ஒன்றினை முன் மொழிய இருந்தார்.
அதற்கு சில...
முன்னாள் போராளிகளை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். – வடமாகாண சபையில் பிரேரணை:-
Thinappuyal -
புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகளை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் பிரேரணையினை முன் மொழிந்தார்.
வடமாகாண சபை மாதாந்த அமர்வு நேற்று செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது. அதன் போதே குறித்த பிரேரணை சபையில் முன் மொழியப்பட்டது.
போராளிகளின் தரவுகளை சேகரிக்கின்றோம். - சுகாதார அமைச்சர்.
அதனை தொடர்ந்து கருத்து தெரிவித்த வடமாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் ,
தமது அமைச்சின் கீழ் முன்னாள் போராளிகள் தொடர்பிலான...
மட்டகளப்பில் வாழும் மலையகமக்கள் ஏனைய மக்களைப்போல் வாழும் நல்லிணக்க பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும்:
Thinappuyal -
மட்டக்களப்புவாழ் மலையகமக்களின் நல்லிணக்கத்திற்கான வலியுறுத்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை மட்டகளப்பு வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நல்லிணக்க செயலணிக்குழுவின் அமா்வின் போதே இக்கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.
இது அவா்கள் தங்களுடைய அறிக்கையில் தெரிவித்துள்ள விடயம் வருமாறு
முப்பது வருட யுத்த அனுபவத்தின் பின்னர் இன்று நல்லிணக்கத்தின் அவசியம் பற்றிபேசப்படுகின்றது. இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் உருவாகாவிடின் நாட்டில் சமாதானம் ஒருபோதும் நிலைக்காது. சமாதானம் நிலைக்கவேண்டுமாயின் அனைத்து இனங்களும் சம உரிமையுடன் வாழவேண்டும். இப் பின்புலத்தில் கிழக்கு...
பிரித்தானியாவிற்கும் ரஸ்யாவிற்கும் இடையிலான உறவுகள் வலுப்படுத்;திக் கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பிரித்தானிய பிரதமர் திரேசா மே, ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான தற்போதைய உறவுகள் குறித்து திருப்தி கொள்ள முடியாது என இரு நாட்டுத் தலைவர்களும் தெரிவித்துள்ளனர்.
எதிர்வரும் நாட்களில் உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
கடற்பாதுகாப்பு குறித்த உறவுகளை வலுப்படுத்திக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என இணங்கப்பட்டதாக பிரித்தானிய பிரதமர்...
வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைக்க வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் விடுத்த கோரிக்கைக்கு முஸ்லிம்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைக்கும் திட்டத்திற்கு முஸ்லிம்கள் ஆதரவளிக்க வேண்டியதில்லை என கருதுவதாக கிழக்கு முஸ்லிம் சிவில் அமைப்புக்களின் தலைவர் மௌவி இசட்.எம். நதீர் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் தமிழ் முஸ்லிம் மக்கள் சம விகிதத்தில் வாழ்ந்து வருவதாகவும் கிழக்கு மாகாணத்தினை வடக்குடன் இணைக்க வேண்டிய அவசியம் எதுவும்...
அமெரிக்காவுடனான இராணுவ தொடர்புகள் ஆபத்தானது என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுடன் இலங்கை இராணுவ உறவுகளை வலுப்படுத்தி வருவது இலங்கைக்கு பாதகமான சூழ்நிலையையே உருவாக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவுடன் தொடர்ந்தும் இவ்வாறு இராணுவ உறவுகள் பேணப்பட்டால் இலங்கையும் பிலிப்பைன்ஸைப் போன்று அமெரிக்காவின் கைப்பொம்மையாக மாறி விடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
திருகோணமலையில் அமெரிக்கா படை முகாம் ஒன்றை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் இதற்கு இலங்கை அரசாங்கம்...
15 ஆண்டுகளுக்கு இந்த அரசாங்கமே ஆட்சியில் நீடிக்கும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் தலதா அதுகோரல தெரிவித்துள்ளார்.
நிவித்திகல பிரதேசத்தில் கட்சியின் அங்கத்தினர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகளில் பங்கேற்றிருந்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எமது தலைவர்கள் களவாடவில்லை எனவும், ஒரு குடும்பத்தை போசிக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஸ ஆட்சிக் காலத்தில் போன்று இந்த அரசாங்கம் எந்தவொரு குற்றத்தையும் செய்யவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட தரப்பினர் தங்களது...
வட மாகாண முதலமைச்சருக்கு எதிராக விசாரணை நடத்தப்பட வேண்டுமென வட மாகாணசபையின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர் வீ.ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.
மாகாணசபையில் இடம்பெற்று வரும் ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முதலமைச்சரின் அறிவுறுத்தல்களுக்கு அமைய மாகாண அமைச்சுக்களில் இடம்பெறும் மோசடிகள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறான பின்னணியில் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிராகவும் விசாரணை நடத்தப்பட வேண்டுமென மாகாணசபை உறுப்பினர் கோரிக்கை விடுத்துள்ளார்.
வட மாகாண முதலமைச்சர் மிக முக்கியமான...
விடுதலைப்புலிகளின் ஊடக இணைப்பாளராக இருந்த தயா மாஸ்டர் என்று பிரபல்யம் பெற்றுள்ள வேலாயுதம் தயாநிதிக்கு எதிராக வவுனியா மேல் நீதிமன்றத்தில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் இன்று 10 ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்ட ஒரு வழக்கில் அவரை நிபந்தனையுடன் கூடிய பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
ஆயினும் நான்கு சரீரப் பிணை வழங்குபவர்களை நீதிமன்றம் பார்வையிட வேண்டும் என தெரிவித்து, அவர்களை வியாழக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜராக்குமாறு உத்தரவிட்டதுடன், அதுவரையில் தயா...