ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சந்திவெளி பிரதேசத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் தனது பிள்ளைகளுக்கான பிள்ளைச் செலவுகளைக் கட்டமுடியாமல் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவரின் சடலம் சந்திவெளி பொது மயானத்திற்கருகில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். சந்திவெளி பிரதான வீதியைச் சேர்ந்த சின்னையா குணரத்தினம் (55 வயது) என இவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். பொதுமக்களினால் வழங்கப்பட்ட தகவலையடுத்து இச்சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் கூறினர். இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர், பல வருடங்களாக குடும்பத்தைப்...
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சரான எம்.எல்.எம். அபுசாலியின் இளைய சகோதரரான எம்.எம். சலீம் பலாங்கொடையில் உள்ள அவரது வீட்டில் கொலை செய்யப்பட்டுள்ளார். சலீம் தனித்து தனது வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், ஒரு நபரோ அல்லது குழுவினரோ நேற்று முன்தினம் இரவு வெட்டிக்கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். சம்பவம் குறித்து பலாங்கொடை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். கொலை செய்யப்பட்ட சலீமுக்கு 87 வயது எனவும் பொலிஸார்...
இலங்கையின் வடக்கில் நெடுந்தீவுக்கு அருகில் உள்ள கடற்பரப்பில் தத்தளித்த மூன்று இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் இன்று காப்பற்றியுள்ளனர். தமிழகத்தை சேர்ந்த இந்த மீனவர்கள் வந்த படகில் தொழிநுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த இந்த மீனவர்களை இலங்கைக்கு அழைத்து வந்து, படகு பழுதுப்பார்க்கப்பட்ட பின்னர், மீனவர்கள் படகுடன் சர்வதேச எல்லையில் வைத்து இந்திய கடலோர காவற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு, ஏறாவூர் சித்தாண்டிக் கிராமப் பகுதியில் மரை இறைச்சியைத் தன்வசம் வைத்திருந்த ஒருவர் இன்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோதமாக காட்டு விலங்குகள் வேட்டையாடப்பட்டு அதன் மாமிசங்கள் விற்பனைக்காக எடுத்துவரப்படுவதாக கிடைத்த இரகசியத் தகவலையடுத்து திடீர் சோதனை மேற்கொண்டபோதே மரை இறைச்சியை வைத்திருந்த 47 வயதான குடும்பஸ்தர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர். இறைச்சிக்காக வேட்டையாடப்பட்ட மரை, மட்டக்களப்பு மற்றும் பொலொன்னறுவை மாவட்டங்களின் எல்லையிலுள்ள தொப்பிகல (குடும்பிமலை) மலைப்பகுதி காடுகளில் இருந்து...
‘கணவரின் சடலத்தினை கையளிப்பதானால் விடுதலை புலிகளுடன் தொடர்புபட்டவர் என தெரிவித்தால் மாத்திரமே சடலத்தினை தருவோம் என இராணுவம் தெரிவித்தது’ என்று இன்று (வெள்ளிக்கிழமை) கிளிநொச்சியில் இடம்பெற்ற நல்லிணக்க பொறிமுறைக்கான மக்கள் கருத்துக்களை கேட்டறியும் அமர்வில் பெண்ணொருவர் கருத்துத் தெரிவித்துள்ளார். நல்லிணக்க பொறிமுறைக்கான மக்கள் கருத்துக்களை கேட்டறியும் அமர்வு இன்று கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் இடம்பெற்றது. குறித்த அமர்வில் பங்கேற்று தமது கருத்துக்களை பதிவு செய்த பெண்ணொருவரே மேற்கண்டவாறு கூறியுள்ளார்....
காலில் ஏற்பட்ட எலும்பு முறிவுக்காக சிகிச்சை மேற்கொண்டு வந்த கமலஹாசன், இன்று வீடு திரும்பினார். அதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்… கமலஹாசன் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் மாடிப் படியில் இருந்து தவறி கீழே விழுந்தார். கீழே விழுந்ததில் அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து, உடனடியாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 3 வார காலமாக...
காலி பிரதேசத்திற்கு அருகாமையில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் தலைமறைவாகியிருந்த பஸ்ஸின் சாரதியினை காலி பொலிஸார் கைது செய்துள்ளனர். உடுகம பஸ் டிப்போவுக்கு சொந்தமான இலங்கை போக்குவரத்து சபை பஸ்ஸின் சாரதியே கைது செய்யப்பட்டுள்ளார். மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி காலியிலிருந்து மாத்தறை நோக்கி பயணித்த பஸ்ஸில் மோதுண்டு விபத்திற்குள்ளாகியதில் கர்ப்பணித்தாயார் ஒருவர் உயிரிழந்தார். இச்சம்பவம் நேற்றிரவு 8.45 இடம்பெற்றுள்ளது. விபத்தினை ஏற்படுத்தியிருந்த பஸ்ஸின் சாரதி தப்பிச்சென்றிருந்த நிலையில் அவரை கைது செய்துள்ள பொலிஸார்,...
புதுக்குடியிருப்பு கைவேலிப்பகுதியில் இன்று காலை ஏற்பட்ட வாகன விபத்தில் வாகனச் சாரதி படுகாயமடைந்துள்ளார். பரந்தனில் இருந்து முல்லைத்தீவு நோக்கி A35 வீதியில் பயணித்த டிப்பர் வாகனம் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் தடைகளை உடைத்து விபத்துக்குள்ளாகியுள்ளது. ஏற்பட்ட விபத்து தொடர்பாக புதுக்குடியிருப்பு போக்குவரத்து கண்காணிப்பு பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டுள்ளனர்.
பொல­ன­றுவை – திம்­பு­லா­க­லவை சேர்ந்த தமி­ழரான தந்­தை­யொ­ருவர் தனது நான்கு பிள்­ளை­க­ளையும் பிக்கு சாச­னத்தில் இணைத்­துள்ளார். இந்­நான்கு பிள்­ளை­களுள் ஆண் பிள்­ளைகள் மூவரும் திம்­பு­லா­கல துற­விகள் மடத்­திலும், பெண் பிள்ளை பொல­ன­று­வை அச­ரன சரண சுகத விகா­ரை­யிலும் துற­வறம் பூண்­டுள்­ளனர். ஆண்­பிள்­ளைகள் மூவரும் 9, 14, 16 ஆகிய வய­து­டை­ய­வர்கள் எனவும் பெண் பிள்ளை 11 வய­தா­னவர் எனவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இவர்கள் நால்­வரும் தற்­போது பிரி­வெனா கல்­வி­யினை கற்று வரு­கின்­றனர். சுமார் 2...
சுன்னாகம் நீர் மாசு தொடர்பான வழக்கு விசாரணை மல்லாகம் மாவட்ட நீதவான் ஏ.யூட்சன் முன்னிலையில் நேற்று (04) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது குறித்த வழக்கை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை ஒத்தி வைத்து நீதவான் உத்தரவிட்டுள்ளார். கழிவெண்ணை காரணமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் சீராக மேற்கொள்வதில்லை என பாதிக்கப்பட்ட பிரதேசங்களைச் சேர்ந்த இரு சுகாதார வைத்திய அதிகாரிகள் மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். இந்த...