குவைத்துக்கு வீட்டுப்பணிப்பெண் ணாக தொழிலுக்கு சென்று அங்கு மரணமடைந்த இலங்கை பெண்தொடர்பில் குவைத்தில் உள்ள இலங்கை தூதரகத்தினால் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கொன்சியூலர் பிரிவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
குவைத்தில் உள்ள இலங்கை தூதரகத்தினால் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கொன்சியூலர் பிரிவுக்கு இலங்கை பணிப்பெண்ணொருவர் இறந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. என்றாலும் அவர்தொடர்பான விபரங்களை உறுதிசெய்துகொள்ள முடியாமல் இருக்கின்றது. எனினும் அவர் வெள்ளத்தம்பி சித்தி...
அம்பாறை பிரதேசத்தில் உயர் தர பரீட்சை நிறைவடைந்து வீட்டுக்கு செல்லும் வழியில் பாடசாலை மாணவியொருவர் கடத்திச்செல்ல முயற்சிக்கப்பட்டுள்ளார்.
முச்சக்கரவண்டியில் வந்த சிலர் இவ்வாறு பலவந்தமாக குறித்த மாணவியை கடத்தி சென்றுள்ள நிலையில் ,பின்னர் மாணவி முச்சக்கரவண்டியினுள் இருந்து பாய்ந்து தப்பியுள்ளார்.
அச்சந்தர்ப்பத்தில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த காவற்துறையினர் மற்றும் வீதியின் அருகில் இருந்த சில நபர்கள் இணைந்து குறித்த சிறுமியை காப்பாற்றியுள்ள நிலையில் , கடத்தலில் ஈடுபட்ட நபர்களையும் அவர்கள் பிடித்ததாக...
நோர்வே பிரதமர் ஏர்னா சொல்பேக் உள்ளிட்ட 7 பேர் கொண்ட குழு, இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டு வந்துள்ளனர்.
இவர்கள் இன்று காலை 9.55 மணிக்கு கட்டார் விமான சேவைக்கு சொந்தமான QR 664 விமானத்தில் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.
இலங்கைக்கு வந்துள்ள நோர்வே பிரதமர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அரசாங்க உயர் அதிகாரிகளைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
உலகம் முழுவதும் சமையலில் பயன்படுத்தும் ஓர் பொதுவான காய்கறி தான் வெங்காயம். இந்த வெங்காயத்தின் சுவை வித்தியாசமாக இருப்பதோடு மட்டுமின்றி, இது ஏராளமான ஆரோக்கிய நன்மைகளையும் உள்ளடக்கியது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.
பொதுவாக வெங்காயத்தைப் பயன்படுத்தும் போது, அதன் தோலை தூக்கி எறிந்து விட்டு, அதனுள் உள்ளதை தான் பயன்படுத்துவோம். இந்த கட்டுரையைப் படித்த பின், இனிமேல் அந்த வெங்காயத்தை தோலை நீங்கள் தூக்கி எறியமாட்டீர்கள். ஏன்...
திருவனந்தபுரத்தில் இருந்து சென்ற எமிரேட்சின் போயிங் ஆ.கே.521 ரக விமானம் துபாயில் தீப்பிடித்து எரிந்த விபத்தில் 300 பேரை பத்திரமாக மீட்க உதவிய தீயணைப்பு வீரர் ஜாசிம் இஸ்ஸா முகமது வீரமரணம் அடைந்தார்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து எமிரேட்சின் போயிங் ஈ.கே.521 ரக விமானம் 282 பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று காலை 10.19 மணிக்கு புறப்பட்டது. சுமார் 4 மணி நேர பயணத்தில் அமீரக...
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் புதிய கட்டத்துக்கான முதல் கட்டட வேலைகள் ஆகஸ்ட் மாத நடுப்பகுதியில் 250 மில்லியன் செலவில் மட்டக்களப்பு - மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள திராய்மடு பிரதேசத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இத்திட்டத்தினை அமுல்படுத்துவது தொடர்பான முன் ஏற்பாட்டு நடவடிக்கைகள் குறித்து ஆராயும் கலந்துரையாடல் அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நேற்றையதினம் புதன்கிழமை (30) மாலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இந்தக் கலந்துரையாடலில் மாநகர சபை, பிரதேச செயலாளர்,...
கடந்த மாதம் 8ஆம் திகதி தனது 10 மாதக் குழந்தை ஒன்று காணாமல் போயுள்ளதாக குறித்த குழந்தையின் தாய் கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
கொழும்பு காலிமுகத்திடல் பகுதியிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதேவேளை நேற்று சிலாபம் பிரதேசத்தில் கைக்குழந்தை ஒன்றுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்ததாகவும், காணாமல் போன குழந்தை குறித்த குழந்தையாக இருக்கலாம் எனவும் கோட்டை பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் சிலாபம் மற்றும் கோட்டை பொலிஸார்...
கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் கடந்த ஆறு மாதங்களில் மதுவரித் திணைக்களத்தினால் 231 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2016.01.01 இருந்து 2016.06.30 வரையான ஆறுமாத காலப்பகுதியில் 231 வழக்குகள் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு நீதிமன்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவற்றில் 226 வழக்குகளின் தண்டப்பணமாக 1416600 ரூபா அறவிடப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்கள புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த வழக்குகள் கசிப்பு உற்பத்தி நிலையங்களில் கைது செய்யப்பட்ட மூன்று பேரும், கசிப்பினை தம்வசம்...
நடைபெற்று முடிந்த பாதயாத்திரையில் மஹிந்த ராஜபக்ஸ சிறுவர்களை தவறாக பயன்படுத்தியது மட்டுமல்லாது அதை நியாயப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழில்பயிற்சி இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே இவ்வாறு கூறினார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
“சிறுவர்கள் தங்கள் எண்ணங்களைக் கூறுவதற்கு முழு சுதந்திரம் உண்டு, அவர்களின் எதிர்கால அரசியலுக்கு இது ஒரு அத்திவாரமாக அமையும், அவர்களது சுதந்திரத்தை நாம் தட்டிப்பறிக்க...
‘துக்ளக்’ பத்திரிகை ஆசிரியரும், நடிகருமான சோ வயது முதிர்வு காரணமாக மூச்சுத்திணறல் நோயால் அவதிப்பட்டு வருகிறார்.
இதற்காக அவர் பல முறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கபாலி படத்தை பார்ப்பதற்கு ஆசைப்பட்டார்.
அதற்கான ஏற்பாடுகளை செய்து, அவர் கபாலி படத்தை பார்த்தார். இந்த நிலையில் நேற்று மாலையில் அவருக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் கிரீம்ஸ் சாலையில் உள்ள...