ஒரு தொகை கேரள கஞ்சாவினை விநியோகித்துக்கொண்டிருந்த தந்தையும், மகனும் இன்று காலை கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரத்மலானை பிரதேசத்தில் வைத்தே இவர்களை கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 49 வயதான தந்தையும், 22 வயதான மகனுமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மகன் நிதி நிறுவனம் ஒன்றில் பணம் வசூலிப்பு வேலையில் ஈடுபட்டுக் கொண்டே, குறித்த கஞ்சா விற்பனையிலும் ஈடுபட்டு வந்திருப்பதாக பொலிஸாரின் விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் குருநாகல் மாவட்டத்தின் தஹய்யாகமுவ மற்றும் தெனியாய பிரதேச வான்பரப்பில் நேற்றிரவு மர்ம ஒளி ஒன்றினை பிரதேசவாசிகள் அவதானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகவும் வேகத்துடன் குறித்த ஒளி மறைந்து சென்றதாகவும் பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஒளி மறைந்து சென்ற சில நிமிடங்களில் புதுவகையான நறுமணம் ஒன்றை பிரதேசவாசிகளால் நுகரக் கூடியதாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர். குறித்த நறுமணம் மல்லிகைப் பூவின் நறுமணத்தை ஒத்திருந்ததாகவும், இதனை நுகர்வதற்கு மிகவும் சிரமப்பட்டதாகவும் பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர். மேலும், வண்டியின் சக்கரத்தை ஒத்ததாகவும்,சிவப்பு...
இலங்கை இராணுவத்தின் விசேட பயிற்சி முகாமில் ஆயுதங்களுடன் முன்னெடுக்கப்படும் பயற்சி நடவடிக்கையால் விடத்தல்தீவு பிரதேசத்தில் வசிக்கும் பொதுமக்கள் பெரிதும் அசௌகரியத்துக்கு முகங்கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். விடத்தல்தீவு இராணுவ முகாம் அமைந்துள்ள பிரதேசத்தில் உள்ள கர்ப்பிணிகள் இதனால் அதிகம் அசௌகரியங்களுக்கு முகங்கொடுப்பதாக குறித்த பிரதேசத்திற்கு சென்றிருந்த பாராளுமன்ற உறுப்பினர்களிடம் மக்கள் தெரிவித்திருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தினமும் அதிகாலையில் குறித்த பிரதேசத்தில்...
இன்றைய காலகட்டத்தில் பள்ளி செல்வோர் கூடக் கையில் லாப்டாப் வைத்திருக்கின்றனர். இந்திய வாடிக்கையாளர்களைக் கவரும் பல்வேறு சலுகைகளும் இதற்குக் காரணம் ஆகும். எதுவானாலும் நம்ம பசங்க கையில் இருக்கும் போது புதிதாய் வாங்கிய லாப்டாப் கூட சீக்கிரமே மக்கர் பண்ணலாம். பொதுவாக புதிய லாப்டாப் கோளாறுகள் அதன் வேகத்தில் இருந்தே துவங்கும். முதலில் வேகம் குறைந்து பின் ஹேங் ஆவது எனப் பிரச்சனை பட்டியல் நீளும். இத்தனை பிரச்சனைகளைத் தவிர்க்க...
செவ்வாழை நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. செவ்வாழையில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இது சிறுநீரக கற்கள் உருவாவது, இதய நோய் மற்றும் புற்றுநோய் தாக்குதலைத் தடுக்கும். மேலும் இது உடலில் கால்சியம் உறிஞ்சுவதை அதிகரித்து, எலும்புகளின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். எனவே உங்களுக்கு சிறுநீரக பிரச்சனைகள் ஏதும் வராமலிருக்க தினமும் ஒரு செவ்வாழையை உட்கொண்டு வாருங்கள். செவ்வாழையில் மற்ற வாழைப்பழங்களை விட கலோரிகள் மிகவும் குறைவு. எனவே எடையைக் குறைக்க நினைப்போர் தினமும் ஒரு...
