வருடத்திற்கு உலகில் 38 இலட்சம் மக்கள் மதுபாவனையினால் மரணமடைவதாக ஊடகவியலாளர்கள் சந்திப்பில் உலக சுகாதார அமைப்பின் செயற்பாட்டாளர் இதனை தெரிவித்தார்.
Thinappuyal -0
வருடத்திற்கு உலகில் 38 இலட்சம் மக்கள் மதுபாவனையினால் மரணமடைவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் உலக சுகாதார அமைப்பின் செயற்பாட்டாளர் இதனை தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், வருடமொன்றிற்கு மதுபாவனையினால் இலட்சக்கணக்கான மக்கள் பலியாகின்றனர். அதிலும் இலங்கையில் 15 வயதிற்குட்பட்டோர் இதிகமாக மதுபாவனையால் பாதிக்கப்படுவதாக ஆய்வறிக்கையின் மூலம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் கடந்த வருடத்தில் பெண்களின் மதுபாவனை 1.2 வீதமாக இருந்ததாகவும், தற்போது 2.2 வீதமாக அதிகரித்துள்ளதாகவும்...
மறைந்த தமிழினியின் கோரிக்கைக்கு அமைய ‘ஒரு கூர் வாளின் நிழலின்’ புத்தகம் மூலம் கிடைத்த பணம் மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு….
Thinappuyal -
விடுதலைப்புலிகள் அமைப்பின் பெண்கள் பிரிவின் தலைவியான தமிழினி என்றழைக்கப்படும் சிவகாமி ஜெயகுமரன் எழுதிய 'ஒரு கூர் வாளின் நிழலின்' புத்தகம் மூலம் கிடைத்த பணம் மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு நாளை மறுதினம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் கிடைத்த 3 இலட்சம் பணமே குறித்த வைத்தியசாலைக்கு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மறைந்த தமிழினியின் கோரிக்கைக்கு அமைய குறித்த புத்தகத்தால் கிடைக்கும் பணத்தின் ஒரு பகுதி புற்றுநோய் வைத்தியசாலையின் சிறுவர் பிரிவிற்கு வழங்கப்படவுள்ளதாக தமிழினியின்...
கிழக்கு மாகாண ஆட்சி அதிகாரத்தை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றவேண்டும். இல்லையேல் தமிழர்களின் கோவணத்தை சிங்களவர்களும், முஸ்லீம்களும் உருவிவிடுவார்கள்
Thinappuyal -
இலங்கையில் மிகக்கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுவது கிழக்க மாகாணம். குறிப்பாக திருகோணமலைத் துறைமுகம் இதில் உள்ளடக்கப்படுகின்றது. இதில் குறிப்பாக திருகோணமலைத் துறைமுகத்தை சர்வதேச நாடுகள் குறிவைத்துள்ளன. காரணம் என்னவென்றால் உலகப்போர் இடம்பெறுகின்றபொழுது ஆசியப் பிராந்திய நாடுகளைத் தாக்குவதற்கு இலங்கையினுடைய திருகோணமலை துறைமுகத் தளம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. தமிழ், முஸ்லீம், சிங்களம் என தற்பொழுது விரிவுபடுத்தப்பட்டுவிட்டது. கிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மையாக தமிழ் மக்களே வாழ்ந்து வந்தனர். சிங்களவர்களும் முஸ்லீம்களும்...
தஞ்சாவூர், சாலியமங்கலத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்டிருக்கிறார் தலித் பெண் ஒருவர். ' எங்க கிராமத்துல வருஷத்துக்கு 15 பொண்ணுகளை தூக்கிட்டுப் போய்க் கெடுக்கறாங்க. எங்களுக்கு ஒரு தீர்வைக் கொடுங்கய்யா' எனக் கதறுகிறார்கள் கிராமத்து மக்கள்.தஞ்சாவூர், அம்மாப்பேட்டை காவல்நிலைய எல்லைக்கு உள்பட்ட சாலையோர கிராமம் சாலியமங்கலம். இந்தப் பகுதியில் தலித் சமூகத்து மக்கள் குறைந்த எண்ணிக்கையில் வசித்து வருகின்றனர். சாதி இந்துக்கள் பெரும் எண்ணிக்கையில் உள்ளனர். கடந்த...
