ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் மக்ளிர் இரட்டையருக்கான டென்னிஸ் போட்டியில் முதல் சுற்றுலேயே அமெரிக்காவின் வில்லியம் சகோதரிகள் வெளியேறியுள்ளனர். பிரேசிலின் ரியோ டி ஜெனீரோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில் இன்று நடைபெற்ற மகளிர் இரட்டையருக்கான போட்டியில் அமெரிக்காவின் வில்லியம் சகோதரிகள், செக் குடியரசின் லூசி சபரோவா மற்றும் பர்போரா ஆகியோரிடம் வெற்றியை பறிகொடுத்துள்ளனர். ஆட்டத்தின் துவக்கம் முதலே ஆவேசத்துடன் ஆடிய செக் குடியரசு இணை முதல் செட்டை 6-4 என்ற புள்ளிக்...
சுவிட்சர்லாந்து நாட்டில் விவசாயம் செய்த பெற்றோருக்கு உதவ சென்ற மகன் பள்ளத்தில் விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுவிஸின் St. Gallen மாகாணத்தில் உள்ள Ganterschwil என்ற பகுதியில் தான் இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. நேற்று முன் தினம் தோட்டத்தில் பெற்றோர் விவசாயப் பணியில் ஈடுப்பட்டு வந்துள்ளனர். பெற்றோருக்கு உதவுவதற்காக அவர்களுடைய 28 வயதான மகன் ட்ராக்டர் வாகனத்தில் சென்றுள்ளார். நிலத்தில் உள்ள தேவையற்ற களைகளை நீக்கும் பணியில் அவர் ஈடுப்பட்டு...
சர்வேதச அளவில் அல்-கொய்தா, ஐ.எஸ் உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளால் எந்த நேரத்திலும் தாக்குதலை அச்சத்துடன் எதிர்கொண்டுள்ள நாடுகளின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. 2015 மற்றும் 2016 வரை பிரான்ஸ், ஜேர்மனி, பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கான அப்பாவிகள் கொல்லப்பட்டனர். எனினும், இந்த நாடுகளை விட தற்போது வேறு சில நாடுகளும் தீவிரவாத தாக்குதலை அச்சத்துடன் எதிர்க்கொண்டுள்ளன. Global Terrorism Index என்ற இணையத்தளம் அண்மையில் ஆய்வு மேற்கொண்டு தீவிரவாத...
மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெறும் அத்துமீறிய குடியேற்றத்தை தடுக்க பலர் ஆர்வம் காட்டவில்லை என கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி. துரைராஜாசிங்கம் தெரிவித்தார். செங்கலடி ஏறாவூர்பற்று பிரதேச செயலகத்திற்குப்பட்ட வந்தாறுமூலை வேக்கவூஸ் வீதி புனரமைப்பு வேலைத்திட்டம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வின் போது உரையாற்றுகையிலேயே இவர் இதனைக் கூறினார். மேலும், அம்பாறையில் இருந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்பான்மைச் சமூகத்தினர் அத்துமீறிய குடியேற்றங்களை மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கு வன பரிபாலனசபைக்கு...
அரியாலை புங்கங்குள சந்தியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். எதிர்பாராத விதமாக இடம்பெற்ற இவ் விபத்தில் விபத்துக்கு உள்ளானவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளதுடன் சாரதியிடம் விபத்து தொடர்பில் விசாரணை இடம்பெறுகிறது.
தமிழீழ விடுதலை புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டரின்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் வழக்கு ஒன்றுவவுனியா நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தாக்கல் செய்யப்பட்ட வழக்கிற்கு இணங்க, இந்த மாதம் 10ம் திகதி வவுனியாநீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு வவுனியா நீதிமன்றம் அறிவித்துள்ளது. பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தயா மாஸ்டர் மற்றும் ஜோர்ஜ் மாஸ்டருக்குஎதிராக முன்னதாக பல குற்றச்சாட்டுக்கள் தாக்கல் செய்யப்பட்ருந்ததாகதெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலை புலிகளின் முக்கிய அரசியல் ஆலோசகரான அன்டன்...
பாகிஸ்தான் நாட்டில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பயங்கர வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் 43 பேர் பலியாகியுள்ளதாகவும் பலர் படுகாயமடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தென் மேற்கு பாகிஸ்தானில் உள்ள Quetta என்ற நகரில் உள்ள மருத்துவமனையில் தான் இந்த தாக்குதல் நடந்துள்ளது. கடந்த திங்கள் அன்று Bilal Anwar Kasi என்ற வழக்கறிஞர் கொடூரமாக சுட்டு கொல்லப்பட்டார். இவரது சடலம் இன்று இம்மருத்துவமனைக்கு கொண்டு வந்த நேரத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடந்துள்ளது. தற்போது வரை...
தட்டுவன்கொட்டிக் கிராம மக்கள் தரித்து நின்று போக்குவரத்துச் செய்வதற்கு நிழல்குடை அமைக்கப்படாதமையால் அப்பகுதிப் பயணிகள் நடு வெய்யிலில் பேருந்துக்காகக் காத்து நின்று துன்பப்படுகின்றார்கள். கிளிநொச்சி மாவட்டத்தில் ஆனையிறவு தட்டுவன்கொட்டிக் கிராமம் ஏ-9 வீதியிலிருந்து 6 கிலோ மீற்றர் தூரத்திற்கப்பால் காணப்படுகின்றது. தட்டுவன்கொட்டிக் கிராம மக்கள் உழவு இயந்திரங்களைப் பயன்படுத்தியே ஏ-9 வீதி வரைக்குமான போக்குவரத்தை மேற்கொள்கின்றார்கள். கடந்த காலங்களில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினாலும் இக்கிராமத்திற்கான போக்குவரத்து முழுமையாகத் தடைப்பட்டு இக்கிராம மக்கள் பெரிதும்...
ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்திலே பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவது,அரசியல் கைதிகளை விடுதலை செய்வது போன்ற விடயங்கள் மிகத் தெளிவாகக்கூறப்பட்டுள்ள நிலையில் அதனைச் செய்வதாக அரசாங்கம் சர்வதேசத்திற்குஉறுதியளித்துள்ள போதும் இன்றும் அரசாங்கம் தனது வாக்குறுதியை நிறைவேற்றாமல்பின் வாங்கிச் செயற்படுவது துரதிஸ்டம் எனத் தெரிவித்தார் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன். சகல அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி அரசியல்கைதிகளை விடுதலை செய்வதற்கான...
யாழ்.புங்குடுதீவு மாணவி சி.வித்தியா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் வித்தியாவின் தாயாரை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பான வழக்கு அடுத்த தவணையில் பரிசீலணைக்கு எடுத்து கொள்ளப்படும் என ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதவான் வை.எம்.றியால் உத்தரவிட்டுள்ளார். மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அது தொடர்பான வழக்கு விசாரணை ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இவ் வழக்கிற்கு வருகை தரும் வித்தியாவின் தாயாரை மேற்படி வழக்கின் சந்தேக நபர்களின் உறவினர்கள் சிலர் அச்சுறுத்தியிருந்ததாக...