பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு நேற்று 9 சான்றுகளை நீதிமன்றில் சமர்ப்பித்தது.
Thinappuyal -0
றக்பி விளையாட்டை மேம்படுத்த கிரிஷ் நிறுவனம் கொடுத்ததாக கூறப்படும் 70 மில்லியன் ரூபாவை தவறாக பயன்படுத்தினார் எனும் குற்றச் சாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு நேற்று 9 சான்றுகளை நீதிமன்றில் சமர்ப்பித்தது. இந்த விவகாரம் தொடர்பிலான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரிகளில் ஒருவரான பிரதான பொலிஸ் பரிசோதகர் அனுர பிரேமசாந்த இந்த...
இரண்டு நாள் பயணமாக சிறிலங்கா வந்த பாகிஸ்தான் விமானப்படைத் தளபதி எயர் சீவ் மார்ஷல் சொஹைல் அமான், நேற்று சிறிலங்கா பிரதமர் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தினார்.
நேற்று முன்தினம் கொழும்பு வந்த பாகிஸ்தான் விமானப்படைத் தளபதி, நேற்று முழுநாளும் சிறிலங்கா அரசாங்க மற்றும் பாதுகாப்புத் துறைப் பிரமுகர்களைச் சந்திப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார்.
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்துப் பேசிய அவர், சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்...
பழம்பெரும் கவர்ச்சி நடிகை ஜோதிலட்சுமி காலமானார். ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்த அவர் சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 68. எம்.ஜி.ஆரின் பெரிய இடத்துப் பெண் தமிழ் திரைப்படத்தில் 1963ல் அறிமுகமானவர் ஜோதிலட்சுமி. 1970களில் கறுப்பு வெள்ளை கால தமிழ் சினிமா தொடங்கி இன்றைய கம்யூட்டர் காலம் வரை சினிமா, சின்னத்திரை என அழகாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை ஜோதிலட்சுமி. மறைந்த...
அனுராதபுர சிறையில் ஊசி ஏற்றப்பட்டதால் தமிழ் அரசியல் கைதி இராசையா ஆனந்தராசா மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில்…
Thinappuyal -
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இராசையா ஆனந்தராசா என்ற தமிழ் அரசியல் கைதி மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் அநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றார்.
அநுராதபுரம் சிறைச்சாலையில் வைத்து ஏற்றப்பட்ட ஊசி காரணமாகவே தனக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இராசையா ஆனந்தராசாவும், அநுராதபுரம் சிறைச்சாலையிலுள்ள ஏனைய தமிழ் அரசியல் கைதிகளும் இன்று அவர்களை சந்தித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட...
லங்கா ஐஓசி நிறுவனம், இன்று முதல் எக்ட்ரா பிரீமியம் யூரோ 3 பெற்றோல் மற்றும் எக்ஸ்ட்ராமைல் டீசல் ஆகியவற்றின் விலைகளை குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது
அரசாங்க பத்திரிகை ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே எக்ஸ்ட்ரா பிரீமியம் யூரோ 3 பெற்றோல் லீற்றர் ஒன்று 123 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது.
எக்ஸ்ட்ராமைல் டீசல் 99 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
சுதந்திர கட்சியினால் துரத்தப்பட்ட நான் மீண்டும் அந்த கட்சியில் எவ்வாறு இணைவது என பாராளுமன்ற உறுப்பினர் கேள்வியெழுப்பியுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர். எம்.எச்.எம். நவவி மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இணையப் போவதாக தெரிவிக்கப்படும் கருத்துக்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே நவவி மேற் கூறியவாறு தெரிவித்தார்.
புத்தளம் தொகுதிக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு அமைப்பாளர் இல்லாத போது, சுதந்திர கட்சி புத்தளம் தொகுதியில் வங்குரோத்து அடைந்திருந்த நிலையில் புத்தளம் தொகுதி...
கிர்ரிஸ் நிறுவனத்திடம் நாமல் ராஜபக்ச பெற்ற 70 மில்லியன் ரூபாய்கள் தொடர்பானவிசாரணை நேற்று கொழும்பு நீதிமன்றத்தில்.
