தேர்தல் முறை மாற்றம் குறித்த சிறபான்மை கட்சிகள் மற்றும் சிறுபான்மை சமூகத்தின் நிலைப்பாட்டை அறிந்து கொள்ளும் பொறுப்பு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சிறுபான்மை கட்சிகள் மற்றும் சிறுபான்மை சமூகத்தின் கருத்துக்களை கேட்டறிந்து விரிவான அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு அமைச்சரிடம் கோரப்பட்டுள்ளது. உத்தேச தேர்தல் முறைமை மாற்றம் குறித்து நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் மற்றும் வகிக்காத சிறுபான்மை அரசியல் கட்சிகள் மற்றும் சிறுபான்மை சமூகங்களிடம் கருத்து...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராபஜக்ஸவின் குடியுரிமையை பறிக்க சதித் திட்டம் தீட்டப்படுவதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார். மஹிந்தவின் குடியுரிமை பறிக்கப்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக சில தரப்பிலிருந்து வெளியாகும் செய்திகளை எளிதில் எடுத்துக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். கண்டி மல்வத்து பீடத்தை  இரண்டாக பிளவடையச் செய்ய மஹிந்த சதித் திட்டம் தீட்டியதாகவும் இது குறித்து விசாரணை நடத்த ஆணைக்குழு ஒன்றை நிறுவுமாறும்...
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் அறிக்கை வரவேற்கப்பட வேண்டியது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையிலான தேசிய ஐக்கியம் மற்றும் நல்லிணக்க அலுவலகம் தெரிவித்துள்ளது. காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு உதவிகள் வழங்கப்பட வேண்டுமென அண்மையில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மேற்கொண்ட ஆய்வு ஒன்றின் ஊடாக பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கை வரவேற்கப்பட வேண்டியது என தெரிவித்துள்ளது. காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு உதவிகளை வழங்கும் நோக்கில் நிறுவனம் பல்வேறு...
மூதூர் தன்னார்வ தொண்டர் படுகொலை சம்பவம் தொடர்பில் விசாரணைகளை துரிதப்படுத்துமாறு பிரான்ஸின் எக்செய்ன் எகேய்ன்ஸ்ட் ஹங்கர் என்ற அமைப்பு அரசாங்கத்திடம் கோரியுள்ளது. பத்து ஆண்டுகளுக்கு முன்னதாக நிறுவனத்தின் 17 தன்னார்வ தொண்டர்கள் கூட்டுப்படுகொலை செய்யப்பட்டிருந்தனர். இந்த சம்பவம் இடம்பெற்று பத்து ஆண்டுகள் பூர்த்தியாகும் நிலையில் குறித்த தன்னார்வ தொண்டு நிறுவனம் மீளவும் நம்பகாமன விசாரணைகளை நடத்துமாறு தற்போதைய அரசாங்கத்திடம் கோரியுள்ளது. தண்டனை விதிக்கும் பாணியில் மேற்கொள்ளப்பட்ட இந்த படுகொலைகள் தொடர்பில் இதுவரையில் எவரும்...
இலங்கையில் யுத்தம் முடிவிற்கு பின்னர் வர்த்தக ரீதியிலான வியாபாரங்களையும் அதனுடைய நிலைமைகளை ஆராயும் வகையில் அதனுடைய செயலாளர் விஜயம் மேற்கொள்கிள்கின்றார். இவர் ஆகஸ்ட் மாதம் 11இ12 திகதி வரையிலும் இலங்கையில் தங்கி இருந்து இலங்கையில் இருக்கக்கூடிய வர்த்தக முதலீட்டாளர்களுடனும் அரச தரப்பினருடனும் கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.இதில் முக்கியமாக இலங்கையின் எதிர்கால பொருளாதாரம் தொடர்பாகவும் ஆராயப்படும் என எதிர் பார்க்கப்படுகிறது.  
இறுதி யுத்தத்தில் புனர்வாழ்வின் பின்னர் விடுவிக்கப்பட்ட அனைத்து முன்னாள் போராளிகளினதும் பரிசோதனையை மூன்றாம் தரப்பு (வெளிநாட்டு) பிரசன்னத்துடன் அரசாங்கம் செய்து முடித்து, அந்த அறிக்கையை பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் இன்று தெரிவித்தார். நாட்டில் ஏற்பட்டுள்ள விஷ ஊசி விவகாரம் தொடர்பிலும் அது தொடர்பான விரைந்த செயற்பாட்டின் முக்கியத்துவம் குறித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன்...
வவுணதீவு மண்முனை மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட மங்கிகட்டு - வவுணதீவு குறுக்கு வீதியினை புனரமைப்பு செய்யும் பணியினை பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவருமான ஞா.ஸ்ரீநேசன் பார்வையிட்டனர். மங்கிக்கட்டு, ஈச்சந்தீவு, நாவற்காடு, கிராம மக்கள் மண்முனை மேற்கு பிரதேச செயலகம் மற்றும் அதனோடு இணைந்துள்ள அலுவலகங்கள் மற்றும் வவுணதீவு – ஆயித்தியமலை வீதியை இலகுவாக சென்றடைவதற்கு வசதியாக, மங்கிகட்டு - வவுணதீவு குறுக்கு விதீயினை புனரமைப்பு செய்யும் வேலையினை...
செங்கலடி ஆண்டார்குளம் ஸ்ரீ நாகதம்பிரான் நாகபூசணி அம்பாள் ஆலய வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு பால்குட பவனி நடைபெற்றது. இதன்போது கொம்மாதுறை மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தில் பூசைகள் இடம்பெற்று பின்னர் சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரை தலையில் பால்குடமேந்தி ஆலயத்தில் இருந்து புறப்பட்டு கொம்மாதுறை பிரதான வீதி, செங்கலடி சந்தை வீதி வழியாக வருகை தந்து ஆலயத்தை சென்றடைந்தனர். இதன்போது இறுநூறுக்கு மேற்பட்டோர் தங்களுடைய நேர்த்திக் கடனை நிறைவேற்றும் பொருட்டு கலந்து கொண்டிருந்தனர். இவ்...
கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமாரின் ஏற்பாட்டில் விசேட மக்கள் சந்திபொன்றுக்கு எதிர்வரும் 8 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 10 முதல் 2 மணி வரை கண்டி பேராதெனிய வீதியிலுள்ள இந்து இளைஞர் மன்றத்தில் இந்த சந்திப்பு ஏற்பாடாகியுள்ளது. இந்நிகழ்வில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் தேசிய சகவாழ்வு அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன், கூட்டணியின் உபதலைவரும் மலையக புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு சமூக அபிவிருத்தி...
இயக்குநர் விஜய் - நடிகை அமலா பால் ஆகிய இருவரும் 2014-ம் ஆண்டு சென்னையில் திருமணம் செய்துகொண்டார்கள். இது காதல் திருமணம் ஆகும். இந்நிலையில் இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளதால் விரைவில் விவாகரத்து செய்ய உள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. அமலா பால் திருமணத்துக்குப் பிறகு தொடர்ந்து சினிமாவில் நடித்துவருவதால் இதுதொடர்பாக இருவருக்கும் இடையே பூசல்கள் ஏற்பட்டுள்ளதாகச் சொல்லப்பட்டது. இயக்குநர் விஜய்யின் தந்தையும் தயாரிப்பாளருமான ஏ.எல். அழகப்பன் இதுபற்றி கூறும்போது:...