திருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி இரண்டு மாடுகளை இணைத்து கொண்டு சென்ற நபர் ஒருவரை நேற்று ஞாயிற்றுக்கிழமை(7) மாலையில் கைதுசெய்துள்ளதாக சேருநுவரப் பொலிஸார் தெரிவிக்கின்றனர். கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய ஒருவரையே பொலிஸார் கைது செய்துள்ளனர். சேருநுவர கங்கைப் பகுதியிலிருந்து கந்தளாய் பிரதேசத்துக்கு இரண்டு மாடுகளை இணைத்து அனுமதிப்பத்திரமின்றி கொண்டு சென்ற போது கைது செய்துள்ளதாக தெரிவிக்கின்றனர். குறித்த சந்தேகநபரை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார்...
அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மாலை நேரங்களில் தங்களின் நாய் குட்டிகளுடன் நடை பயிற்சி செல்வது வழமையான நிகழ்வாகும். அதனை பார்த்து பழகிய அமெரிக்க குடியுரிமையை கொண்டுள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, யானைக் குட்டியுடன் நடைபயிசியில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தாய் யானையை கொலை செய்து காட்டில் பிடித்த யானைக் குட்டியுடன் மாலை நேரத்தில் நடை பயிற்சி ஈடுபடும் பழக்கம் கொண்டிருந்ததாக கோத்தபாயவின் முன்னாள் மெய்க்காப்பாளர் தகவல் வெளியிட்டுள்ளார். கோத்தபாயவின்...
அரசியல் கைதிகளை உடனடியாக விடுவிக்ககோரி இன்று காலை யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் 08 கைதிகள் உணவு தவிர்ப்பு போராட்டத்தினை ஆரம்பித்துள்ளதாக சிறைச்சாலை அத்தியட்சகர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் கடந்த காலங்களில் சிறு குற்றங்களில் ஈடுபட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளே இன்று காலை 07 மணி முதல் சிறைச்சாலைக்குள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களில் மூன்று...
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிற்றூழியர்கள் இன்று காலை முதல் பணிப்பகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமது செயற்பாடுகளில் வைத்தியசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் தலையிடுவதாக கோரியும் தமக்காக நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பாளரை மாற்றக்கோரியும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை தாங்கள் கையெழுத்திடும்புத்தகத்தில் வைத்தியசாலையின் அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் கோடுகளை இட்டு தமது கடமைகளில் குறுக்கிட்டதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர். வைத்தியசாலை நிருவாகத்தின் உயர் அதிகாரிகளை தவிர வேறு யாரும் தமது கடமைகளில் குறுக்கிடமுடியாது எனவும்...
முல்லைத்தீவு, துணுக்காய் பகுதியில் குளக்கட்டுப் புனரமைப்புப் பணியில் ஈடுபட்டிருந்த கனரக வாகனம்விபத்துக்குள்ளானதில், அதன் சாரதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தட்டுவன்கொட்டியைச் சேர்ந்த 33 வயதான ச.உமாகாந்தன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். துணுக்காய் பகுதியிலுள்ள பட்டங்குளத்தின் குளக்கட்டுப் புனரமைப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த கனரக வாகனம் புரண்டதில், அதன் சாரதி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். ...
கிளிநொச்சி, மாவட்ட பொது வைத்தியசாலையின் சிற்றுண்டிச்சாலை பூட்டப்பட்டுள்ளமையால் நோயாளர்கள் பாரிய அசொளரியங்களை எதிர்நோக்கியுள்ளனர். கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில், பெருமளவான நோயாளர்கள், நோயாளர் விடுதிகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், வைத்தியசாலையின் சிற்றுண்டிச்சாலை இன்று காலை முதல்பூட்டப்பட்டுள்ளமையால் நோயாளர்கள் பாரிய பிரச்சினைக்கு முகங்கொடுத்துள்ளனர். கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலை ஏ-9 வீதியிலிருந்து 600 மீற்றர் தூரத்திற்கு அப்பால் அமைந்துள்ளது. எனவே, நோயாளர்கள் தமக்கு தேவையான அனைத்துப் பொருட்களையும் சிற்றுண்டிச்சாலையிலேயே பெற்றுக்கொள்கின்றனர். வைத்தியசாலையில் அமைந்துள்ள சிற்றுண்டிச்சாலை பூட்டப்பட்டமையால்...
இலங்கைச் சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை, 2015ம் ஆண்டு இறுதிக்குள் விடுதலை செய்து விடுவதாக அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேன வாக்குறுதி அளித்திருந்த போதிலும், அரசியல், சட்ட ரீதியான சிக்கல்களால் அவர்கள் விடுதலையாவதில் தாமதம் நீடிக்கிறது. சிறையில் உள்ள தங்களை விடுதலை செய்யுமாறு பல முறை விடுதலைப் புலிகள் உண்ணாவிரதம் மேற்கொண்டிருக்கிறார்கள்.ஆனால், ஒவ்வொரு முறையும் தங்களுக்கு ஆதரவாக அரசிடம் இருந்து வாக்குறுதிகள் வருவதால் போராட்டத்தை நிறுத்திக் கொள்ளும் அவர்கள்,...
சூழ்ச்சிகாரர்களுடன் இணைந்தே தாம் ஆட்சி செய்ததாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தென்கொரியாவின் சியோல் நகரில் இலங்கைகர்களை சந்தித்து நேற்று உரையாற்றிய போது இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், அந்தக் காலத்தில் எனது ஆட்சியின் கீழ் அமைச்சர்களாக பதவி வகித்தவர்கள் இந்த அரசாங்கத்திலும் அமைச்சுப் பதவி வகிக்கின்றனர். என்னுடன் இருந்து புகைப்படம் எடுத்துக் கொள்ள முயற்சித்த சில அமைச்சர்கள் இன்று மைத்திரியுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள முயற்சிக்கின்றனர். நான் பெற்றுக்கொண்ட கடன் தொகை நாட்டின்...
கொரியாவில் மீன்பிடித் தொழிலுக்காக சென்ற 6000 இலங்கையர்கள் தொழில் செய்யும் இடங்களை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் தலதா அதுகோரள இதனைத் தெரிவித்துள்ளார். அமைச்சின் கேட்போர்கூடத்தில் அண்மையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்…கொரியாவிற்கு மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதற்காக சென்ற 6000 இலங்கையர்கள் தாம் தொழில் செய்யும் இடங்களிலிருந்து தப்பிச் சென்று வேறும் தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். இரு நாடுகளுக்கும் இடையில்...
அரசாங்கம் விதித்துள்ள வற் வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகள் நாளை நாடு தழுவிய ரீதியில் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளனர். இதன்படி, நாளை முதல் கடைகளை மூடி வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக வர்த்தக சங்கங்கள் தெரிவித்துள்ளன. வர்த்தக சங்கங்களில் பதிவு செய்துள்ள சகல கடை உரிமையாளர்களும் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எந்தவித அறிவித்தலும் இன்றி நிதி அமைச்சர் வற் வரிச் சீர்திருத்தத்தை எதிர்வரும் 11ம் திகதி பாராளுமன்றத்தில்...