பிரசவத்திற்கு வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்த தாய் பஸ் ஒன்றுக்கு மோதி உயிரிழந்த நிலையில் குழந்தை பாதுகாப்பாக பெற்றெடுக்கப்பட்ட சோக சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. ஒரு பிள்ளையின் தாய் என்று கூறப்படும் குறித்த கார்ப்பிணித் தாய் இரண்டாவது குழந்தையின் பிரசவத்திற்காக தனது கணவருடன், முச்சக்கர வண்டியில் காலி, மஹமோதரை வைத்தியசாலைக்கு செல்லும் போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. நேற்றிரவு 8.45 மணியளவில் காலி சுமுது மாவத்தையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்து இடம்பெற்றவுடன்...
முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தில் இரவு தொழிலில் ஈடுபடும் சில மீனவர்கள் பாலத்தில் அலட்சியமாக பாடுத்து உறங்குவதாக தொரிவிக்கப்படுகின்றது. யுத்த பாதிப்புக்கு உள்ளாகி இன்னமும் புனரமைப்பு செய்யப்படாத வட்டுவாகல் பாலத்தில் ஒருவழி பயணத்தையே மேற்கொள்ள முடியும். இந்நிலையில் இப்பாலத்தில் சில மீனவர்களின் நள்ளிரவில் அலட்சியமாக நித்திரை செய்வதை அவதானிக்க முடிகின்றது. இதனால் சம்பந்தப்படும் மீனவர்களின் உயிருக்கும் உத்தரவாதம் எதுவும் காணப்படவில்லை. அத்தோடு போக்குவரத்துக்களும் பாதிப்பு ஏட்பட்டுள்ளது. சென்ற மாதம் இப்பாலத்தில் நள்ளிரவில் ஏற்பட்ட வாகன விபத்தில்...
இந்தோனேசியாவில் உள்ள மக்கள் இறந்த உடலங்களை தங்களோடு பல காலம் வீட்டில் வைத்திருப்பதையும், அதன்பிறகு பாடம்பண்ணப்பட்ட உடலங்களை வருடாவருடம் உடுத்தி மகிழ்வதையும் காணக்கூடியதாக உள்ளது. இது பற்றிய ஆய்வாகவே இந்த வாரத்திற்கான நிஜத்தின் தேடல் நிகழ்ச்சி அமைந்துள்ளது. உலகின் பல பகுதிகளிலும் வேறு விதமான விநோத பழக்கவழக்கங்கள் இருந்தாலும், உடலங்களை பலகாலம் வைத்திருத்தல் என்ற வித்தியாசமான நடைமுறை ஒன்று இவர்களிடையே காணப்படுகின்றது. இது தொடர்பான பல சுவாரஸ்யமான விடயங்களை இன்றைய நிஜத்தின்...
  அதிபர்களுக்கு பாடசாலை முகாமைத்துவம் தொடர்பான பயிற்சி மேல் மாகாண களுத்துறை மாவட்ட ஹோமாகம கல்வி வலய அதிபர்களுக்கு பாடசாலை முகாமைத்துவம் தமைத்துவ பண்புகள், நிர்வாகம் தொடர்பான பல்வேறு விடயங்களை உள்ளடக்கிய தலைமைத்துவ பயிற்சி ஒன்று மீப்பே தேசிய கல்வி நிருவகத்தின் தலைமைத்துவ பயிற்சி நிலையத்தில் நடாத்தப்பட்டது. கல்வி அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் அவர்களின் ஆலோசனைக்கு அமைய பெருந்தோட்ட பாடசாலைகள் அபிவிருத்தி பிரிவின் பனிப்பாளர் திருமதி சபாரஞ்சன் மகேஸ்வரி அவர்களின்...
தட்சண கையிலாயம் என போற்றப்படும் கிழக்கிலங்கை கீழ் கரையிலே வாழைச்சேனை புதுக்குடியிருப்பு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தானத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் இறுதி நாள் தீ மிதிப்பு மற்றும் தீர்த்தமாடும் உற்சவம் இன்று இடம்பெற்றது. பத்திரகாளி அம்பாள் ஆலய பிரம்மோற்சவ பெருவிழாவானது கடந்த 27ம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி வெள்ளிக்கிழமை தீமிதிப்பு மற்றும் தீர்த்தோற்சவத்துடன் நிறைவடைந்தது. Go to Videos MAG Sri Ambal...
