நீண்ட நாட்களாக இழுத்தடிக்கப்பட்டு வந்த சர்ச்சைக்குரிய சரக்கு மற்றும் சேவை வரி மசோதா இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் நிறைவேறியது. மசோதாவுக்கு ஆதரவாக 197 வாக்குகள் பதிவாகின. எதிர்ப்பாக ஒரு வாக்கும் பதிவாகவில்லை. அ.இ.அ.திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த மசோதாவிற்கு தாங்கள் தெரிவித்த ஆட்சேபணைகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை என்று கூறி வெளிநடப்பு செய்தனர். 122வது அரசியல் சட்ட மசோதா இன்று மாநிலங்களவையில் விவாதத்துக்கு வந்தபோது, அரசின் நிலைப்பாட்டை விளக்கிப் பேசிய நிதியமைச்சர் அருண்...
இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் ஐஎஸ் அமைப்பு, தங்களுடன் ஒட்டி இயங்கும் பிரிவான மேற்கு ஆப்ரிக்க அமைப்பான போகோ ஹராம் அமைப்பின் புதிய தலைவரை அறிவித்துள்ளது. நைஜிரியாவை மையமாக கொண்டு இயங்கும் இஸ்லாமியவாதிகளின் சார்பாக பேச்சாளாராக முன்பு செயல்பட்ட யின் முதல் பேட்டி, ஐஎஸ் அமைப்பு வெளியிடும் இதழின் சமீபத்திய பதிப்பில் வெளியாகியுள்ளது. போகோ ஹராம் குழுவின் முன்னாள் தலைவரான அபூபக்கர் ஷேகாவுக்கு என்ன நடந்தது என்பது தெளிவாக...
விழுப்புரம் மாவட்டத்தில் தனக்குத் தானே தீ வைத்துக் கொண்ட இளைஞர், தான் காதலித்த பெண்ணைக் கட்டிப்பிடித்ததால் அவரும் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். ஜூலை மாதம் 30ம் தேதியன்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வி. பாளையம் பகுதியைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவியான நவீனாவின் வீட்டிற்குள் புகுந்த செந்தில் என்ற இளைஞர் பெட்ரோலை ஊற்றி தனக்குத் தானே தீ வைத்துக்கொண்டு, அந்தப் பெண்ணையும் கட்டிப்பிடித்தார். இதில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட செந்தில் அன்றே உயிரிழந்தார்....
  பத்து ஆண்டுகள் இழுபறிக்குப் பிறகு சர்ச்சைக்குரிய சரக்கு மற்றும் சேவை வரி மசோதா இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் நிறைவேறியது. மசோதாவுக்கு ஆதரவாக 197 வாக்குகள் பதிவாயின. எதிர்த்து யாரும் வாக்களிக்கவில்லை. இந்த மசோதா கடந்து வந்த பாதை பற்றிய வரைபடம்.                                        ...
பான் கி மூன் ஜம்மு-காஷ்மீர் நிலவரத்தை தங்களது ராணுவ பார்வையாளர் குழு மூலம் தொடர்ந்து கண் காணித்து வருகிறோம் என்று கூறியிருந்த ஐ.நா. சபை, இப்போது அதிலிருந்து பின்வாங்கி உள்ளது. ஜம்மு காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதி புர்ஹான் வானி கடந்த மாதம் என்கவுன்ட்ட ரில் சுட்டுக்கொல்லப்பட்டார். இதை யடுத்து, பிரிவினைவாதிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவ தால் அங்கு கடந்த 1 மாதமாக வன்முறைச் சம்பவங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில், ஐ.நா. பொதுச்...
உலகளவில் 1.65 பில்லியன் பயனர்களை கொண்ட பேஸ்புக்கில் பல மொழிகள் பேசும் மக்கள் பயன்படுத்துவதும் வெவ்வேறு மொழியினராய் இருந்தாலும்  அவர்கள் அனைவரும் பேஸ்புக்கில் நட்பு பாராட்டுவதும் உறவுகளை வளர்த்துக் கொள்வதும் அனைவரும் அறிந்ததே!    அவர்களுக்கேற்றவாறு   போஸ்ட் செய்யும் செய்திகளினை  பல மொழிகளில் மொழிபெயர்த்து தரவருகிறது பேஸ்புக் நிறுவனம். பல வருடங்களாகவே   பேஸ்புக் பல மொழிகளுக்கு ஆதரவளித்து வந்தாலும்  நாம் போஸ்ட் செய்யும் செய்திகள் அனைத்தும்  அவரவர்...