Thinappuyal -
இந்திய ரியல் எஸ்டெட் நிறுவனமான கிர்ரிஸ் லங்காவிடம் இருந்து பெறப்பட்டதாககூறப்படும் பல மில்லியன் ரூபாய்கள் தொடர்பில், விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
கிர்ரிஸ் நிறுவனத்திடம் நாமல் ராஜபக்ச பெற்ற 70 மில்லியன் ரூபாய்கள் தொடர்பானவிசாரணை நேற்று கொழும்பு நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த விடயத்தைநிதிமோசடி தடுப்பு பொலிஸ்பிரிவு மன்றில் அறிவித்துள்ளது.
இதன்படி புத்தளத்தில் உள்ள காணி ஒன்று தொடர்பில் போலியான ஆவணம் ஒன்றை தயாரித்த,இலங்கை சுற்றுலாசபையின் முன்னாள் தலைவர் நாலக கொடஹேவா, அதனை இந்திய...
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய, தமிழர் என்ற சாதனையை படைத்த ஊட்டி இராணுவ வீரருக்கு மகத்தான வரவேற்பு!
Thinappuyal -
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய, தமிழர் என்ற சாதனையை படைத்த ஊட்டி இராணுவ வீரருக்கு, அவரது சொந்த ஊரில் மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம், ஊட்டி லவ்டேல் பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார், இந்திய இராணுவத்தின் மெட்ராஸ் ரெஜிமென்ட் இரண்டாம் படைப்பிரிவில் அவர் பணியாற்றி வருகிறார்.
இந்திய இராணுவக்குழு சார்பில் தெரிவு செய்யப்பட்ட, 14 பேர் கொண்ட எவரெஸ்ட் மலை ஏறும் குழுவில் சிவகுமாரும் இணைத்துக்கொள்ளப்பட்டார்.
இந்நிலையில் கடந்த மே மாதம் 18ஆம் திகதி எவரெஸ்ட்...
கூட்டமைப்பின் வளர்ச்சியை ஜீரணிக்க முடியாத விசமிகளின் செயற்பாடு த.மு.கூட்டணியின் கட்டவுட் சேதம்
Thinappuyal -
தமிழ் முற்போக்கு கூட்டணியின் வளர்ச்சியை ஜீரணிக்க முடியாத விசமிகளின் செயற்பாட்டினால் கொட்டகலை நகரல் காட்சிப்படுத்தப்பட்டிருந்த தமிழ் முற்போக்கு கூட்டணியின் பாரிய கட்டவுட் சேதமாக்கப்படுள்ளதாக முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் இராஜமாணிக்கம் தெரிவித்தார். திம்புளை பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை நகரின் பிரதான சந்தியிலிருந்த கட்டவுட் 08.08.2016 இரவு கிழித்து சேதமாக்கப்பட்டுள்ளதாக பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிராந்திய அமைப்பாளரின் முறைபாட்டையடுத்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக திம்புளை பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்
இது தொடர்பில்...
யுத்தம் ஓய்ந்து தங்களது வீடுகளில் இருந்து வாழ்க்கையை கொண்டு செல்வதற்கு தலைப்பட்டுள்ள மக்களுக்கு மீண்டும் வனஜீவராஜிகளில் இருந்தும் தம்மை பாதுகாத்து கொள்ளவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
Thinappuyal -
மட்டக்களப்பு மாவட்டம், வனாந்தரங்களையும், மலைசாரல்களையும், கடல்வெளிகளையும், ஆறுகளையும் கொண்டமைந்த ஒரு பிரதேசமாகும்.
இம்மாவட்டத்தில் அதிகளவான பகுதி காடும், வயல்வெளிகளையும் சார்ந்ததாக அமையப்பெற்றுள்ளது. இங்கு வாழ்கின்றவர்களில் நகர்புறத்தினை அண்டிய மக்கள் அரச, அரசசார்பற்ற நிறுவனங்கள், திணைக்களங்களில் தொழில்புரிபவர்களாகவும், தொழிலதிபர்களாகவும் இருக்க, ஏனைய பிரதேசத்து மக்கள், விவசாயம், மீன்பிடி, கூலிவேலை செய்பவர்களாகவும் இருக்கின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தினை இரண்டுபெரும் பிரிவுகளாக மக்கள் பிரித்து அழைக்கின்றனர். சூரியன் உதிக்கும் பிரதேசத்தினை எழுவான்கரை என்றும், சூரியன் மறையும் பிரதேசத்தினை...