அரை நூற்றாண்டு காலத்துக்கும் மேலாக விரோத அரசியலில் மூழ்கிப் போயுள்ள எமது நாட்டில் நிரந்தரமான அரசியல் சகவாழ்வைத் தோற்றுவிப்பதென்பது இலகுவான காரியமல்ல.
இரண்டு பிரதான தேசியக் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் கடந்த வருடம் ஜனவரியில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பாக ஏற்படுத்திக் கொண்டுள்ள அரசியல் சகவாழ்வுக்கு எதிராக தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சதிமுயற்சிகளைப் பார்க்கின்ற போது அரசியல் தோழமையென்பது இலங்கையில் எத்தனை சவால்கள் நிறைந்ததென்பது...
நிதி முகாமைத்துவ திருத்தச் சட்டம் குறித்து நாடாளுமன்றில் விவாதம் நடைபெறவுள்ளது.
உத்தேச நிதி முகாமைத்துவ திருத்தச் சட்டம் தொடர்பில் இன்று நாடாளுமன்றில் விவாதம் செய்யப்படவுள்ளது.
2016ம் ஆண்டு வரவு செலவுத் திட்ட யோசனைக்கு அமைய இந்த திருத்தங்களை அமுல்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதேவேளை, வற் வரி அதிகரிப்பு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பிலான தீர்ப்பு சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு பற்றி சபாநாயகர் இன்று நாடாளுமன்றில் அறிவிப்பார் என...
இன்று காலை கூட்டு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் விசேட கலந்துரையாடல்.
Thinappuyal -
கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் விசேட கூட்டமொன்று நடத்தப்படவுள்ளது.
இன்று காலை நாடாளுமன்ற வளாகத்தில் இந்தக் கூட்டம் நடத்தப்படவுள்ளது.
வற் வரி உயர்வு குறித்த நாடாளுமன்ற விவாதத்தின் போது எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது.
கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர் தினேஸ் குணவர்தன தலைமையில் இந்த கூட்டம் நடத்தப்படவுள்ளது.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு கூட்டு எதிர்க்கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வற் வரி திருத்தச் சட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படுவது குறித்து விரிவாக...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை விட மோசமானவர் என அமைச்சர் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஊடக சந்திப்பின் போது கூட்டு எதிர்க்கட்சி தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
எனது ஆரம்பம் மஹிந்த ராஜபக்சவினால் உருவாகவில்லை. 35 ஆண்டுகள் நான் அவரின் ஆசீர்வாத்துடன் இராணுவத்தில் செயற்படவில்லை.
ரத்தம்...
1991ஆம் ஆண்டு மன்னாரில் கைது செய்யப்பட்ட தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் உள்ளிட்ட 21 இளைஞர்களை இராணுவம் படுகொலை செய்தது! இலங்கை அகதி குறிப்பிட்டுள்ளார்.
Thinappuyal -
1991ஆம் ஆண்டு மன்னாரில் கைது செய்யப்பட்ட தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் உள்ளிட்ட 21 இளைஞர்களை இராணுவம் படுகொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த 21 பேரும் இராணுவத்தினரால் அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில், கிணற்றில் புதைக்கப்பட்டுள்ளதாக இந்திய அகதிமுகாமில் வசிக்கும் இலங்கை அகதி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து தார்மலிங்கம் என்ற இலங்கை அகதி கூறுகையில், தாம் உள்ளிட்ட11 பேர் அகதிகளாக இந்தியா செல்ல முற்பட்ட போது தலைமன்னாரில் வைத்து கைது செய்யப்பட்டோம்
கைது...
கொத்துக்குண்டு, விஷ ஊசிக் கொலை, இன அழிப்பு! விரைவில் சர்வதேச விசாரணை வேண்டும்.-வடக்கு மக்கள்
Thinappuyal -
போர்க்காலத்தின் போது படையினரால் கொல்லப்பட்டவர்கள், போர் நிறைவடைந்ததன் பின்னர் இராணுவத்தினரிடம் சரணடைந்து பின் கொல்லப்பட்டவர்கள், கொத்துக்குண்டுப் பயன்பாடு, விஷ ஊசிக் கொலைகள் மற்றும் இன அழிப்பு என்பன தொடர்பில் சர்வதேச நீதிபதிகளினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என வடக்கு மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
போர்க்குற்ற விசாரணைகளை எவ்வாறு முன்னெடுப்பது உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் நல்லிணக்க செயலணியால் வடக்கில் மக்களிடம் கருத்தறியப்பட்டு வருகின்றன.