மனிதன் உயிர் வாழ்வதற்கு எப்படி உணவு, உடை, இருப்பிடம் அவசியமோ, இன்றைய காலத்தில் அத்துடன் பணமும் மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக உள்ளது. பணம் இல்லாவிட்டால் வாழ்வதே கடினம் என்ற நிலையில் நாம் உள்ளோம். எனவே ஒவ்வொருவரும் பணம் சம்பாதிப்பதற்கு சற்றும் ஓய்வெடுக்காமல் ஓயாது உழைத்துக் கொண்டிருக்கிறோம். நம் நாட்டில் வாஸ்து மீது அலாதியான நம்பிக்கை உள்ளது. அந்த வாஸ்து சாஸ்திரத்தில், வீட்டின் வறுமை நீங்கி, செல்வம் கொழிக்க வேண்டுமானால் வீட்டினுள்...
பொதுவாக பாம்பைக் கண்டாலே படையே நடுங்கும் என்பது நம் அனைவருக்கு தெரிந்த விடயமே... அப்படிப்பட்ட பாம்பு ஏதாவது ஒரு அதிசயத்தினை நிகழ்த்தினால் எப்படி படை நடுங்கும். படை சூழ நின்று அவதானிக்கத் தோன்றும்... இக்காட்சி நிச்சயமாக உங்களுக்கு ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தும் என்பதில் சிறிதும் சந்தேகமே இல்லை.... அப்படியென்ன என்று வாங்க பார்ப்போம். ஒடிசா மாநிலத்தில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த ராஜ நாகத்தை வனத்துறையினரிடம் பிடித்து ஒப்படைத்தனர். அது அதிரடியாக ஏழு...
கண்டி, ஹந்தானை பிரதேசத்தில் தலைமைத்துவப் பயிற்சி என்ற பெயரில் இயங்கி வந்த தனியார் வதிவிட பயிற்சி முகாமில் இடம்பெற்ற மாணவிகள் துஷ்பிரயோக சம்பவம் தொடர்பில் இரண்டாவது சந்தேகநபரை இன்று கண்டி பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த வாரம் தலைமைத்துவப் பயிற்சி நிலையத்தின் தலைவர் சந்திமல் கமகே கைது செய்யப்பட்டுள்ளதுடன், இந்த மாதம் 11ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கண்டி நீதவான் உத்தரவிட்டுள்ளார். இதேவேளை, இரண்டாவது சந்தேகநபரை இன்று கண்டி நீதிமன்றத்தில்...
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவில் இன்று முன்னிலையாகியுள்ளார். அமைச்சரவையின் ஒப்புதல் இன்றி லங்கா சதொசவிற்கு அரிசி இறக்குமதி செய்தமை தொடர்பில் விசாரணை மேற்கொள்ள அழைப்பு விடுகப்பட்டிருந்தது. இது தொடர்பில் வாக்குமூலம் அளிக்கும் வகையில் நிதி மோசடி விசாரணை பிரிவில் ஜோன்ஸ்டன் ஆஜராகியுள்ளார்.
பொருட்கள், சேவைகளின் விலைகளில் மாற்றத்தை ஏற்படுத்தும் உத்தேச வற்வரி திருத்தச் சட்டமூலம் இலங்கை அரசியலமைப்பின் பிரிவுகளுக்கு முரணான வகையில் காணப்படுவதாக உச்சநீதிமன்றம் வியாக்கியானம் செய்திருப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார். நாடாளுமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. வற்வரி திருத்தச் சட்டமூலம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் வியாக்கியானம் நாடாளுமன்றத்திற்கு அனுப்பியிருப்பதோடு அதனை இன்று சபாநாயகர் சபையில் அறிவித்தார். இதற்கமைய குறித்த திருத்தச் சட்டமூலம் ஸ்ரீலங்காவின் அரசியலமைப்பின்...