முட்டை மீது அலாதி விருப்பம் கொண்டிருக்கிறீர்களா? தினமும் முட்டை சாப்பிடவேண்டும் போலிருக்கிறதா? உங்களுக்கு ஒரு அதிர்ச்சி வைத்தியம் தருவதற்காகவே வந்திருக்கிறது அமெரிக்க ஆய்வு ஒன்று. வாரம் ஏழு முட்டைகள் அல்லது அதற்கு மேல் உண்பவர்களுக்கு மரணம் விரைவிலேயே வரும் வாய்ப்பு 23 விழுக்காடு அதிகரிக்கும் என்பதே அந்த ஆய்வு! அதிலும் குறிப்பாக நடுத்தர வயதுடையவர்கள் இந்த எல்லையைத் தாண்டி முட்டையை உட்கொண்டால் ஆபத்து அதிகமாம். நீரிழிவு நோயாளிகள் எனில் முட்டையின் பக்கம் பார்வையைக்...
இராணுவப்புரட்சிக்கு பின்னின்று செயற்பட்ட குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள அமரிக்காவை தளமாகக்கொண்ட துருக்கியின் மதத்தலைவருக்கு துருக்கியின் நீதிமன்றம் உத்தியோகபூர்வ பிடியாணையை பிறப்பித்துள்ளது. கடந்த ஜூலை 15ஆம் திகதி இடம்பெற்ற இந்த புரட்சியின்போது சுமார் 270 பேர் பலியாகினர்.இந்த நிலையில் இன்று இஸ்தானாபுல் நீதிமன்றம் மதகுரு Fethullah Gulen க்கு பிடியாணையை பிறப்பித்துள்ளது. இவரே இந்த இராணுவப்புரட்சிக்கு உத்தரவிட்டார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இவர் தற்போது நாடு கடந்தவராக அமரிக்காவில் வசித்துவருகிறார். அத்துடன் இராணுவப்புரட்சி தொடர்பில் தமக்கு...
  மட் ட க்களப்பு குளக்கட்டு  கண்ணகை அம்மன் ஆலயத்தில் ஆடிப்  பூரத்தை முன்னிட்டு இன்று வெள்ளி  கிழமை  காலை 9.00 மணியளவில்   பால்குட  பவனி  இடம்பெற்றது  . வீரகத்தி  பிள்ளையார்  ஆலயத்தில் இருந்து ஆரம்பமான  இந்த பால் குட பவனியில்  ஆயிரக்கணக்கான  மக்கள்  கலந்து  கொண்டதுடன்  பெண்கள்  பால்குடம்  ஏந்தி  செல்வதையும் படங்களில்  காணலாம்  
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தரப்பினரின் பாதயாத்திரையில் பங்கேற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் தொடர்பில் கட்சியின் மத்திய செயற்குழு, கட்சியின் ஒழுக்காற்று குழுவுக்கு பரிந்துரை அதிகாரத்தை வழங்கியுள்ளது இந்த குழு தமது பரிந்துரையை மேற்கொண்ட பின்னர் அது தொடர்பில் கட்சியின் மத்திய செயற்குழு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம், ஜனாதிபதியும் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று கொழும்பில் இடம்பெற்றது. இதன்...
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் புதிய கட்டத்துக்கான முதல் கட்டட வேலைகள் ஆகஸ்ட் மாத நடுப்பகுதியில் 250 மில்லியன் செலவில் மட்டக்களப்பு - மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள திராய்மடு பிரதேசத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளன. இத்திட்டத்தினை அமுல்படுத்துவது தொடர்பான முன் ஏற்பாட்டு நடவடிக்கைகள் குறித்து ஆராயும் கலந்துரையாடல் அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் மாநகர சபை, பிரதேச செயலாளர், கட்டங்கள் திணைக்களம், வீதி அபிவிருத்தி...