அண்மைக்காலமாக புனர்வாழ்வுபெற்ற 125 போராளிகள் திடீர் என மரணமடைந்துள்ளனர். இதற்கான காரணம் கண்டறியப்படாவிட்டாலும், தற்பொழுது இதற்கான காரணங்கள் கண்டறியப்படும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. காரணம் என்னவென்றால் புனர்வாழ்வுபெற்ற போராளிகளே இவ்வாறு மரணமடைந்துள்ளார்கள். புனர்வாழ்வுபெறாத போராளிகள் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர். இவர்கள் சுகதேகியாகவும், வெளிநாடுகளிலும் வாழ்ந்து வருகின்றனர். சீனாவிலிருந்தே இவ் ஊசிகள் கொள்வனவு செய்யப்பட்டு போராளிகளுடைய செயற்பாடுகளை செயலிழக்கப்பண்ணும் ஒருவகை ஊசியாகவே இது பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. பல பெண் போராளிகள் பாலியல்...
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் ஆலோசனைக்கமைய மலையகத்தில் 23 கணித விஞ்ஞான
பாடசாலைகளும் ஒரு விளையாட்டு பாடசாலையும் ஒரு நுண்கலை பாடசாலையும் சகல வசதிகளும் கொண்ட பாடசாலைகளாக்
அபிவிருத்தி செய்யப்படும் செயல்திட்டத்தில் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் அவர்களின்
நேரடி கண்காணிப்பில் மத்திய மாகாணத்தில் கண்டிரூபவ் நுவரெலியாரூபவ் மாத்தளை மாவட்டங்களில் 12 பாடசாலைகள்
அபிவிருத்தி செய்யப்பட உள்ளன. இவற்றில் கொத்மலை கல்வி வலயத்திற்குட்பட்ட ஹேதுனாவ மத்திய கல்லூரி
விளையாட்டு பாடசாலையாகவும் ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட டிக்கோயா...
வட்டுவாகல் கோத்தபாய படைமுகாமை மக்களுடன் இணைந்து முற்றுகையிட்ட பாராளுமன்ற உறுப்பினரும், வைத்திய கலாநிதியுமான சி.சிவமோகன் (வீடியோ இணைப்பு)
Thinappuyal -
(வட்டுவாகல்) முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராம அலுவலர் பிரிவிற்குட்பட்ட கோத்தபாய இராணுவ முகாமும் அதனைச் சூழவுள்ள 617 ஏக்கர் நிலப்பரப்பையும் இன்றைய தினம் 03.07.2016 அன்று அளவீடு செய்வதற்காக நில அளவை உத்தியோகத்தர்கள் அவ்விடத்திற்கு வந்தபோது, மேற்படி இராணுவ முகாம் அமைந்துள்ள காணி பொதுமக்களுக்கு உரித்தானது என்பதனால், இவ்விடயந் தொடர்பில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகனுக்குத் தெரியப்படுத்தியதன் காரணமாக, உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்ற பாராளுமன்ற உறுப்பினர்களான சி.சிவமோகன்,...
கூட்டு எதிர்கட்சியின் பாதயாத்திரை இறுதி நிகழ்வின் போது கொழும்பு டார்லி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையகத்திற்கு முன்பாக அநாகரிகமாகவும் ஜனாதிபதியை விமர்சிக்கும் வகையிலும் நடந்துக்கொண்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கட்சியின் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தின் போது முடிவு எடுக்கப்படும் எனவும் அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.
எனினும் கூட்டுஎதிர்கட்சியினால் நேற்றைய தினம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த ஊடகசந்திப்பில் கலந்துக்கொண்ட பாராளுமன்ற...
பிலியந்தலை பொரலஸ்கமுவ பகுதியில் ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரே இவ்வாறு துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அத்திட்டிய பகுதியைச் சேர்ந்த 30 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளிலிருந்து தெரிவந்துள்ளது.
துப்பாக்கி சூட்டை மேற்கொண்ட சந்தேகநபர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
முள்ளியவாய்கால் கிழக்கில் மேற்கொள்ளப்படும் காணி அபகரிப்பை கண்டித்து பொது மக்கள் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.
இதனால் A 35 பிரதான வீதி போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த போராட்டத்திற்கு அனைத்து தமிழ்க்கட்சிகளும் ஆதரவு வழங்கியதோடு சேர்ந்து ஒற்றுமையுடன் பங்களித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.