பிளாக்பெர்ரி நிறுவனம் அதன் இரண்டாவது ஆண்ட்ராய்டு அடிப்படை கைப்பேசியான DTEK 50 என்ற ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பிளாக்பெர்ரி DTEK 50 ஸ்மார்ட்போன் செவ்வாய்கிழமை முதல் $299 (சுமார் ரூ.20,000) விலையில் அமெரிக்க, கனடா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின், இத்தாலி, நெதர்லாந்து போன்ற நாடுகளில் பிளாக்பெர்ரி ஆன்லைன் கடைகள் வழியாக முன்ஆர்டர் வரிசையில் கிடைக்கும். ஒற்றை சிம் ஆதரவு கொண்ட பிளாக்பெர்ரி DTEK 50 ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு ஓஎஸ்...
ஹவாய் நிறுவனம் அதன் புதிய பி9 என்ற ஸ்மார்ட்போனை ஆகஸ்ட் 17ம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று உறுதியளித்துள்ளது. எனினும் ஹவாய் பி9 பிளஸ் ஸ்மார்ட்போனின் வெளியீடு பற்றி நிறுவனம் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த இரண்டு ஸ்மார்ட்ஃபோன்களிலும் மிகப்பெரிய சிறப்பம்சமாக பழம்பெரும் கேமரா தயாரிப்பாளரான லைகா உடன் இணைந்து செய்யப்பட்ட ஒரு இரட்டை பின்புற கேமரா அமைப்பு இடம்பெறுகின்றன. ஏற்கனவே இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களை பற்றி கடந்த ஏப்ரல்...
இன்டெக்ஸ் நிறுவனம் அதன் புதிய அக்வா பவர் எச்டி 4ஜி ஸ்மார்ட்போனை ரூ.8,363 விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இன்டெக்ஸ் அக்வா பவர் எச்டி 4ஜி ஸ்மார்ட்போன் கிடைக்கும் விவரங்கள் இல்லாமல் நிறுவனத்தின் வலைத்தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. எனினும், இந்த ஸ்மார்ட்போனை விரைவில் சந்தையில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டில் வெளியிடப்பட்ட இன்டெக்ஸ் அக்வா பவர் எச்டி ஸ்மார்ட்போனின் வெற்றியை தொடர்ந்து இந்த புதிய இன்டெக்ஸ் அக்வா பவர் எச்டி 4ஜி...
பானாசோனிக் நிறுவனம் தற்போது அதன் புதிய பட்ஜெட் ஸ்மாரட்போனான டீ44 லைட் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பானாசோனிக் டீ44 லைட் ஸ்மார்ட்போன் திங்கட்கிழமை முதல் ஸ்நாப்டீல் இணையதளம் வழியாக ரூ.3,199 விலையில் விற்பனைக்கு செல்லும். டூயல் சிம் ஆதரவு கொண்ட பானாசோனிக் டீ44 லைட் ஸ்மார்ட்போனில் MIUI அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ மூலம் இயங்குகிறது. பானாசோனிக் டீ44 லைட் ஸ்மார்ட்போனில் 800x480  பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 4.0 இன்ச்...
வாட்ஸ் அப் உரையாடல்களை நாம் அழித்துவிட்டாலும் அது முற்றிலுமாக அழியாது என இண்டெர்நெட் வல்லுனர் ஒருவர் கண்டறிந்துள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. வாட்ஸ் அப் மூலம் மேற்கொள்ளப்படும் உரையாடல்கள் கடந்த ஏப்ரல் மாதம் முதல் என்கிரிப்ட் செய்யப்படுகிறது. இதன் மூலம் 3ம் நபர் அறியாத வகையில் பாதுகாப்பான உரையாடல் நடைபெறும் எனவும் கூறப்பட்டது. இந்நிலையில் வாட்ஸ் அப் உரையாடல்களை நாம் அழித்துவிட்டாலும் அது முற்றிலுமாக அழியாது என இண்டெர்நெட் வல்லுனர் ஒருவர்...
