மண்டேலாவின் நல்லிணக்க செயற்பாட்டை முன்னுதாரணமாக கொள்ளவேண்டும்-நல்லிணக்க குழுவிடம் தெரிவிப்பு
Thinappuyal -0
தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவினால் உருவாக்கப்பட்ட நல்லிணக்க செயற்பாடுகளை முன்னுதாரணமாகக் கொண்டு அரசாங்கம் நல்லிணக்க செயலணி ஒன்றை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க பொறிமுறைகள் தொடர்பில் மக்கள் கருத்துக்களை அறிவதற்காக நியமிக்கப்பட்டுள்ள மனோரி முத்தெட்டுவேகம தலைமையிலான விசேட செயலணி இன்று வவுனியாவில் நடாத்திய அமர்வின் போதே இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
சிரேஷ்ட சட்டத்தரணி மனோரி முத்தெட்டுவேகம தலைமையிலான 11 பேர் அடங்கிய பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க...
மனைவியை மிரட்டி தனது நண்பரை வைத்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கேகாலை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த நபர் மனைவியை ஆயுதத்தினை வைத்து மிரட்டி தன் கண்முன்னே தனது நண்பருடன் உடலுறவு கொள்ள வைத்துள்ளார்.
இது சம்பந்தமாக, தாக்கல் செய்யப்பட்ட வழக்கு சமீபத்தில் கேகாலை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
இதன்போது, பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்பட்ட பெண்ணின் கணவருக்கும் அவரின் நண்பருக்கும் முதல் குற்றச்சாட்டிற்காக 12 வருட சிறைத்தண்டனையும், 2 ஆவது குற்றச்சாட்டிற்காக 10...
வெளிநாடுகளிலிருந்து கிடைக்கப் பெற்றுள்ள நிதியுதவிகள் நாட்டின் அபிவிரு த்தி வேலைத்திட்டங்களுக்கு வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டு வருவதாக நிதி முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.
அந்த வகையில், இந்த வருடத்தின் முதல் நான்கு மாத காலப்பகுதியில் 312 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிதியுதவியில் 302 மில்லியன் டொலர் நிதி செயற்றிட்ட கடன் தொகை யாகவும், எஞ்சிய தொகை நேரடி உதவியாகவும் கிடைக்கப்பெற்றுள்ளன. இந்த நிதியுதவித் தொகையில் பெரும் பகுதி சீன அரசாங்கத்தினால்...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான சாட்சியங்களை, நீதிமன்ற த்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக, பொலிஸ் நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.
நாமல் ராஜபக்ஷ நிதிச் மோசடிக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில், பொலிஸ் நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவினர், கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நேற்றுத் (திங்கட்கிழமை) இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.
இந்தியாவைச் சேர்ந்த பிரபல க்ரிஷ் நிறுவனத்திடமிருந்து பெற்றுக்கொண்ட 70 மில்லியன்...
லங்கா ஐஓசி நிறுவனம், இன்று முதல் எக்ட்ரா பிரீமியம் யூரோ 3 பெற்றோல் மற்றும் எக்ஸ்ட்ராமைல் டீசல் ஆகியவற்றின் விலைகளை குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது
அரசாங்க பத்திரிகை ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே எக்ஸ்ட்ரா பிரீமியம் யூரோ 3 பெற்றோல் லீற்றர் ஒன்று 123 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது.
எக்ஸ்ட்ராமைல் டீசல் 99 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது
சட்டவிரோதமான முறையில் இலங்கையில் தங்கியிருக்கும் நேபாளப் பிரஜை கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சட்டவிரோதமான முறையில் இலங்கையில் தங்கியிருந்தார்கள் என்றக் குற்றச்சாட்டில், அண்மையில் 19 நேபாளப் பிரஜைகள் கைது செய்யப்பட்டனர்.. இவர்கள் உரிய முறையில் விசா இன்றி தங்கியிருந்தமைக்காக, குடிவரவு குடியகல்வு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
கடந்த காலங்களில், இலங்கையில் போதைப் பொருள், மற்றும் ஏனைய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய வெளிநாட்டவர்கள் பரவலாக கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
அதுமாத்திரமன்றி பல்வேறான வெளிநாட்டு...
நாடு எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்க்க கல்விமான்கள் முன்வரவேண்டும்-ஜனாதிபதி அழைப்பு
Thinappuyal -
நாடு எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் மற்றும் சிக்கல்களை எதிர்காலத்தில் பிறக்கவுள்ள பிள்ளைகளின் நன்மை கருதி அவற்றைத் தீர்ப்பதற்கு கல்விமான்களும் புத்திஜீவிகளும் முன்வர வேண்டுமென ஜனாதிபதி வலியுறுத்தினார்.
நேற்று (08) பிற்பகல் பத்தரமுல்ல வோட்டஸ் ஏஜ் ஹோட்டலில் இடம்பெற்ற ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக பழைய மாணவர்கள் சங்கத்தின் பாராட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்தார்.
மானிட சமூகத்தின் முன்னேற்றத்திற்காக இன்று முக்கிய தடையாக போலியான மனிதர்களின்...
இராணுவத்தின் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ், நாளை ஓய்வுபெறவுள்ளார்.
அவருக்கு நாளை கவசப்படைப்பிரிவினால், பிரியாவிடை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்படும்.
கடந்த பெப்ரவரி 12ஆம் நாள் தொடக்கம், இராணுவத் தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ், பணியாற்றி வந்தார்.
அதேவேளை, மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ், ஓய்வு பெற்ற பின்னர், தற்போது பிரதித் தலைமை அதிகாரியாக இருக்கும், மேஜர் ஜெனரல் சுமேத பெரேரா நியமிக்கப்படுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே இராணுவத்...
கிளிநொச்சி பளை பிரதேசத்திலுள்ள தனியார் விடுதியொன்றில் பதினைந்து வயது நிரம்பிய சிறுமி ஒருவரை வன்புணர்வுக்கு உட்படுத்திய சந்தேகநபரை, எதிர்வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 4ஆம் திகதி இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில், சந்தேகநபர் நேற்று கைதுசெய்யப்பட்டார். பொலிஸ் விசாரணைகளின் பின்னர் இன்று (செவ்வாய்க்கிழமை) சந்தேகநபரை நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது நீதவான் இவ் உத்தரவை பிறப்பித்தார்.
குறித்த சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட விடுதி, சம்பவம்...
சர்ச்சைக்குரிய மாலம்பே தனியார் மருத்துவப் பல்கலைக்கழகம் ஏனைய அரச பல்கலைக்கழகங்களை விடவும் உயர்ந்த இடத்தையே வகிப்பதாக தெரிவித்துள்ள அரசாங்கத்தின் சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி சேவைகள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க, ஏனைய பல்கலைக்கழக மாணவர்களை விடவும் மாலம்பே பல்கலைக்கழக மாணவர்கள் உயர்ந்த தகுதியைக் கொண்டவர்கள் என்றும் கூறியுள்ளார்.
எனவே மாலம்பே தனியார் மருத்துவப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு மருத்துவப் பட்டம் வழங்குவதற்கான அனைத்து அதிகாரமும் சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்னவுக்கு உள்ளதால் அந்தப்...