மணிலா, குயிசான் நகர சிறையில் கைதிகளின் அதிகரிப்பால், உலகில் எங்கும் இல்லாத அளவுக்கு நெரிசலில் சிக்கி, கைதிகள் தவிக்கின்றனர். போதிய பொருளாதார வசதியின்றி நிர்வாகமும் திண்டாடுகிறது.
பட்டியில் அடைக்கப்பட்ட பண்ணை விலங்குகளை விடவும் மோசமாக, ஒருவர் மீது ஒருவர் சாய்ந்தும் உரசிக்கொண்டும் நாட்களை கடினமாக கடத்துகின்றனர். சுழற்சி முறையில் உறங்க கட்டயப்படுத்தப்படுகின்றனர்.
குற்றம் செய்யும் சிறை
இந்த செய்தியில் நாம் அதிர்ச்சியோடு பார்க்கும் சிறைச்சாலை படங்கள் 2016 ஜூலையின் மூன்றாவது வாரத்தில் எடுக்கப்பட்டதுதான்.
குயிசான்...
1983 களில் இடம்பெயர்ந்த வவுனியா கல்நாட்டிகுளம் கிராம மக்களை மீள்குடியேற்ற
வவுனியா மாவட்டத்தின் தெற்கு எல்லையில் அமைந்துள்ள கல்நாட்டினகுளம் கிராமத்திலிருந்து
இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார
அமைச்சரும் வவுனியா மாவட்ட மாகாண சபை உறுப்பினருமாகிய டாக்டர் ப.சத்தியலிங்கம்
தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அமைச்சரின் ஊடகப்பரிவினால் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்
மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது ஆசிகுளம் கிராம சேவகர் பிரிவில் அமைந்துள்ள
கல்நாட்டினகுளம் மிகப்பழைய கிராமமாகும். இற்றைக்கு 300 வருடங்களுக்கு மேலாக தமிழ் மக்கள்
வாழ்ந்து வந்த கிராமாகும். வவுனியா மாவட்டத்தின்...
கறுப்பர் இன சுதந்திரத்திற்காகவும் தென்னாப்பிரிக்காவில் காலனி ஆதிக்கத்தை எதிர்த்தும் ஆயுதம் மற்றும் அகிம்சை வழியில் போராட்ட வாழ்வை நடத்தியவர் மண்டேலா.
அதற்காக, 27 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் கழித்தவர். உலக அமைதிக்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. அவரைப் பற்றிய வரலாற்றை அறிந்திருப்போம். நாம் அறிந்திராத சில சுவாரஸ்யங்கள்.
நெல்சன் மண்டேலா, க்ஸோசா என்ற ஆப்பிரிக்க பழங்குடி இனத்தில் ஜூலை 18, 1918 ல் பிறந்தார். அப்போது அவருக்கு வைத்த...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு அரசாங்கம் உத்தியோகபூர்வ இல்லத்தை வழங்கியுள்ளது.
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அரசாங்கம் உத்தியோகபூர்வ இல்லங்களை வழங்க வேண்டியது அவசியமானது.
இதன் அடிப்படையில் மஹிந்தவிற்கு உத்தியோகபூர்வ இல்லம் வழங்கப்பட்டுள்ளது.
வோர்ட் பிளேஸில் அமைந்துள்ள இந்த இல்லம் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சராக இருந்த போது பயன்படுத்திய உத்தியோகபூர்வ இல்லமே, மஹிந்தவின் உத்தியோகபூர்வ இல்லமாக உருவாகியுள்ளது.
சுமார் 30 மில்லியன் ரூபா செலவில் குறித்த இல்லம் புனரமைக்கப்பட்டுள்ளது.
தமக்கு இதுவரையில் உத்தியோகபூர்வ இல்லம் வழங்கப்படவில்லை...
