கொழும்பு நகர அதிகார பிரதேசத்தில் குறைந்த வசதிகளுடைய வீடுகளில் வாழும் மக்களுக்காக
நிர்மாணிக்கப்பட்ட சியசெத்த தொடர் மாடி வீட்டுத் தொகுதி ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன
அவர்களினால் இன்று (05) பிற்பகல் மக்களிடம் கையளிக்கப்பட்டது.
13,300 இலட்சம் ரூபாய் முதலீடு செய்து நிர்மாணிக்கப்பட்ட சியசெத்த செவன தொடர் மாடி வீட்டுத் தொகுதி
மொத்தம் 266 வீடுகளைக் கொண்டுள்ளது. வீடொன்றுக்காக நகர அபிவிருத்தி அதிகார சபை 05 மில்லியன்
ரூபாய் முதலீடு செய்துள்ளது. ஒவ்வொரு வீடும் 450...
அனுமதிபத்திரமின்றி மதுபானபோத்தல்கள் 25 கொண்டு சென்ற ஒருவரும் விற்பனையாளரும் கைது
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன்
அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக 25 மதுபானபோத்தல்களை கொண்டு சென்ற நபர் ஒருவரையும் விற்னையாளரையும் அட்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர்
06.08.2016 சனிக்கிழமை அதிகாலை அட்டனிலிருந்து டிக்கோயா பகுதிக்கு முச்சக்கரவண்டியில் கொண்டு சென்ற போதே மேற்படி மதுபோத்தல்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அதிகாலை மதுபானசாலையை திறந்து மதுபான போத்தல்களை விற்பனை செய்த மதுபானசாலை முகாமையாளரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்...
இந்து மக்களின்; வாழ்வில் ஆடி மாதம் முக்கியமான மாதமாகும். ஆடிப் பிறப்பு, ஆடி அமாவாசை, ஆடிப் பெருக்கு, ஆடிப் பூரம் என்பன ஆடி மாதத்தில் வரும் விஷேட தினங்களாகும். அந்த வகையில் ஸ்ரீ அம்மனுக்கு உகந்த நாளான ஆடி பூரத்திருவிழா புஸ்ஸல்லாவை வாடித்துரை தோட்டம் ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயத்தில் கொண்டாடப்பட்டது. இவ் விழாவில் அபிஷேகம், அலங்காரம், ஆராதனை, ஹோமம் வளர்த்தல், போன்ற பூஜைகள் நடைப்பெற்றன. தோட்ட மக்களால்...
முன்பள்ளி ஆசிரியர்களை வடமாகாணசபை முற்றாக உள்வாங்க வேண்டும். வைத்திய கலாநிதி சி.சிவமோகன் நாநாட்டானில் பேச்சு
Thinappuyal News -
நேற்றைய நாள் நாநாட்டான் ஆரோக்கிய அன்னை மாதா ஆலயத்தில் நடந்த முன்பள்ளிகளுக்கிடையேயான வருடாந்த விளையாட்டு போட்டிகளில் நாநாட்டான் இந்து முன்பள்ளி, அச்சங்குளம் புனிதவளனார் முன்பள்ளி, இராசமடு ஸ்ரீ கணேசா முன்பள்ளி, நாநாட்டான் மரியாய் முன்பள்ளி என்பன பங்குபற்றின. இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக கலந்து கொண்ட வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,
இன்று முன்பள்ளிகள் உரிய நிர்வாக அலகுகள் இன்றி விடப்பட்டுள்ளன....
கல்வியிலலும் கலாச்சாரத்திலும் சிறந்து விளங்கிய யாழ் மக்களின் கல்வித்தடைக்கு இன்று பல காரணிகள் தடையாக உள்ளன. அதில் தற்பொழுது முக்கியமாகவிருப்பது. ஆலயங்களிலிருந்து கட்டுப்பாடின்றி அலறும் ஒலிபெருக்கிகள்.
யாழ்பாணத்தின் குறிப்பாக வலிகாமம் மேற்கு (சங்கானை) மற்றும் வலிகாமம் தென்மேற்கு (சண்டிலிப்பாய்) ஆகிய பிரதேச செயலக பிரிவுகளிற்கு உட்பட்ட ஆலயங்களில் நீண்டகாலமாக டசின்கணக்கான ஒலிபெருக்கிகள் அதிகரித்த இரைச்சலுடன் கிலோமீற்றர் கணக்கிற்கு பொருத்தி அலறவிடுவதனால் அப்பகுதி மாணவர்களும் சிறுவர்களும் நோயாளர்களும் தொடரந்து பாதிக்கப்பட்டுவருவது ஊடகங்கள்...
