விக்ரம் நடித்துள்ள இருமுகன் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் இயக்குநர் ஹரி பேசியபோது விக்ரமுடன் இணைந்து சாமி 2 படத்தை விரைவில் தொடங்க உள்ளதாகத் தெரிவித்தார். படத்தை ஷிபு தமீன்ஸ் தயாரிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசை, பிரியன் ஒளிப்பதிவு என்கிற கூடுதல் தகவல்களையும் அளித்தார். இதற்கு முன்பு வெளிவந்த இரு பாகங்களும் வெற்றி பெற்றதால் சூர்யா - இயக்குநர் ஹரி கூட்டணியில் எஸ் 3 (சிங்கம் 3) உருவாகி வருகிறது....
காத்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் படத்தில் ராதிகா ஆப்தே நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளன. கார்த்திக் சுப்புராஜுடன் இணைந்து படம் பண்ணவுள்ளதாகச் சமீபத்தில் அறிவித்தார் தனுஷ். ஆனால் கதாநாயகி பற்றிய தகவல் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் கபாலி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த ராதிகா ஆப்தா, இந்தப் படத்தில் தனுஷின் ஜோடியாக நடிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த அதிகார அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வீரம், வேதாளம் படங்களுக்குப் பிறகு இயக்குநர் சிவாவுடன் இணைந்து மற்றொரு படத்தில் பணியாற்றுகிறார் அஜித். இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். தல 57 என்று தற்போதைக்குக் குறிப்பிடப்படும் இப்படத்தில் அக்‌ஷரா ஹாசன் நடிக்கிறார். ஏற்கெனவே பாலிவுட்டில் அறிமுகமாகியுள்ள அக்‌ஷரா, தமிழில் அறிமுகமாகும் படம் இது. இதுதவிர, அவருடைய தந்தை கமல் நடித்து இயக்கும் சபாஷ் நாயுடு படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். தல 57 படத்தில் காஜல் அகர்வாலும் மற்றொரு கதாநாயகியாக...
பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா ஆகியோர் நடிப்பில் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவான படம் - பாகுபலி. இதனை இயக்கியவர், ராஜமெளலி. ரூ. 600 கோடி வரை வசூலித்து பல சாதனைகளைச் செய்த பாகுபலியின் 2-ம் பாகத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பாகுபலி 2 படம் வெளிவருகிற தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2017 ஏப்ரல் 28 அன்று படம் வெளிவருகிறது. கோடைக்கால விடுமுறை...
ரியோ ஒலிம்பிக்கில் சனிக்கிழமை நடைபெறும் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் ஆடவர் 10 மீ. ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் ஜிது ராய், குருபிரீத் சிங் ஆகியோர் களம் காண்கின்றனர். இதில் 29 வயது ராணுவ வீரரான ஜிது ராய், தங்கப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி அவர் வெல்லும்பட்சத்தில் தனிநபர் பிரிவு மற்றும் துப்பாக்கிச் சுடுதலில் தங்கம் வென்ற 2-ஆவது இந்தியர் என்ற...
ஒலிம்பிக் வில்வித்தைப் போட்டியில் 72 அம்புகள் எய்தல் போட்டியின் ரேங்கிங் சுற்றில் தென் கொரியாவைச் சேர்ந்த உலக சாம்பியனான கிம் ஊ ஜின் 700 புள்ளிகளைப் பெற்று உலக சாதனை படைத்துள்ளார். இதன்மூலம் ரியோ ஒலிம்பிக்கில் உலக சாதனைபடைத்த முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார் கிம். முன்னதாக 2012-இல் நடைபெற்ற லண்டன் ஒலிம்பிக்கில் தென் கொரியாவின் மற்றொரு வீரரான டாங் ஹியூன் 699 புள்ளிகளைப் பெற்றிருந்ததே சாதனையாக...
உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவான ரியோ ஒலிம்பிக் போட்டி மரக்காணா மைதானத்தில் சனிக்கிழமை அதிகாலையில் தொடங்குவதையொட்டி பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரம் வெள்ளிக்கிழமை விழாக்கோலம் பூண்டிருந்தது. 206 நாடுகளைச் சேர்ந்த 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள், அவர்களுடைய பயிற்சியாளர், அதிகாரிகள் மற்றும் வெளிநாட்டினர் என ரியோவில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. 28 விளையாட்டுகளில் 306 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்தப் போட்டிகள் 34 மைதானங்களில் நடத்தப்படுகின்றன....
  உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவான ரியோ ஒலிம்பிக் போட்டி மரக்காணா மைதானத்தில் அதிகாலை அமர்க்களமாகத் தொடங்கியது. இதனையொட்டி, பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரம் விழாக்கோலம் பூண்டது. 31-வது ஒலிம்பிக் போட்டியான ரியோ ஒலிம்பிக், இந்திய நேரப்படி இன்று அதிகாலை 4.30 மணிக்கு (பிரேசில் நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு 8 மணி) தொடங்கியது. தொடக்க விழா நடைபெற்ற மரக்காணா மைதானத்தில் 75 ஆயிரம் பேர் அமர்ந்து நிகழ்ச்சியை ரசித்தார்கள். 3...
உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவான ரியோ ஒலிம்பிக் போட்டி மரக்காணா மைதானத்தில் அதிகாலை அமர்க்களமாகத் தொடங்கியது. இதனையொட்டி, பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரம் விழாக்கோலம் பூண்டது. 31-வது ஒலிம்பிக் போட்டியான ரியோ ஒலிம்பிக், இந்திய நேரப்படி இன்று அதிகாலை 4.30 மணிக்கு (பிரேசில் நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு 8 மணி) தொடங்கியது. தொடக்க விழா நடைபெற்ற மரக்காணா மைதானத்தில் 75 ஆயிரம் பேர் அமர்ந்து நிகழ்ச்சியை ரசித்தார்கள். 3 மணி...
நுவரெலியாவில் நேற்று ஒரே குடும்பத்தை சேர்ந்த ஏழு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது யாரும் அறிந்த விடயம். அங்கு காத்திருந்த குடும்பத்தாரின் அவலக்குரல் யாரும் அறிந்திடாத ஒன்று. நேற்று காலை 11 மணியிலிருந்து மாலை 6 மணிவரை கைக்குழந்தைகளுடன் நீதிமன்ற வாசலில் காத்திருந்த உறவினர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினார்கள். தண்டனை விதிக்கப்பட்டவர்களின் முகத்தைக் கூடப் பார்க்க முடியாமல் உறவினர்கள் தவித்தார்கள். குறித்த எழுவரில், சகோதரர்கள் ஒருவருக்குக் கூட ஆண் வாரிசுகள் இல்லை என்பதும்,...