இந்திய அரசாங்கத்தின் அழுத்தம் காரணமாக சீனாவின் துறைமுக நகர் அபிவிருத்தித் திட்டம் இடைநிறுத்தப்பட்டு மீளாய்வு செய்யப்பட்டது என சுகாதார அமைச்சர், அமைச்சரவை இணைப்பேச்சாளர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்hளர்.
மஹிந்த ராஜபக்ஸ ஆட்சிக் காலத்தில் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
இந்த திட்டத்தின் மூல உடன்படிக்கையில் இலங்கைக்கு பாதகம் ஏற்படுத்தக்கூடிய வகையில் காணப்பட்ட அனைத்து விடயங்களும் நீக்கப்பட்டு மீளாய்வு செய்யப்பட்டு புதிய உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்தில் ஏற்படக்கூடிய தீமைகள் குறித்து இந்தியா விளக்கம்...
வெளித் தரப்பினரே பாத யாத்திரையில் குழப்பங்கள் விளைவித்தனர் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
பாத யாத்திரை ஆரம்பிக்கப்பட்ட தினம் முதல் இறுதி வரையில் சிறந்த முறையில் நடைபெற்றதாகத் தெரிவித்துள்ளார்.
பாத யாத்திரை இவ்வளவு வெற்றியளிக்கும் என காவல்துறையினர் கூட எதிர்பார்க்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாத யாத்திரையை ஏற்பாடு செய்திருந்த அனைத்து தரப்பினருக்கும் நன்றி பாராட்டுவதாகத் தெரிவித்துள்ளார்.
நேர்மையான நோக்கத்துடன் இந்த பாத யாத்திரையில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் பங்கேற்றிருந்தனர் எனவும், சில...
இலங்கையர் ஒருவர் கனடாவில் குற்றச் செயல்களில் ஈடுபட்டமை நிரூபணமாகியுள்ளது.
இலங்கையர் ஒருவருக்கு எதிராக கனடாவில் தொடரப்பட்டுள்ள வழக்கில் பத்து குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதவான் தெரிவித்துள்ளார்.
லிங்கநாதன் மகேந்திரராஜ என்ற இலங்கையரே இவ்வாறு தண்டனை அனுபவிக்கப்படக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
ஆயுத பயன்பாடு, தாக்குதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பத்து குற்றச் செயல்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுக்கள் நிருபிக்கப்பட்டு உள்ளன.
மகேந்திராஜா கடந்த 1990ம் ஆண்டு முதல் கனடாவில் வாழ்ந்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆடி அமாவாசை, ஆடிப்பெருக்கு, குருப்பெயர்ச்சி என்பன இன்று ஒன்றாக இணைந்து வருகின்றது.
ஆடி அமாவாசை அன்று கோயில் குளம், நதிக்கரை, கடல் போன்ற நீர்நிலைகளுக்குச் சென்று நீராடி, நம் முன்னோர்களுக்கு எள்ளும், நீரும் விட்டு தர்ப்பணம் கொடுக்கவேண்டும்.
பின்னர் வீட்டில் முன்னோர் படங்களுக்கு மலர்ச்சரம் அணிவித்து, அவர்களுக்குப் பிடித்த உணவு வகைகளுடன், பூசணிக்காய், வாழைக்காய் போன்ற காய்கறிகளையும் சமைத்து படைக்க வேண்டும்.
பின்னர் காகங்களுக்கும், அதிதிகளுக்கும் உணவளித்து அதன் பிறகே நாம் உண்ணவேண்டும்....
தஞ்சாவூர், சாலியமங்கலத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்டிருக்கிறார் தலித் பெண் ஒருவர்.
எங்க கிராமத்துல வருஷத்துக்கு 15 பொண்ணுகளை தூக்கிட்டுப் போய்க் கெடுக்கறாங்க. எங்களுக்கு ஒரு தீர்வைக் கொடுங்கய்யா எனக் கதறுகிறார்கள் கிராமத்து மக்கள்.
தஞ்சாவூர், அம்மாப்பேட்டை காவல்நிலைய எல்லைக்கு உள்பட்ட சாலையோர கிராமம் சாலியமங்கலம். இந்தப் பகுதியில் தலித் சமூகத்து மக்கள் குறைந்த எண்ணிக்கையில் வசித்து வருகின்றனர். சாதி இந்துக்கள் பெரும் எண்ணிக்கையில் உள்ளனர்.
கடந்த 31-ம் தேதி இரவு...
திடீர் திருப்பங்களுக்கு சுவாதி கொலை வழக்கில் குறைவே இல்லை.
சுவாதி தந்தையான கோபாலகிருஷ்ணன் அவரது உண்மையான தந்தையா, வளர்ப்புத் தந்தையா? சுவாதி கொலையுண்ட இடத்திற்கு வந்த கோபாலகிருஷ்ணன் அழவில்லை.