பார்க்கும் போது அவ்வளவு வசீகரம் இல்லாமல் கொஞ்சம் அழுக்காய், அப்படியே சாப்பிட்டால் லேசான கசப்பாய், உலர்வாய் இருக்கும் இந்த சீரகம். எப்போது சாப்பிடாலும் சாப்பிட்ட கொஞ்ச நேரத்திற்க்கெல்லாம் வயிறு வீங்கிக் கொள்கிறது; அப்படி ஒன்றும் அதிகமாக சாப்பிடவில்லை அளவாய்த்தான் சாப்பிட்டேன் ஆனாலும் வயிறு இப்படி ஆகிவிட்டது, என வருத்தப்படுபவருக்கு சீரகம் ஒரு அருமையான மருந்து. * சீரகம், ஏலம் இதனை நன்கு இளவறுப்பாக வறுத்துப் பொடி செய்து உணவிற்குப்பின் 1/4 ஸ்பூன் அளவு சாப்பிட தீரும். சீரகத்தை...
வறுத்தோ, வேகவைத்தோ சாப்பிடுவதை விட முளைக்கட்டி சாப்பிடுவ்வதால் 90 பங்கு சத்து அதிகம் கிடைக்கிறது. அந்தந்தத் தானியங்களின் முளையிடும் காலம் அறிந்து முளைகட்டி சாப்பிடவும். அப்படிச் சாப்பிடுவது நல்லது.அப்படியில்லாமல் 4,5 தானியங்களை ஒன்றாக ஊற வைத்து முளைக்கட்டி சாப்பிடுவது அவ்வளவு சிறந்தது அல்ல. ஒரு நாளைக்கு ஒரு தானியமாவது சேர்த்துக் கொள்ள வேண்டும். மிகவும் ருசியாக இருந்தாலும் அதிகமாகச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.தனித்தனியாகச் சாப்பிடும்போது சுவை தேவையென்றால் தேங்காய், வெல்லம், காரத்திற்கு...
திவ்யஸ்ரீ சில நாட்களாக வெளியில் சொல்ல முடியாத இக்கட்டான சூழ்நிலையில் இருந்தாள். அவளது அலைபேசிக்கு தெரியாத  எண்ணில் இருந்து போன் அடிக்கடி வந்தது. எடுத்து ‘ஹலோ’ சொன்னால் எதிர்முனையில் யாரும் பேசுவதில்லை. பெருமூச்சு  விடும் சத்தம் மட்டும் கேட்கும். அந்த தொல்லை தாங்க முடியாமல் அலைபேசியை ஆப் செய்துவிட்டாள். அவள் வேலை  செய்யும் தனியார் ஹெல்ப் லைனுக்கே இதே விதமான அழைப்பு வர ஆரம்பித்தன. யாரோ ஓர் ஆண் செய்யும்...
உன்னை விலக்கி என்னை தனித்துத் தியானிக்க வைக்கும் உயிரின் நோக்கம் தனித்து தியானித்திருந்தது - தேவதேவன் மாரிமுத்து-மதுமிதா தம்பதிக்கு திருமணம் பெற்றோர்களால் சிறப்புடன் நடத்தப்பட்டது. அடுத்த வருடமே மதுமிதா கர்ப்பமானாள். கோலாகலமாக வளைகாப்பும் நடந்தது. ஆரோக்கியமான பெண் குழந்தை பிறந்தது. ஆனால், மாரிமுத்துவுக்கும் அவனது வீட்டாருக்கும் ஏக வருத்தம். அவர்கள் ஆண் குழந்தைதான் பிறக்கும் என எதிர்பார்த்து இருந்தார்கள். எங்கள் வழியில் ஆண் வாரிசுதான் அதிகம் என பெருமை பேசினார்கள். இரண்டாவது...
மருதாணி இலையை நன்கு மைபோல் அரைத்து, அதில் எலுமிச்சம் பழச்சாறையும், வெந்தயம் பவுடர் இரண்டு ஸ்பூன் கலந்து கொள்ள வேண்டும். இக்கலவையை முதல் நாள் இரவே செய்து கொள்ள வேண்டும். காலையில் எழுந்ததும், இக்கலவையை அனைத்து முடிகளிலும் படும்படி நன்றாக தேய்த்து இரண்டு அல்லது மூன்று மணிநேரம் ஊறவைத்து பிறகு சிகைக்காய்த்தூள் தேய்த்து நல்ல தண்ணீரில் கழுவ வேண்டும். குறிப்பாக மருதாணியை போடுவதற்கு முன், தலையில் எண்ணெய் பசை இல்லாதவாறு பார்த்து கொள்ள வேண்டும். முடி...