யூ-டியூபில் காணும் வீடியோக்களை  சேமித்து வைத்து  பின்னர் ஆப்லைனில் காண கீழ்காணும் வழிமுறைகளை பின்பற்றவும்.   1.முதலில்  உங்கள் மொபைலில் யூ-டியூப்  ஆப்பில்  சென்று வீடியோ பக்கம் சென்று நீங்கள் டவுன்லோட் செய்ய வேண்டிய வீடியோவில் கீழ்  . மெனு பட்டனில்  Add to Offline  பட்டனை  “Select” செய்யவும்.மாறாக   Add to Offline பட்டன்  அடிக்கப்பட்டு இருப்பின்   அந்த குறிப்பிட்ட வீடியோ டவுன்லோட் செய்யத்தக்கதல்ல என்று பொருள்படும். 2.அதனை தொடர்ந்து   யூ-டியூபில் வரும் select resolution...
Fujifilm  என்ற காமிரா  தயாரிக்கும் நிறுவனம்  இறுதியாக இரண்டு வருடத்திற்கு முன்னர்  X-T1 தர காமிராவினை அறிமுகப்படுத்தியதினை  தொடர்ந்து X-T2 ரக காமிராவினை அறிமுகப்படுத்தியுள்ளது. இவை முற்றிலுமாக கண்ணாடி இல்லாத மற்றும் மாற்றிக்கொள்ளும் லென்சுகளையும் கொண்டது. 4K வீடியோ பதிவு  மற்றும் கூடுதல்  ஆட்டோ ஃபோகஸ் புள்ளிகளை கொண்டது. X-T2 ரக காமிரா செப்டம்பர் மாதம்  விற்பனைக்கு அறிமுகப்படுத்தவுள்ளனர். இதன் விலைதோராயமாக  ரூ.1,07,700 ( $1,599.95 ) என அறிவித்துள்ளனர்.மேலும் அதே சமயத்தில்   ரூ. 33,650  மதிப்பு கொண்ட EF-X500 ரக காமிராவினையும் அறிமுகப்படுத்த உள்ளனர்.   X-T2...
மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள “Microsoft Pix”  செயலியானது முற்றிலும்    புகைப்படத்திற்கு  ஆதரவளிக்க  தயாராகியுள்ளது.  இதை கொண்டு  சாதாரணமாக நாம் எடுக்கும் புகைப்படங்களை  செயற்கை நுண்ணறிவின் மூலம்  காமிரா “Settings“-யினை  அட்ஜஸ்ட்  செய்து  அழகான புகைப்படமாக  உருவாக்கி  கொள்ளலாம்.  மேலும் தானாகவே கலர், போக்கஸ் (Focus), மற்றும் எக்ஸ்போஸர் (Exposure)போன்றவைகளை சரியான அளவில் தானாகவே மாற்றிக் கொள்ளும் திறன் கொண்டது .இதனால் எந்த ஒரு  புகைப்படத்தின்  தரத்தினையும்    “Microsoft Pix”...
சாதாரணமாக ஆன்லைனில் நாம் ஆர்டர் செய்யும் பொருட்கள் 15 நாட்களுக்குள் நம்மை  வந்தடையும்  ஆனால் ஆளில்லா விமானங்களின் வழியே   ஒரு பொருளை ஆர்டர் செய்தால்  அவை ஆர்டர் செய்த சிலமணி நேரத்திற்குள்   வீட்டிற்கே வந்து டெலிவரி செய்யும். இந்த  வரிசையில் உயிரை காப்பாற்றும் இரத்ததானம் மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் , தடுப்பு ஊசிகள் போன்ற  பரிமாற்றத்தினை துவக்கியுள்ளனர். இந்த நுட்பம்  Rwanda  நாட்டில் அறிமுகப்படுத்தியதனை அடுத்து அமெரிக்காவின்  மூன்று பெருநகரங்களான  Maryland, Nevada, and Washington, போன்ற இடங்களில்  துவக்கியுள்ளது.      ...