அவரது சித்தப்பா செல்போனில் சுவாதியின் வெட்டுப்பட்ட உடம்பை பல கோணங்களில் படம் எடுத்துக் கொண்டிருந்தார்.
கோபாலகிருஷ்ணன் மனைவியின் தங்கைக்கு பிறந்தவர்தான் இந்த சுவாதியும், அவரது அக்கா நித்யாவும்.
அவர்களை கோபாலகிருஷ்ணன் தத்தெடுத்து வளர்த்தார் என இணையதளங்களில் செய்தி வெளியானது.
இன்னும் சில மீடியாக்களில் சுவாதிக்கு பெங்களூரில்...
நூலகம் என்பது தகவல் மூலங்களின் அல்லது சேவைகளின் ஒரு சேமிப்பு ஆகும். நூலகம் அறிவை வளர்க்கும் ஓர் இடமாகும்.
அந்த வகையில் ஆசியாவிலேயே இல்லாத பெருமளவான நூல்களுடன் கம்பீரமாய் தோற்றமளித்த ஒன்றே யாழ். நூலகம்.
எனினும், கடந்த ஆட்சிகாலத்தில் இடம்பெற்ற சில கசப்பான சம்பவங்களே யாழ். நூலகம் எரியூட்டப்பட்டமைக்கான காரணம் என நோக்கப்படுகின்றது.
எவ்வாறான கசப்பான சம்பவத்தின் பின்னணியில் இந்த நூலகம் எரிக்கப்பட்டிருந்தாலும், யாழ். நூலகம் எரிக்கப்பட்டதே ஒரு பாரிய கசப்பான சம்பவமாகவே...
ஜனாதிபதியின் பாராளுமன்ற வாழ்க்கைக்கு பத்து ஆண்டுகள் பூர்த்தியினை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட ஆசீர்வாத பூஜை களனி விகாரையில்……..
Thinappuyal -
ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் பாராளுமன்ற வாழ்க்கைக்கு பத்து ஆண்டுகள் பூர்த்தியாவதை
முன்னிட்டு நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் நல்லாசி வேண்டி ஏற்பாடு செய்யப்பட்ட ஆசீர்வாத பூஜை இன்று (02)
பிற்பகல் களனி விகாரையில் இடம்பெற்றது.
இன்று பிற்பகல் வரலாற்று பிரசித்திபெற்ற களனி விகாரைக்குச் சென்ற ஜனாதிபதி அவர்கள் முதலாவதாக மத
அனுட்டானங்களில் ஈடுபட்டு ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டதன் பின்னர் ஆசீர்வாத பூஜையில் கலந்துகொண்டார்.
களனி ரஜமகா விகாராதிபதி பேராசிரியர் சங்கைக்குரிய கொள்ளுப்பிட்டி மஹிந்த சங்கரக்கித்த...
மேஷம்
அஸ்வினி 55% பரணி 70% கிருத்திகை 1ம் பாதம் 60%
எதிலும் முதலிடத்தை விரும்புபவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் அமர்ந்துக் கொண்டு நினைத்த காரியங்களையெல்லாம் நிறைவேற்றித் தந்த குருபகவான் 02.8.2016 முதல் 1.09.2017 வரை 6-ம் இடத்தில் அமர்வதால் கொஞ்சம் வளைந்துக் கொடுக்கக் கற்றுக் கொள்ளுங்கள். குருபகவான் 2-ம் வீட்டை பார்ப்பதால் பணவரவு உண்டு. குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். தள்ளிப் போன சுபநிகழ்ச்சிகளெல்லாம் அடுத்தடுத்து வீட்டில் நடந்தேறும்....
செயற்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
அண்மைக்காலமாக புனர்வாழ்வுபெற்ற முன்னாள் போராளிகள் பலரும் இனங்காணப்படாத
மர்மமான நோய்த்தாக்கங்களினால் சாவடைவதாக செய்திகள் வருகின்றன. இதுதொடர்பில் வடக்கு
மாகாண சுகாதார அமைச்சர் டாக்டர் ப.சத்தியலிங்கம் சுகாதார அமைச்சின் உயர்அதிகாரிகளுடன்
கலந்துரையாடலொன்றை அண்மையில் நடாத்தியுள்ளார். இதில் அண்மைக்காலமாக சாவடையும்
புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் தொடர்பில் விசேட கவனம்
செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சரின் ஊடகப்பிரினால் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது அண்மைக்காலமாக முன்னாள் போராளிகள்; மர்மான
நோய்தாக்கத்தினால் சாவடைவதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. இதுதொடர்பில் வடக்கு டக்கு மாகாண
சகாதார அமைச்சின்...