தண்ணீரைப் போல பால் என்பது ஓர் எளிய திரவம் கிடையாது. பாலில் நீர், கொழுப்பு, புரதம், கார்போஹைட்ரேட், தாதுப் பொருள்கள் உள்ளன. பாலைக் கொதிக்க வைக்கும் போது தனது கொதிநிலையை அடையும் நீர், கொதித்து நீராவியாக மாறுகிறது. அதேநேரத்தில் கொழுப்பு, புரதம் போன்றவை தனியாகப் பிரிந்து பாலின் மேல்புறத்தில் ஆடையாக படர்கின்றன. அந்த நேரத்தில் நீராவி மேல் நோக்கி ஆவியாகச் செல்கிறது. ஆனால், அந்த நீராவியை மேலே செல்லவிடாமல் பாலில் படர்ந்துள்ள பாலாடை தடுக்கிறது. அப்போது...
அப்பிள் நிறுவனத்தின் புதிய வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ள iPhone 7 தொடரிலான கைப்பேசிகள் வெளியாகுவதற்கு இன்னும் ஒரு மாதங்களே இருக்கின்றன. இந் நிலையில் இவை அனைத்து கைப்பேசி பிரியர்களினதும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ள நிலையில் நாளுக்கு நாள் அவற்றின் சிறப்பம்சங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன. இவற்றின் தொடர்ச்சியாக தற்போது பிரதான நினைவகத்தின் அளவு (RAM) 3GB ஆக இருக்கும் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஐபோன்களில் 2GB கொள்ளளவுடைய பிரதான...
ஆரம்ப வகுப்புக்களில் நான்கு வர்ணங்களை ஒருங்கே கொண்ட பால்ட் பாயிண்ட் பேனாக்களை பயன்படுத்தியது அனைவருக்கும் நினைவிருக்கும். அதன் பின்பு 10 வர்ணங்களைக் கொண்ட பேனாக்களும் அறிமுகமாகியிருந்தன. ஆனால் தற்போது சுமார் 16 மில்லியன் வர்ணங்களில் எழுதக்கூடிய இலத்திரனியல் பேனா ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. Cronzy பேனா 2 டொலர்கள் மட்டுமே பெறுமதி உடையதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப் பேனாவால் தொடர்ந்து 500 மீற்றர்கள் தூரம் வரை எழுதமுடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இப் பேனா Li-Po...
மனிதனின் அன்றாட செயற்பாட்டில் மூளை முக்கிய இடத்தைப் பெறுகின்றது என்பதை அறிந்திருப்பீர்கள். ஆனால், அந்த மூளையின் செயற்பாட்டில் உடல் நிறை பாரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றது என்பதை அறிவீர்களா? ஆம், ஒரே வயதை உடையவர்களில் உடல் நிறை குறைந்த ஒருவருடைய மூளையின் செயற்பாட்டினை விட உடல் நிறை கூடிய ஒருவரின் மூளையின் செயற்பாட்டில் 10 வருடங்கள் முதுமை அடைந்த அறிகுறிகள் காணப்படும் என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கேம்பிரிஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலேயே இந்த...
கொடி வகையைச் சேர்ந்த பாகற்காயில் சுவை என்னவோ கசப்பாக இருந்தாலும் எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது. இதில் கால்சியம், பாஸ்பரஸ், புரோட்டின், கொழுப்புச்சத்து, இரும்புச்சத்து, மினரல்ஸ், பி காம்ளெக்ஸ், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட் மற்றும் சிறிதளவு விட்டமின் C போன்ற சத்துகள் நிறைந்துள்ளது. மருத்துவ பயன்கள் சுவாசக் கோளாறுகளான ஆஸ்துமா, சளிப்பிடித்தல், இருமல் போன்ற நோய்களை தீர்ப்பதில் சிறந்த நிவாரணியாக பயன்படுகிறது. பாகற்காயின் சாற்றினை தினந்தோறும் குடித்து வந்தால் கல்லீரல் வலுப்படும், மேலும்...
பரதன் இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் விஜய்60'ல் நடிகை அபர்ணா வினோத் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சென்ற வாரம், விஜய்-60க்கு எங்கள் வீட்டு பிள்ளை என்று தலைப்பு வைக்கலாம் என்று பேசி வருகின்றனர் என பதிவிட்டிருந்தது படக்குழுவை கடும் அப்செட் ஆக்கியது. ஆனால் அது உண்மையில் அவருக்கு ட்விட்டரில் கணக்கே இல்லையாம். இவரின் பெயரில் விஷமிகள் சிலர் போலி ட்விட்டர் கணக்கை தொடங்கி, அதில் விஜய்60 படம் பற்றி...
அஜித் தற்போது சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க, அக்‌ஷ்ரா ஹாசன் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றாராம். வேதாளம் படத்தில் லட்சுமி மேனனுக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் இருந்ததோ அதே அளவிற்கு அக்‌ஷரா ஹாசனுக்கும் இந்த படத்தில் முக்கியமான ரோலாம். மேலும் சொல்ல வேண்டுமென்றால், படத்தில் இவருக்கு ஒரு சில ஆக்‌ஷன் காட்சிகள் கூட இருக்கிறதாம்.
S.S.ராஜமௌலி இயக்கத்தில் இயக்கத்தில் வெளிவந்து வசூல் சாதனை படைத்த பாகுபலியின் இரண்டாம் பாகத்திற்காக இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்கள் வெயிட்டிங். இந்நிலையில், படத்தில் அதிகாரபூர்வ ரிலீஸ் திகதியை அறிவித்துள்ளனர். ஹிந்தியில் படத்தை வெளியிடும் கரண் ஜோஹர், 2017 ஏப்ரல் 28ம் திகதி பாகுபலி 2 வெளியாகும் என சற்று முன் அறிவித்துள்ளார்.
விஜய் படம் என்றாலே எங்கிருந்து தான் வருவார்களோ? பிரச்சனை செய்ய வேண்டும் என்று. அந்த வகையில் தற்போது படத்தின் தலைப்பே அறிவிக்கவில்லை, அதற்குள் பிரச்ச்னை வெடித்துவிட்டது. விஜய் தற்போது பரதன் இயக்கத்தில் நடித்து வருகிறார், இந்த படத்திற்கு இன்னும் தலைப்பே வைக்கவில்லை. எங்கள் வீட்டு பிள்ளை என்று தலைப்பு வைக்கலாம் என யோசித்து வருகின்றனர். ஆனால், அதற்குள் எம்.ஜி.ஆர் பொதுநல சங்கம் சார்பாக இந்த தலைப்பை வைக்க கூடாது, என விஜய்...
நானுஓயா அவோகா தோட்டத்தில் 2000ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலைச் சம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட 08 சந்தேகநபர்களில் எழுவரை, நுவரெலியா மேல் நீதிமன்றம் நேற்று விடுதலை செய்ததுடன், ஒருவருக்கு 10 வருடச் சிறைத்தண்டனையை விதித்துஉத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு தொடர்பில் தெரியவருவதாவது, கிளரன்டன் அவோகா தோட்டத்தில் 12.10.2000 அன்று, மரக்குற்றிகளை திருட்டில் 8 பேர் அடங்கிய குழு ஒன்று ஈடுபட்டுள்ளது. இதனைத் தடுக்க முயன்ற காவலாளி பன்னீர்ச்செல்வம் என்பவரை அந்தக் குழு தாக்கியுள்ளது. தாக்குதலில் பலத்த...