முன்னாள் பிரதிக் காவல்துறை மா அதிபர் அனுர சேனாநாயக்கவின் விளக்க மறியல் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடீன் கொலை தொடர்பில் அனுர சேனாநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார்.
2012ம் ஆண்டு மே மாதம் 17ம் திகதி தாஜூடீன் கொலை செய்யப்பட்டிருந்தார்.
உயிரிழந்த சந்தர்ப்பத்தில் இதனை ஓர் வாகன விபத்தாகவே காவல்துறையினர் சித்தரித்து வழக்கு விசாரணைகளை முடிவுறுத்தியிருந்தனர்.
இந்த சம்பவம் ஓர் படுகொலை என தற்போது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தாஜூடீன் கொலை தொடர்பில் ஜனாதிபதி செயலக தொலைபேசி அழைப்புக்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளன:-
Thinappuyal -
பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடீன் கொலை தொடர்பில் ஜனாதிபதி செயலக தொலைபேசி அழைப்புக்கள் குறித்த விடயங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட உள்ளன.
கொலை இடம்பெற்ற தினத்தில் நாரஹேன்பிட்டி காவல் நிலையப்பொறுப்பதிகாரிக்கு ஜனாதிபதி செயலகத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட தொலைபேசி அழைப்புக்கள் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு மேலதிக நீதவான் மொஹாம் மிஹிலால் தலைமையில் இன்றைய தினம் நடைபெற்ற விசாரணைகளின் போது இந்த விடயம் பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 21ம் திகதி குற்றப்...
பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்குத் தொல்லையாகும் ஒலிபெருக்கியாளர்களுக்கு எதிராக நடவடிக்கை:
Thinappuyal -
நாடளாவிய ரீதியில் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றியிருக்கின்ற சூழ்நிலையில் மாணவர்ளுக்குத் தொல்லை கொடுத்து வருகின்ற ஆலயங்கள் கோவில்களின் ஒலிபெருக்கிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு யாழ்ப்பாணம் பிரதி பொலிஸ் மா அதிபருக்கு யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் பணிப்புரை விடுத்துள்ளார்.
பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் அமைதியான முறையில் பாடங்களை ஆயத்தம் செய்வதற்கு ஆலயங்கள் கோவில்களின் ஒலிபெருக்கிகள் இடையூறாக இருந்து தொடர்ச்சியாகத் தொல்லை கொடுத்து வருவதாக செய்யப்பட்டுள்ளன.
இதனால், ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துகின்ற...
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கும் இடையில் இழிவான தொடர்பு காணப்படுகின்றது என ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மஹிந்தவிற்கும் ரணிலுக்கும் இடையிலான இரகசிய இணக்கப்பாட்டின் காரணமாகவே சிராந்தி ராஜபக்ஸவை நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் சபாநாயகரின் இல்லத்தில் சென்று விசாரணை செய்தனர் என குறிப்பிட்டுள்ளார்.
விசாரணைகளின் பின்னர் சிராந்தி கைது செய்யப்படவோ நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவோ இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
விசாரணை நடத்தி நான்கு மாதங்கள்...
குமாரபுரம் கொலை வழக்கின் தீர்ப்பு பொதுமக்கள் மத்தியில் குறிப்பாகத் தமிழ் மக்கள் மத்தியில் பல்வேறு உணர்வுகளை ஏற்படுத்தியிருக்கின்றது. அனுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் அந்த வழக்கு விசாரணை நடைபெற்றபோது ஊடகங்கள் அதற்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து செய்திகளை வெளியிட்டு வந்தன. இப்போது தீர்ப்பளிக்கப்பட்டு, மேல் நீதிமன்றத்தில் வழக்கு முடிவுக்கு வந்துவிட்ட போதிலும், ஊடகங்களில் அதன் முக்கியத்துவம் குறைந்ததாகத் தெரியவில்லை. குமாரபுரம் கொலைச் சம்பவமும், அது பற்றிய வழக்கு விசாரணையும் பொதுமக்கள்...
பாத யாத்திரையின் போது கட்சியின் தலைமையகத்தின் எதிரில் கூக்குரல் எழுப்பப்பட்டிருந்தால் அது ஓர் முட்டாள்தனமான செயற்பாடாகும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
தமது முன்னிலையில் அவ்வாறான ஓர் சம்பவம் இடம்பெறவில்லை எனவும் அவ்வாறு இடம்பெற்றிருந்தால் அதற்கு தாம் இடமளித்திருக்கப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சில அரசியல் கட்சிகள் இதனை செய்திருக்கலாம் எனவும், சில தரப்பினர் இவ்வாறானவர்களை ஈடுபடுத்தியிருக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திரக் கட்சித் தலைமையகம் ஓர் மதிப்பிற்குரிய...
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் பாலம் அமைக்கப்படுவதற்கான சாத்தியங்கள் அதிகம் காணப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது.
குறிப்பாக இலங்கைக்கும் தமிழ் நாட்டுக்கும் இடையில் பாலம் அமைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தோனேசியாவில் இடம்பெறும் உலக முஸ்லிம் பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் பைசர் முஸ்தபா இதனைத் தெரிவித்துள்ளார்.
மன்னாருக்கும், தமிழ் நாட்டுக்கும் இடையிலான பாலத்தை அமைக்கும் திட்டமொன்று உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
விரைவில் இந்த பாலம் அமைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்று அவர் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பற்ற ரயில் கடவை கண்காணிப்பாளர்களின் போராட்டம் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
ஐயாயிரம் ரூபா கொடுப்பனவு கோரி பாதுகாப்பற்ற ரயில் கடவை கண்காணிப்பாளர்கள் நான்கு நாட்களாக மேற்கொண்டு வந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக போக்குவரத்து அமைச்சு வழங்கிய எழுத்து மூலம் வாக்குறுதியினை அடுத்தே, போராட்டம் கைவிடப்பட்டது.
அமைச்சர் துமிந்த திஸாயக்கவின் மத்தியஸ்தத்துடன், அநுராதபுரம் சிரேஸ்ட காவல்துறை அதிகாரி குறித்த கடிதத்தை தமது சங்கத்திடம் கையளித்ததாக, பாதுகாப்பற்ற ரயில்...
தமக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர் உபுல் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
உபுல் ஜசூரிய இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சில தரப்பினர் சில முதலீட்டுத் திட்டங்களை அமுல்படுத்திக் கொள்ள இவ்வாறு அச்சுறுத்தல் விடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக கடமையாற்றிய காலத்தை விடவும் தற்போது உயிர் அச்சுறுத்தல் அதிகம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பல்வேறு வழிகளில் அழுத்தங்கள் பிரயோகிக்;கப்பட்டு வருவதாகவும் தாம் அழுத்தங்களுக்கு அடிபணியப்...
நேற்று இரவு (01/08/16)மரணமடைந்த பங்களூர் பிச்சைக்காரரிடம் அவர் பிச்சை எடுத்து மூட்டைகட்டி வைத்திருந்த சில்லரை, ரூபாய் நோட்டுகளை கொட்டி எண்ணிப்பார்த்ததில் ரூபாய் ஒருகோடியே முப்பது லச்சம் உள்ளதாம்.
Thinappuyal News -
நேற்று இரவு (01/08/16)மரணமடைந்த பங்களூர் பிச்சைக்காரரிடம் அவர் பிச்சை எடுத்து மூட்டைகட்டி வைத்திருந்த சில்லரை, ரூபாய் நோட்டுகளை கொட்டி எண்ணிப்பார்த்ததில் ரூபாய் ஒருகோடியே முப்பது லச்சம் உள்ளதாம்.