பாதுகாப்பு முழுமையாக உறுதி செய்யப்பட்டுள்ளது நம்பிக்கையுடன் கல்வி நடவடிக்கைகளுக்கு மீண்டும் வருகை தாருங்கள் யாழ் பல்கலைக்கழக மாணவர்களிடம் சட்டமும் ஒழுங்கும் தொடர்பான அமைச்சின் செயலாளர் கோரிக்கை.
Thinappuyal News -
யாழ் பல்கலைக்கழகத்தின் நிர்வாக அதிகாரிகள், மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட சகல
தரப்பையும் உள்ளடக்கிய வகையில் நேற்று (04) ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன
அவர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் பெறுபேறாக உள்ளக மாணவர்களுக்கான
சகல விதமான பாதுகாப்புகளும் பலப்படுத்தப்பட்டுள்ளபடியால், பல்கலைக்கழக கல்வி
நடவடிக்கைகளுக்காக மீண்டும் வருகை தருமாறு சட்டம் ஒழுங்கு தொடர்பான அமைச்சின்
செயலாளர் எல்லா மாணவர்களிடமும் கேட்டுக்கொண்டுள்ளார்.
யாழ் பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட மாணவர்களுக்கிடையிலான கோஷ்டி மோதல்
தொடர்பாக அரசாங்கம் ஆரம்பத்திலேயே கவலை வெளியிட்டிருந்ததோடு, இத்தகைய
அசம்பாவித நிகழ்வுகள் நடைபெறக்கூடாது என்பதில்...
மஸ்கெளியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மொக்கா தோட்டத்தில் ஐவர் குளவி கொட்டுக்கு இழக்காகியுள்ளனர்
தேயிலை மலையில் கொழுந்து பரித்துக்கொண்டிருந்த பெண் தொழிலாளர்களே 06.08.2016 சனிக்கிழமை காலை 10 மணியளவில் குளவி தாக்குதலுக்கு இழக்காகினர்
பாதிக்கப்பட்டவர்கள் மஸ்கெளியா வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டு இருவர் சிகிச்சையின் பின் வீடுதிரும்பியதாகவும் மேலும் மூவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்திய அதிகாரிகள் தெரிவித்தனர்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து கூட்டாக ஆட்சி செய்யும் வகையில் மற்றுமொரு உடன்படிக்கை
Thinappuyal -
தேசிய அரசாங்கத்திற்கு ஒரு ஆண்டு பூர்த்தியான பின்னர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து கூட்டாக ஆட்சி செய்யும் வகையில் மற்றுமொரு உடன்படிக்கையை கைச்சாத்திட உள்ளதாக அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அரசாங்கத்தின் உண்மையான பங்காளி இல்லை என சிலர் முன்னெடுத்து வரும் பொய் பிரச்சாரத்திற்கு இந்த புதிய உடன்படிக்கை மூலம் பதில் கிடைக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த...
சமாதானம் உருவாக வேண்டுமானால் முதலில் ஒரு சூழல் உருவாக்கப்படவேண்டும் – வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன்
Thinappuyal -
வடமாகாணத்தில் சமாதானத்திற்கான சூழல் உருவாக்கப்படாமலேயே நல்லிணக்கம், சமாதானத்திற்காக பல நடவடிக்கைகளை அரசு தான்தோன்றித்தனமாக எடுக்கின்றது. ஆனால் நல்லிணக்கம், சமாதானம் உருவாக வேண்டுமானால் முதலில் ஒரு சூழல் உருவாக்கப்படவேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
முதலமைச்சரின் அலுவலகத்தில் இன்று காலை 9 மணியளவில் ஐரோப்பிய யூனியன் பிரதிநிதியை சந்தித்து கலந்துரையாடிய போதே இவ்வாறு கூறினார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பு அதிகாரி யோடி கரஸ்கோ முனாஸ், இலங்கையில் சமாதானம் குறித்து அரசாங்கம் எடுக்கும்...
அரசாங்கம் கோரிக்கைகளுக்கு நியாயமான பதில் வழங்குவதை ஒதுக்கி வைத்து விட்டு வேலை நிறுத்தப் போராட்டங்கள் மீது அடக்குமுறையை ஏவி, தொழிலாளர்களின் உரிமைகளை அடக்க முயற்சித்து வருவதாக தொழிலாளர் போராட்ட மத்திய நிலையத்தின் ஒருங்கிணைப்பாளர் துமிந்த நாகமுவ தெரிவித்துள்ளார்.
அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள துமிந்த நாகமுவ, கல்விசார ஊழியர்கள் முன்வைத்துள்ள சம்பளப் பிரச்சினைக்கு நியாயமான பதில் கிடைக்காத காரணத்தினால், அவர்கள் மேற்கொண்டு வரும் பணிப்புறக்கணிப்பு போராட்டம் 7 நாட்களையும் தாண்டி நடந்து...