31 வருட காலமாக தாம் வாழ்ந்த காணியை விட்டு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 6 ஆம் திகதிக்குள் வெளியேறுமாறு தெரிவித்து ஒட்டப்பட்டுள்ள துண்டுப்ப் பிரசுரத்தால் தாம் அதிர்ச்சியடைந்துள்ளதாக யாழ் கடற்கரை பழைய பூங்கா வீதி 5 ஆம் வட்டாரம் குருநகர் பகுதியைச் சேர்ந்த மக்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் மேலும் தெரிவிக்கையில், கடற்கரை பழைய பூங்கா வீதி, 5 வட்டாரம் குருநகர் பகுதியை சேர்ந்த நாம் கடந்த 31 வருட...
திருட்டு வழியில் வரி பெறச் சென்று, அரசாங்கத்திற்கு கிடைத்த வரியும் இல்லாது போயுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார். இவர்கள் நாட்டின் சட்டம் அல்லது அரச நிர்வாகம் குறித்து ‘அ’ அல்லது ‘ஆ’ கூட தெரியாதவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே விமல் வீரவங்ச இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார். ஆரம்பத்திலேயே இந்த சட்டமூலம் நீதிமன்றத்தினால் பலமற்றதாக ஆக்கப்பட்டதாகவும், பின்னர் பொய்யாக மற்றுமொரு சட்ட மூலத்தை...
வித்தியா கொலைவலக்கு சந்தேக நபர்களுக்கெதிரான வழக்கு விசாரனை இன்று 10/08/2016 யாழ்.நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது. கடந்த வருடம் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை சந்தேக நபர்கலுக்கெதிரான வழக்கு   இன்று யாழ்.நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படவுள்ளது
யாழ் திருநெல்வேலி பகுதியில் கலாசாலை வீதி பாரதிபுரம் மைதானத்தில் இளைஞர்களின் அட்டகாசம் எல்லை மீறி காணப்படுவதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். குறித்த மைதானத்தில் இரவு நேரங்களில் ஒன்று கூடும் இளைஞர்கள் கூச்சலிடுவதாகவும், பியர் பேன்ற மது பாவனையில் ஈடுபடுவதாகவும் இதனால் பெண் பிள்ளைகளை வைத்திருக்கும் பெற்றோர் பெரிதும் சிரமப்படுவதாகவும் தெரிவிததுள்ளனர். மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் பொலிசார் கவனமெடுக்குமாறு மக்கள் கேட்டுக்கொள்கின்றனர்
இலங்கையில் காணாமல் போனவர்கள் பற்றிய விவகாரங்களை கையாள்வதற்காக அமையவுள்ள செயலகத்தின் கிளை அலுவலகங்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் அமைய வேண்டும் என்ற அரசினால் நியமிக்கப்பட்டுள்ள நல்லிணக்க பொறிமுறைகளுக்கான ஆலோசனைக் குழுவின் முன் வைக்கப்பட்டுள்ளது. நல்லிணக்க பொறிமுறைகளுக்கான குழுவின் கிழக்கு மாகாண மக்கள் கருத்தறியும் அமர்வு இன்று கிழக்கு மாகாணத்தில் ஆரம்பமானது. மட்டக்களப்பு மாவட்டம், வாழைச்சேனை பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்ற மக்கள் கருத்தறியும் அமர்வின் போது சாட்சியமளித்த...
  வடக்கு- கிழக்கு மாகாணங்கள் தனித்தனி மாகாணங்களாகவே தொடர வேண்டும். எந்தவொரு காரணம் கொண்டும் அவை மீளவும் இணைக்கப்படக் கூடாது என்று கிழக்கு முஸ்லிம் சிவில் அமைப்புகளின் ஒன்றியத்தினால் பிரகடனமொன்று வெளியிடப்பட்டுள்ளது. அத்தோடு, சமஷ்டி அதிகாரப் பரவலாக்க முறைமை முஸ்லிம் மக்களுக்கு பாதிப்பானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் பேரவை வடக்கு - கிழக்கு மாகாணங்கள் இணைந்த சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றி 24 மணி நேரத்திற்குள் கிழக்கு...
வன்னிக்குறோஸ் கலாச்சார பேரவையின் முத்தமிழ் விழா நிகழ்வில் பங்கேற்ற முல்லை மாவட்டக் கலைஞர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு 08-08-2016 அன்று காலை 10.00 மணிக்கு வன்னிக்குறோஸ் கலாச்சார பேரவையின் தலைவர் திரு.சி.நாகேந்திரராசா தலைமையில் முல்லைத்தீவில் சிலாவத்தை தமிழ் வித்தியாலயத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், வன்னிக்குறோஸ் கலாச்சார பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளருமாகிய கௌரவ.வைத்திய கலாநிதி.சி.சிவமோகன் கலந்து சிறப்பித்தார். பொதுச்சுடரினை  வைத்திய கலாநிதி சி.சிவமோகன், கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர்...
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குற்பட்ட சென்ஜோன்டிலரி தோட்டத்தில் 8 பேர் குளவி கொட்டுக்கு இழக்காகியுள்ளனர் தேயிலை மலையில் 09.08.2016 செவ்வாய்கிழமை மாலை 3 மணியளவில்  கொழுந்துபரித்துக்கொண்டிருந்த பெண் தொழிலாளர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர் பாதிக்கப்பட்டவர்கள் பொகவந்தலா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மூவர் சிக்கிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதுடன் மேலும் ஐவர் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருவதாகவும் வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர்
நோர்வூட் நகர விளையாட்டு  மைதானத்தின் முன்னால் காட்சிபடுத்தப்பட்டிருந்த அமைச்சர் பி.திகாம்பரம் அவர்களின் விளம்பர பலகை இனம் தெரியாதோரால் 09.08.2016 இரவு  அல்லது அதிகாலை வேலையில் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர் இதேவேலை 09.08.2016 அன்று கொட்டகலை நகரில் காட்சிபடுத்தப்பட்டீரூந்த த.மு.கூட்டமைப்பின் விளம்பர பளகையும் இனம் தெரியாதோரால் உடைசேதமாக்கப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது               நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன்
கண் பார்வை அற்றோர் கிரிக்கட் விளையாடுகின்றார்கள் என்றால் அது நம்புவது கடினம். ஆனால் அவ்வாறானதொரு புதிய முயற்சியை இலங்கைத் தீவின் வடக்கு கிழக்கு எங்கிலும் வாழும் தமிழ் மாற்றுத் திறனாளிகள் முன்னெடுக்கின்றார்கள். ஓசை கொண்ட பந்து அவர்களுக்கு உதவுகின்றது. அவாறான விழிப்புலன் பாதிக்கப்பட்டோர் விளையாடும் சத்தப்பந்து கிரிக்கட் போட்டி திங்கள்கிழமை  08.08.2016 , பரந்தன் இந்து மகா வித்தியாலய மைதானத்தில் நடைபெற உள்ளது. தமிழ் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டி 2016 , ...