இதன்போது கருத்து தெரிவித்த வடக்கு மக்கள் இவ்வாறு கூறியுள்ளனர். மக்கள்...
விபத்து மற்றும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில்மட்டக்களப்பில் விஷேட நடவடிக்கை!
Thinappuyal -
மட்டக்களப்பு மாவட்டத்தில் விபத்து மற்றும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் சிவில் பாதுகாப்பு குழுக்களுடன் இணைந்து விரைவில் விஷேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.
மட்டக்களப்பு – அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ஜாயக்கொட ஆராய்ச்சி இதனை தெரிவித்துள்ளார்.
பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்திரவின் பணிப்பின் பேரில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
மட்டக்களப்பு பொலிஸ் அலுவலக நலன்புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று இடம்பெற்ற கலை கலாசார நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர்...
ஹரிஷ்ணவி படுகொலை செய்யப்பட்டு ஆறு மாதங்களாகிவிட்டன. இன்று வரையிலும் நீதி கிடைக்கவில்லை.
Thinappuyal -
எனது மகள் ஹரிஷ்ணவி படுகொலை செய்யப்பட்டு ஆறு மாதங்களாகிவிட்டன. எனினும் இன்று வரையிலும் நீதிகிடைக்கவில்லை.
எனவே, எனது மகளின் வழக்கு விசாரணைகள் வவுனியா மேல் நீதிமன்றுக்கு மாற்றப்பட வேண்டும் என ஹரிஷ்ணவியின் தாய் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த பெப்ரவரி மாதம் 16ஆம் திகதி பாடசாலை மாணவி ஹரிஷ்ணவி வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
திடீர் இறப்பு விசாரணை அதிகாரியின் விசாரணை அறிக்கையில் ஹரிஷ்ணவி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுக் கொலைசெய்யப்பட்மைக்கான தடயங்கள்...
ஊடாக அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ளும் வகையில் ஆற்றல் உள்ள இளைஞர்களை தெரிவுசெய்யும் நேர்முகத்தேர்வு மட்டக்களப்பில் இடம்பெற்றது.
Thinappuyal -
இளைஞர்கழகங்கள் ஊடாக அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ளும் வகையில் ஆற்றல் உள்ள இளைஞர்களை தெரிவுசெய்யும் நேர்முகத்தேர்வு இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள இளைஞர்கழகங்கள் ஊடாக அபிவிருத்தியை நோக்காக கொண்டு இந்த பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதன்கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் 44 இளைஞர் கழகங்களை தெரிவுசெய்யும் வகையிலான நேர்முகத்தேர்வுகள் இன்று காலை முதல் மட்டக்களப்பில் உள்ள தேசிய இளைஞர் சேவைகள் மன்ற தலைமையகத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட உதவி அரசாங்க அதிபர் எஸ்.ரங்கநாதன் உள்ளிட்ட...
கண் பார்வை அற்றோர் கிரிக்கெட் விளையாடுகின்றார்கள் என்றால் அது நம்புவது கடினம். ஆனால் அவ்வாறானதொரு புதிய முயற்சியை இலங்கைத் தீவின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் வாழும் தமிழ் மாற்றுத் திறனாளிகள் முன்னெடுத்துள்ளனர்.
ஓசை கொண்ட பந்து அவர்களுக்கு உதவுகின்றது. விழிப்புலன் பாதிக்கப்பட்டோர் விளையாடும் சத்தப்பந்து கிரிக்கெட் போட்டி இன்று பரந்தன் இந்து மகா வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது.
யாழ் விழிப்புலனற்றோர் சங்கத்தின் இணைப்பில் உரிமை நிறுவனம் நடத்தும் தமிழ் மாற்றுத்திறனாளிகளுக்கான...