ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பில் கைது கைதுசெய்யப்பட்ட இராணுவ புலனாய்வாளருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர் லசந்தவின் கொலை தொடர்பான வழக்கு இன்று கல்கிஸ்ஸ நீதவான் நீதமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது, இதன்போது எதிர்வரும் ஆகஸ்ட் 11ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த நபரே தன்னை கடத்தியவர் என்று லசந்தவின் சாரதி அடையாள அணிவகுப்பில் அடையாளங்காட்டியிருந்தார் லசந்த விக்கிரமதுங்க., 2009ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதியன்று ரத்மலானை அத்திட்டிய பகுதியில்...
யாழ். மாநகரசபையின் தொழிலாளர்கள் 14 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை இன்று (03) முதல் ஆரம்பித்துள்ளனர்.
இதனால், யாழ். மாநகர சபையின் அன்றாடச் செயற்பாடுகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது கருத்து தெரிவித்த தொழிலாளர்கள்,
எங்கள் தேவைகள், முன்னேற்றங்கள் குறித்தும், தொடர்ந்து எதிர்கொள்ளும் இடையூறுகள் குறித்தும் எமது நிர்வாக மட்டத்துடன் சந்திப்புக்களை மேற்கொண்டு தெளிவுபடுத்தியிருந்தோம்.
தொழிலாளர்களின் கோரிக்கைகளை செவிமடுப்பதற்கோ, நடைமுறைப்படுத்துவதற்கோ நிர்வாகம் தயார் நிலையில் இல்லை.
நாங்கள் தொடர்ச்சியாக உதாசீனப்படுத்துவதையும் காணக்...
களனி கங்கையில் குப்பை கொட்டிய 28 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் பெண்ணொருவரும் அடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பேலியகொட மற்றும் வத்தளை பொலிஸாரும் கடற்படை அதிகாரிகளும் இணைந்து இவர்களை கைது செய்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஹேகித்த மற்றும் ஹெமில்டன் பகுதிகளிலும் நீர்நிலைகளில் குப்பை கொட்டிய 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் சந்தேகநபர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்காக குறித்த பிரதேசங்களின் பொலிஸ் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், சந்தேகநபர்களை பொலிஸ் பிணையில் விடுதலை...
ஒன்றரை கிலோ தங்கத்துடன் 3 இலங்கையர்கள் இந்தியாவின் திருவனந்தபுரம் விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய ரூபாவின் படி இதன் பெறுமதி 46 இலட்சம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையிலிருந்து யு.எல்.161 என்ற விமானம் மூலம் நேற்று காலை 8.45 மணியளவில் இவர்கள் இந்தியா சென்றுள்ளதாகவும், யோகேஸ்வரி செல்லத்தம்பி, சுசிகலா யோகேஸ்வரன், ராமக்கல் ராமசாமி ஆகிய சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, இவர்களிடம் இருந்து 8 தங்க வளையல்கள், 4 தங்கச்...
இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து எத்தனையோ பேச்சுவார்த்தைகள் இந்த நாட்டில் நடந்தாயிற்று.
தந்தை செல்வா - பண்டா ஒப்பந்தம் முதல் இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தைகள் வரை அனைத்தும் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கானது.
இருந்தும் அவை எதுவும் இன்று வரை சாத்தியப்படாமல் போயிற்று. தமிழ் மக்களுக்கு எதையும் கொடுத்துவிடக்கூடாது என்ற மனநிலையில் இருக்கக் கூடிய சிங்கள ஆட்சியாளர்களால் இன்றுவரை இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண முடியவில்லை.
இனப்பிரச்சினைக்கு தீர்வு தாருங்கள் என்றால் தமிழனை...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியானது மஹிந்தவைப் பெற்றெடுத்த தாய். இந்த தாயை பாதயாத்திரையின் போது மஹிந்த ராஜபக்ஸ சீரழித்துவிட்டதாக நீர்ப்பாசன மற்றும் நீரக வளமூல முகாமைத்துவ அமைச்சர் விஜித் விஜயமுணி சொய்சா தெரிவித்தார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே இவ்வாறு கூறினார்.
தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரே மஹிந்த ராஜபக்ஸ. ஆனால் பாதயாத்திரை எனும் பெயரில் கட்சியின் பெயரை அவமதித்து விட்டதாக குற்றம் சுமத்தினார்.
பாதயாத்திரையின் போது...
நல்லூர் கந்தன் ஆலயத்தில் பக்தர்களின் பாதுகாப்பு கருதி இம்முறை ஆலய சூழல் கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்படவுள்ளதாக யாழ்.மாநகர சபையின் ஆணையாளர் பொ.வாகீசன் தெரிவித்துள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி ஆலய நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவத் திருவிழா எதிர்வரும் 8ம் திகதி கொடியேற்றத்துடன், ஆரம்பமாகி தொடர்ந்து 25 நாட்கள் நடைபெறவுள்ள நிலையில், திருவிழாவுக்கான மாநகர சபையின் ஏற்பாடுகளை ஊடகவியலாளர்களுக்கு தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு மாநகர சபை மண்டபத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதன்போதே...
அட்டன் திறந்த பல்கலைக்கழகத்தின் கற்கை நிலையத்தை பிராந்திய கற்கை நிலையமாக மாற்றுவற்கே மத்திய மாகாண சபையில் பிரேரணை கொண்டுவந்துள்ளோம். – மத்திய மாகாணசபை உறுப்பினர் கணபதி கனகராஜ்
Thinappuyal -
மலையக கல்வி என்பது எமது சமூகத்தின் எழுச்சிக்கான வித்து என்பதை சரியாக புரிந்துகொண்டு அனைத்து தறப்பினரும் தத்தமது பங்களிப்பை நல்கவேண்டும். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மலையக மக்களுக்காக இந்தப்பனியை சரியாக செய்து வருகிறது . அட்டனில் இயங்கிவரும் திறந்த பல்கலைக்கழகத்தின் கற்கை நிலையத்தை பிராந்திய கற்கை நிலையமாக விஸ்தரிக்க கோரும் எமது மத்திய மாகாணசபை பிரேரணை மலையக கல்வி வளர்ச்சியை மேம்பட செய்வதற்கான இன்னுமொரு நடவடிக்கையாகுமென மத்திய மாகாண...
அரசாங்கத்திற்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சியினர் மேற்கொண்ட பாதயாத்திரையின் போது தமது கட்சி தலைமையத்துக்கு முன்னால் வந்து கூச்சலிட்டதாக அமைச்சர் மஹிந்த அமரவீர குற்றம் சுமத்தியுள்ளார்.
சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், பாதயாத்திரை நடாத்துவதாக கூறிய கூட்டு எதிர்க்கட்சியை சார்ந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் சிரிக்கொத்தவின் முன்னால் பஸ்களை நிறுத்திவிட்டு வந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில்...
கண்டியில் ஒன்பது மாணவிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக, பொலிஸாரை மேற்கோள் காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
கண்டி ஹந்தான பிரதேசத்தில் இயங்கும் மனித தலைமைத்துவ உயர்கல்விப் பயிற்சி பாடநெறியில் இணைந்திருந்த 9 மாணவிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
15 முதல் 17 வயது வரை மாணவிகள் 9 பேர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக மருத்துவ சோதனைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேக நபரை கைது செய்வதற்கான...