சர்வாதிகாரிகளுக்கு ஏற்பட்ட நிலைமையே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் நேரும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
பாத யாத்திரையின் நிறைவில் கூட்டத்தில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை வரலாற்றில் முன்னெடுக்கப்பட்ட மிகப் பெரிய பாத யாத்திரை இதுவெனவும், அன்று லிப்டன் சுற்று வட்டத்தில் பாத யாத்திரையை ஆரம்பித்து கதிர்காமம் சென்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அந்தக் காலப்பகுதியிலும் அடக்குமுறைகள் காணப்பட்டதாகவும் எனினும் அப்போதைய ஜனாதிபதி பிரேமதாச...
பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு, அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல பதிலளித்துள்ளார்.
அமைச்சர்களின் ஆலோசர்கள் தொடர்பில் ரஞ்சன் ராமநாயக்க நேற்றைய தினம் கேள்வி எழுப்பியிருந்தார்.
அமைச்சர் ஒருவர் 45 ஆலோசர்களை அமைச்சில் கடமையில் ஈடுபடுத்தியிருந்தால் அது தவறானது என ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்திருந்தார்.
எனினும், அவ்வாறு தாம் 45 ஆலோசகர்களை கடமையில் ஈடுபடுத்தவில்லை என அமைச்சர் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
டொக்டர் விமல் குணவர்தன என்னும் ஒரே ஒருவரே பெருந்தெருக்கள் அமைச்சின் ஆலோசகராக கடமையாற்றி வருகின்றார் என...
சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்தும் நோக்கில் பாத யாத்திரை முன்னெடுக்கப்பட்டது – பைசர் முஸ்தபா:-
Thinappuyal -
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்தும் நோக்கில் பாத யாத்திரை முன்னெடுக்கப்பட்டது என அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
சுதந்திரக் கட்சியை பிளவடையச் செய்வதே கூட்டு எதிர்க்கட்சியின் நோக்கமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர்கள் இவ்வாறு கட்சியை பிளவுபடுத்த முயற்சிப்போருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பார்கள் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
பாத யாத்திரையில் இணைந்து கொண்டு கட்சியையும் மத்திய செயற்குழு உறுப்பினர்களையும் விமர்சனம்...
மட்டக்களப்பு அரங்க ஆய்வுகூடம் கொழும்பில் நிகழ்த்திய மண்ணோக்கும் வேர்கள், விண்ணோக்கி வளரும் கிளைகள்.
Thinappuyal -
இலங்கையின் நடனங்களுக்கு உலகப் பரப்பில் ஒரு அங்கீகாரம் தேடித்தந்தவர் சித்திரசேனா. இவர் ஆரம்பித்த நடனப் பள்ளி சித்திரசேன கலாயத்தனய என்ற பெயரில் கொழும்பில் இயங்கி வருகிறது. இதனை இவரின் துணைவியாரன வஜிராவும் ப வாரிசுகளான பிரபல இலங்கை நர்த்தகிகள் ,உபேகா,அஞ்சலி,ஹேஸ்மா,ஊமிதந்தி,தாஜி ஆகியோரும் அர்ப்பணிப்புடன் இயக்கி வருகின்றனர்.
சித்திரசேனா. வங்காளத்தில் மஹாகவி தாகூரின் சாந்திநிகேதனத்தில் வட இந்திய நடனங்களையும், கேரளாவில் குரு கோபினத் கீழ் கதகளியையும் பயின்றவர், இலங்கை நடங்களை உலகப்...
படை பயணங்கள் மற்றும் பேச்சுக்களினால் அரசாங்கத்தை தடுக்க முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பொலனறுவையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சில தரப்பினர் அரசாங்கத்தை விமர்சனம் செய்தாலும் நாட்டை கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பட்டுள்ளார்.
அரசாங்கம் இணைந்து செயற்படுவதனை விரும்பாத தரப்பினர் விமர்சனம் செய்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் அமைக்க வேண்டியதில்லை என முன்னாள் இராஜதந்திரியும் அரசியல் ஆய்வாளருமான தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவினால் ஊடகங்களுக்கு நேற்றைய தினம் அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கையில் தமது பெயரும் குறிப்பிடப்பட்டிருந்த காரணத்தினால் சில விளக்கங்களை அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கும் உத்தேசம் கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இராணுவ ஆட்சிக் காலங்களின் போது காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை...