சசிகலா புஷ்பா விவகாரத்தில் "பிலால்" "ஆனந்த்சர்மா"...... புதிய தகவல்கள்அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பாவுக்கு மிக நெருக்கமானவராக பிலால் என்பவரும் இருந்ததாக புதிய தகவலும் படங்களும் வெளியாகி உள்ளன. அத்துடன் காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா கொடுத்த ஐடியாவின் பேரில்தான் ராஜ்யசபாவில் ஜெயலலிதா தம்மை அடித்ததாக சசிகலா புஷ்பா பேசியதாகவும் கூறப்படுகிறது. டெல்லி விமான நிலையத்தில் திமுக எம்பி திருச்சி சிவாவை சரமாரியாகத் தாக்கினார்...
இறுதி யுத்ததின் போது இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டு புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகளின் மரணங்கள் தொடர்ந்துகொண்டுள்ளன. இவ்விடயம் தொடர்பாக புனர்வாழ்வு பெற்ற போராளிகளை சர்வதேசத்தின் உதவி கொண்டு பரிசோதனை செய்வதற்கு ஒன்றுதிரண்டு குரல்கொடுக்க வேண்டும் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருனாகரம் தெரிவித்தார். மட்டக்களப்பு – ஆறுமுகத்தான் குடியிருப்பு கனிஷ்ட வித்தியாலய வகுப்பறைக் கட்டத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். பாடசாலை அதிபர் எஸ்.உதயகுமார் தலைமையில்...
ஈழத்தின் மூத்த அரசறிவியலாளர் மு.திருநாவுக்கரசு (திரு மாஸ்டர்) எழுதிய இலங்கை அரசியல் யாப்பு (டொனமூர் யாப்பு முதல் உத்தேச சிறிசேன யாப்புவரை 1931 – 2016) நூல் வெளியீட்டு விழா இன்று 06ஆம் திகதி சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு வவுனியா சிந்தாமணி பிள்ளையார் ஆலய கலாமண்டபத்தில் ஆரம்பமானது. வவுனியா தமிழ்ச் சங்கத்தின் ஸ்தாபகரும், செயலாளருமான தமிழருவி சிவகுமாரன் தலைமையில் இந்நூல் வெளியீட்டு விழா இடம்பெற்று வருகின்றது. நூலினை பேராசிரியர் சிற்றம்பலம்...
அவுஸ்ரேலிய அணியானது இங்கைக்கு 3 டெஸ்ட் 5 ஒரு நாள் 2 இருபதுக்கு இருபது போட்டிகளில் பங்கேற்க கடந்த யூலை மாதம் இலங்கை வந்தது. அதன் அடிப்படையில் 1வது டெஸ்ட் போட்டியானது கண்டி பல்லேகல மைதானத்தில் நடைபெற்றது. அப்போட்டியில் இலங்கை அணியானது 106 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியது. அண்மைக்காலத்தில் தொடர்ச்சியான தோல்விகளை கண்டு வந்த இலங்கை அணிக்கு இவ் வெற்றியானது மிகப்பெரிய உந்து சக்தியை கொடுத்தது. தொடர்ந்து 2வது டெஸ்ட்...
மாத்தளை மாவட்ட விவசாயதுறை பயிற்சி நிலையத்திற்கான புதியகட்டிடத்திற்கான  அடிக்கல் நாட்டுவிழா 04.08.2016 வியாழக்கிழமை நடைபெற்றது மத்திய மாகாண விவசாய இந்துகலாசார அமைச்சின் 55 லட்சம் ரூபாய் நிதியொதுக்கீட்டில் நிர்மாணிக்கப்படவுள்ள புதிய பயிற்சி நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் மத்திய மாகாண ஆளுனர் நிலூக்கா ஏக்கநாயக்க மத்திய மாகாண விவசாய அமைச்சர் எம் ராமேஸ்வரன் அமைச்சின்! அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.                ...
ராஜபாளையத்தில் தொழிலாளி ஒருவர் தனது மனைவி மகளை விஷம் கொடுத்து கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்டார். தொழிலாளி விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் லட்சுமியாபுரத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 35). இவருக்கும் கல்லுப்பட்டியைச் சேர்ந்த சங்கரேஸ்வரிக்கும் 7 வருடங்களுக்கு முன்புதிருமணம் நடந்தது. இவர்களது ஒரே மகள் தேவதர்ஷினி (வயது 6) தனியார் பள்ளியில் 2–ம் வகுப்பு படித்து வந்தாள்.சில ஆண்டுகள் வெளிநாட்டில் வேலை பார்த்த செந்தில்குமார் தற்போது கூலி வேலை பார்த்து...
சுனாமி காரணமாக தனது தந்தையிடமிருந்து பிரிந்த மகள் 12 வருடங்களின் பின்னர் மீளத் திரும்பியுள்ளார். நாட்டில் பல ஆயிரம் உயிர்களைக் காவுகொண்டு, இலங்கையர்கள் அனைவரின் கண்களிலும் கண்ணீரைக் கசிய வைத்தே, 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி நிறைவுற்றது. தனது தந்தையுடன் ஹம்பாந்தோட்டைக்கு சென்ற ஷரீஃபாவை, இந்த பாரிய அலை பிரித்த சந்தர்ப்பத்தில், அவளுக்கு மூன்று வயதாகும். அன்றிலிருந்து ஷரீஃபாவின் பெற்றோர் தமது மகளைத் தேடுவதற்கான அனைத்து முயற்சிகளையும்...
இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் 75 பேர் எதிர்வரும் 9 ஆம் திகதி இலங்கை வரவுள்ளனர். குறித்த விடயத்தை சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. வவுனியா, முல்லைத்தீவு,திருகோணமலை மற்றும் மன்னார் பிரதேசங்களை சேர்ந்தவர்களே இவ்வாறு அழைத்துவரப்படவுள்ளனர். அழைத்துவரவுள்ளவர்களில் 43 ஆண்களும் 32 உள்ளடங்ககின்றனர்.
இலங்கையின் முன்னாள் மற்றும் சமகால ஜனாதிபதிகளின் புதல்வர்களுக்கிடையில் அதிகார மோதல் நிலை தீவிரம் பெற்றுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் நாமல் ராஜபக்ஷவுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புதல்வர் தஹாம் சிறிசேனவுக்கும் இடையில் போட்டி நிலை அதிகரித்துள்ளது. தஹாம் சிறிசேன பொலன்னறுவை ஏரிக்கு அருகில் BMW மோட்டார் வாகனத்தில் சாகசம் செய்வது போன்ற காணொளி ஒன்று இணையத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த காணொளி மஹிந்த ராஜபக்சவுக்கு நெருக்கமான ஒருவரின் பேஸ்புக் பக்கத்தில் பிரச்சாரம்...
பழம் பெரும் திரைப்பட இயக்குநர் வியட்நாம் வீடு சுந்தரம் சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது வீட்டில் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். 1970 ஆண்டு வியட்நாம் வீடு எனும் வெற்றி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் சுந்தரம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். இவர் எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் என பல பிரபலங்களுடன் பணியாற்றியுள்ளார். நடிகர், எழுத்தாளர் என பன்முகம் கொண்ட சுந்தரம், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.