சோமாலியாவில் உள்ள ஆப்பிரிக்க ஒன்றிய படையில் பணியாற்றி வரும் 17 உகாண்டா வீரர்கள் மொகதிஷுவில் உள்ள ராணுவ நீதிமன்றத்தில் ஆஜராயினர். அவர்கள் ராணுவ இயந்திரங்கள் மற்றும் எரிபொருளை சோமாலிய நகரத்தில் விற்பனை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டனர். 17 நபர்களில் ஒரு படை வீரர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். அவருக்கு ஓர் ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது. ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு படையினர் பணியில் அமர்த்தப்பட்ட பின், ஆப்பிரிக்க ஒன்றிய அலுவலகத்தோடு தொடர்புடைய ராணுவ நீதிமன்றம்...
இஸ்லாமியவாதிகளால் கொல்லப்பட்ட 84 வயதான பாதிரியார் ஷாக் ஹமலுக்கு, பிரான்சின் ரூவென் பேராலயத்தில் நடைபெற்ற இறுதிச் சடங்கின்போது, பலரும் அஞ்சலி செலுத்தினர். அவருடைய வாழ்க்கை முழுவதையும் கடவுளுக்கு அர்ப்பணித்துவிட்டார். அன்பையும், சகிப்புத் தன்மையையும் விதைத்திருக்கிறார் என்று, கொல்லப்பட்ட பாதிரியாரின் சகோதரி ரோஸ்லின் தன்னுடைய சகோதரர் பற்றி தெரிவித்திருக்கிறார். அனைவரும் அவருடைய பணியை தொடர்ந்து ஆற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் குழுவினருக்கு விசுவாசமான பிரெஞ்சு...
எச்ஐவி தடுப்பு சிகிச்சைக்கு, பொது நிதி ஆதரவு சுகாதாரச் சேவையை பயன்படுத்தலாமா என்பது தொடர்பான உயர் நீதிமன்ற வழக்கில், பிரிட்டிஷ் உதவி நிறுவனம் ஒன்று வெற்றி பெற்றிருக்கிறது. அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் கென்யா போன்ற நாடுகளில் பிஆர்இபி என்று அறியப்படும் இது, ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது. ஆனால், இங்கிலாந்தின் தேசிய சுகாதாரத் துறை, சட்டப்படி இதற்கு நிதி உதவி அளிக்க முடியாமல் இருப்பதாக வாதிட்டது. சுகாதாரத்துறையின் தீர்மானத்திற்கு எதிராக தீர்ப்பு வந்துள்ளதில் உற்சாகம்...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பியசேனவின் விளக்க மறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 5ம் திகதி வரையில் பியசேனவை விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டே நீதவான் லங்கா ஜயரட்ன உத்தரவிட்டுள்ளார். அரசாங்க வாகனத்தை மீள ஒப்படைக்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பியசேன, அரசாங்கத்திடம் வாகனத்தைப் பெற்றுக்கொண்டு தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் அந்த வாகனத்தை மீளவும் ஒப்படைக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது. கடந்த 29ம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பியசேனவை கைது...
16.07.2016இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானபீடத்தில் நடைபெற்ற அசம்பாவிதம் தொடர்பாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் உண்மையான நிகழ்வினையும், நிலைப்பாட்டினையும் தொடர்புசாதனங்கள் மூலம் மக்களுக்கும் ஏனைய நிர்வாகிகளுக்கும் தெரிவித்திருந்தது. இந்நிலையில் ஒவ்வொருவரும் தங்கள் நிலையிலிருந்து தகவல்களை பத்திரிகைகளிலும் சமூக வலைத் தளங்களிலும் தெரிவித்து வருகின்றனர். சிலர் தங்கள் சுய இலாபம் கருதி உண்மைக்கு மாறான தகவல்களை வெளியிட்டு வருவதை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வன்மையாகக் கண்டிக்கின்றது. பல்கலைக்கழகங்களில் முரண்பாடுகள் அல்லது குழு...
முல்லைத்தீவு மாவட்டம் முள்ளிவாய்க்கால் கிழக்கில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான 617 ஏக்கர் காணிணை அளவீடு செய்து நிரந்தரமாக கடற்படைக்கு வழங்குவதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சியை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றது. மேற்படி காணி அபகரிப்பு நடவடிக்கையை எதிர்த்து காணி உரிமையாளர்களால் புதன்கிழமை (03-08-2016) காலை 9.00 மணியளவில்  மேற்கொள்ளப்படும் போராட்டத்திற்கு எமது கட்சி முழுமையான ஆதரவை வழங்குவதுடன், இவ்விடயத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அனைத்து பொது அமைப்புக்கள்...
யாழ். மாவட்ட செயகத்திற்கு அருகில் கண்டி வீதியில் நேற்று மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் மரணமானார். புகைப்பட ஊடகவியலாளரான 68 வயதுடைய கந்தையா நவரட்ணம் என்பவரே தலையில் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி சென்ற பேருந்து கண்டி வீதியில் சோமசுந்தரம் அவனியூ வீதியில் திரும்ப முற்பட்ட மோட்டார் சைக்கிளை மோதியதிலையே...
பாத யாத்திரை குறித்து மத்திய செய்குழு தீர்மானிக்கும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கூட்டு எதிர்க்கட்சியினால் ஒழுங்கு செய்யப்பட்ட பாத யாத்திரையில் பங்கேற்ற சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். கட்சியின் தலைமையகம் அமைந்துள்ள பகுதியில் கூக்குரல் எழுப்பி அதிருப்தி வெளியிட்டமை, பாத யாத்திரையில் பங்கேற்றமை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் தெரிவித்துள்ளார். சுதந்திர கட்சியின் உறுப்பினர்களை பழிவாங்கும் நோக்கில் இந்த...
கூட்டு எதிர்க்கட்சிக்கே மக்கள் பலம் அதிகளவில் காணப்படுகின்றது என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கூட்டு எதிர்க்கட்சி ஒழுங்கு செய்திருந்த பாத யாத்திரையில்  இரண்டு லட்சம் பேர் பங்கேற்றிருந்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கம் பல்வேறு வழிகளில் அடக்குமுறைகளில் ஈடுபட்டு வந்ததாகத் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் மூன்றில் பெரும்பான்மை பலத்தை விடவும் அதிகளவு மக்கள் ஆதரவு கூட்டு எதிர்க்கட்சிக்கு உண்டு என...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பயங்கரவாத அமைப்பு ஒன்றை உருவாக்கப் போகின்றாரா என அமைச்சர் விஜித் விஜயமுனி டி சொய்சா கேள்வி எழுப்பியுள்ளார். மிகவும் இழிவான கட்சி தலைமையகத்திற்கு முன்னால் கூக்குரல் எழுப்பிக்கொண்டு பாத யாத்திரை நகர்ந்தது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். எனினும் அந்த தரப்பிற்கு அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். கூட்டு எதிர்க்கட்சியினர் இனவாத, கடும்போக்குவாத, ஜாதிவாத கொள்கைகளையே பின்பற்றுகின்றனர் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். இன்னும் ஒரு...