மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேற்றாத்தீவு பகுதியில் பாதசாரிகள் கடவையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். தேற்றாத்தீவு கொம்புச்சந்தி பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாகவுள்ள பாதசாரிகள் கடவையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. பாதசாரிகள் கடவையூடாக வீதியை கடக்கமுற்பட்ட பொதுமக்களுக்கு வழிவிடுவதற்காக நிறுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளில் மீது பின்புறமாகவந்த டிப்பர் ரக வாகனம் மோதியுள்ளது. இதன்போது களுவாஞ்சிகுடியை சேர்ந்த 36 வயதான க.சந்திரமோகன் என்பவர் படுகாயமடைந்த நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக...
நுவரெலியா, லபுக்கலை தோட்டத்தில் உள்ள வீடொன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட இளைஞனின் சடலம் உறவினர்களால் மீட்கப்பட்டது. குறித்த சம்பவம் காலை வேளையில் நடந்துள்ளதாக நுவரெலியா பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இவ்வாறு தற்கொலை செய்து கொண்ட நபர் 23 வயது மதிக்கதக்க வசந்தராஜ் என தெரியவந்துள்ளது. வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவருவதோடு, இதற்கான காரணம் இதுவரையும் தெரியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இளைஞனின் சடலம் நுவரெலியா வைத்தியசாலையின் பிரேத...
திருக்கேதீஸ்வரம் மாந்தை பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட மனிதப்புதைகுழிக்கு சற்று தொலைவில் கண்டு பிடிக்கப்பட்ட மர்மக்கினற்றில் இருந்து மீட்கப்பட்ட சகல தடையப்பொருட்களும் பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு பகுப்பாய்வு அறிக்கை மன்னார் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மன்னார் மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் டபில்யு.ஆர்.எஸ்.ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார். மாந்தை பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட மர்ம கிணற்றில் அகழ்வு பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் இன்று (4) அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார். இவர்...
நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் தற்போது மொத்தமாக 8242 சிறை கைதிகள் இருப்பதாக சட்டம் மற்றும் ஒழுங்குகள் அமைச்சு தெரிவித்துள்ளது. சிறைச்சாலைகளில் இருக்கும் 8242 கைதிகளில் 265 பெண்கள் உள்ளடங்குவதாக அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது. குறித்த கைதிகளுள் 313 பேர் மரணதண்டனை கைதிகளாகவும்,442 பேர் ஆயுள் தண்டனை கைதிகளாகவும் இருப்பதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
சுவிட்சர்லாந்து நாட்டில் குடியுரிமைக்காக காத்திருக்கும் வெளிநாட்டினர்களுக்கு உதவ அந்நாட்டு எஸ்.பி கட்சி முன்வந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சுவிஸில் வெளிநாட்டினர்கள் குடியுரிமை பெறுவது தொடர்பாக கடந்த 2014ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் ஒரு புதிய சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. எதிர்வரும் 2018 ஜனவரி 1-ம் திகதி முதல் இந்த புதிய சட்டம் அமுல்படுத்தப்படுகிறது. தற்போது சுவிஸில் 12 ஆண்டுகளாக குடியிருக்கும் வெளிநாட்டினர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. ஆனால், 2018ல் நடைமுறைக்கு வரும் புதிய சட்டம் மூலம் சுவிஸில்...
நம் தமிழர்களின் கலாச்சாரம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகிறது என்பதை தெளிவாக காட்டுகிறது நம் சமூதாயம், அதற்கு ஒரே ஒரு உதாரணம் பெண்களுக்கு நடக்கும் பாலியல் கொடுமை. சிறு வயதில் சுட்டியாக விளையாடிக் கொண்டு இருக்க வேண்டிய பெண் குழந்தைகளை வீட்டில் பூட்டி வைத்து வளர்க்க வேண்டிய நிலைமை வந்துவிட்டது. அதிலும் அவர்களுக்கு தங்கள் உடலை எப்படி பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்ல வேண்டிய கட்டாயம் இன்றைய பெற்றோர்களுக்கு...
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பி சாப்பிடக்கூடிய பழம் தான் சீதாப்பழம், இது தனிப்பட்ட மணமும், சுவையும் கொண்டது. 100 கிராம் சீதாப்பழத்தில் உள்ள சத்துக்கள் நீர்ச்சத்து- 70.5%, புரதம்- 1.6%, கொழுப்பு- 0.4%, நார்ச்சத்து- 3.1%, கால்சியம்- 17 மில்லி கிராம், பாஸ்பரஸ்- 47 மில்லி கிராம், இரும்புச்சத்து- 4.31 மில்லி கிராம், வைட்டமின் சி-37 மில்லி கிராம், விட்டமின் பி காம்ப்ளக்ஸ் சிறிதளவு, மாவுச்சத்து- 23.5%, கலோரி...
வித்தியா வன்புணர்வுக் கொலை வழக்கின் விளக்கமறியல், யாழ் தாதியர் வேலைநிறுத்தப் போராட்டத் தடையுத்தரவு உள்ளிட்ட 3 முக்கிய வழக்குகள் 10ஆம் திகதி யாழ்.மேல் நீதிமன்றத்தில் நடைபெறும் வித்தியா வல்லுறவு கொலை வழக்கின் விளக்கமறியல் தொடர்பான விசாரணை, வலது குறைந்த பெண் மீதான கூட்டுப்பாலியல் வழக்கு, தாதியர் வேலைநிறுத்த தடையுத்தரவு ஆகிய மூன்று முக்கிய வழக்குகள் யாழ். மேல் நீதிமன்றத்தில் எதிர்வரும் 10ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் வித்தியா கொலை...
சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளை தடுக்க இலங்கைக்கும் இந்தோனேஷியாவிற்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. ஆட்கடத்தல்களை கட்டுப்படுத்துவதனை தடுக்கவும் கட்டுப்படுத்தவும் இலங்கையும் இந்தோனேஷியாவும் இணங்கியுள்ளன. பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்தோனேஷியாவுக்கு விஜயம் செய்திருந்த நிலையில், அந்த நாட்டின் சட்டத்துறை அமைச்சரை சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடியுள்ளார். இலங்கையிலிருந்தும், தமிழ் நாட்டில் இருந்தும் அதிக அளவான ஈழ அகதிகள் இந்தோனேஷியாவின் ஊடாகவே அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்கின்றனர். இதனை தடுக்கும் வகையில் இரண்டு நாடுகளும் இணைந்து செயற்பட தீர்மானித்துள்ளன. இதற்கான...
சிறிலங்காவின் தனிநபர் மதுபான நுகர்வு ஐரோப்பாவை விட ஐந்து மடங்கு அதிகம் என்று தேசிய புகையிலை மற்றும் மதுபான அதிகாரசபையின் தலைவர் பாலித அபேகோன் தெரிவித்துள்ளார். ஆசியாவில் சிறிலங்காவும் தாய்லாந்தும், அதிகளவு தனிநபர் மதுபான நுகர்வில் முன்னிலையில் இருக்கின்றன. சிறிலங்காவில் 35 வீதமான ஆண்களும், 3 வீதமான பெண்களும் மதுபானப் பழக்கம் கொண்டவர்களாக உள்ளனர். ஆறு மில்லியன் மக்கள்- சிறிலங்காவின் சனத்தொகையில் 40 வீதமானோர்- மதுபானப் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். 40 ஆயிரம் பாடசாலை...