ஆடியமாவாசை…
பிண்டமாய் போன
அப்பாவுக்கு
கண்ணீரில்
எள்ளுத் தண்ணி
இறைத்த என் இடம் நிரப்ப
வருவான் ஒரு பாலன்….
அப்பா பெயர், நட்சத்திரம்
மழலையாய் உதிரும்
இந்த வயதில்
இவனுக்கு ஆடியமாவாசை
எந்தன் கண்ணீரும் உறையும்
‘தகப்பனைத் தின்னி’
பிள்ளையின்
எள்ளுத் தண்ணீராய்
கண்ணீரைத் தந்தபடி
கூட இருந்த
தாய் விளக்கம்...
‘அவர் காணாமல் போகையில்
இவன் வயிற்றில்…
தேடுறம் தேடுறமெண்டு…
இனித் தேட ஏலாதெண்டு’
திண்டவனைக் காப்பாற்றும்
ஆணைக் குழுக்கள் முடிவாக்கும்
இன்னும்
எத்தனை வருஷங்கள்
இவன் நோன்பு…
இவன் போல்
இன்னும் எத்தனை எத்தனை
தகப்பன் தின்னிகளோ!...
ஆடி அமாவாசைகள்
வந்து வந்து போகும்…
திண்ட பேய்களுக்கு
பெரும் பிண்டம் எறியும் நாள்
என்று வந்து சேரும்!
-சண்முகபாரதி
அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், பெரும்பாலான வீடுகளின் தரைத்தளம் கடுமையாக சேதமடைந்துள்ளது.
இந்நிலையில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட காரிலிருந்து பெண் ஒருவரை காப்பாற்றும் வீடியோ வைரலாக பரவி வருகிறது.
அந்த வீடியோவில், காரின் உள்ளே சிக்கி கொண்ட பெண் வெளியே வரமுடியாமல் பரிதவிக்கிறார்.
சில நிமிடங்களில் மிகவும் கஷ்டப்பட்டு வெளியே வரும் பெண்ணை நீரின் வேகத்தையும் கூட பொருட்படுத்தாது நான்கு...
தகவல் அறிந்து கொள்ளும் சட்டத்தில் சபாநாயகர் கரு ஜயசூரிய கையொப்பமிட்டுள்ளார்.
ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றில் விவாதம் நடத்தப்பட்டு வாக்கெடுப்பின் மூலம் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
எனினும்இ கூட்டு எதிர்க்கட்சியினர் சில திருத்தங்களை பரிந்துரை செய்திருந்தனர்.
இந்த திருத்தங்களை மேற்கொண்டு அதன் பின்னர் சட்டத்தை சபாநயாகர் அங்கீகரிப்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும்இ சில கால தாமதங்களுக்கு பின்னர் தற்போது சட்டத்தை சபாநாயகர் கையொப்பமிட்டு...
பாத யாத்திரையில் சிறுவனை பயன்படுத்தியது சட்டவிரோதமானது என பெற்றோலிய வள அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ சிறுவன் ஒருவரை தோளில் சுமந்து சென்றதாகவும், சிறுவன் கொடியொன்றை ஏந்திச் சென்றதாகவும் தெரிவி;;த்துள்ளார்.
இது தொடர்பிலான வீடியோ காட்சியும் அவர் வெளியிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுத்நதிரக் கட்சியின் தலைமையகத்தை கடக்கும் போது கூட்டு எதிர்க்கட்சியினர்...
உடுவே தம்மாலோக்க தேரருக்கு எதிரான வழக்கு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 20ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.அனுமதிப்பத்திரம் இன்றி யானைக் குட்டியொன்றை வைத்திருந்தார் என உடுவே தேரர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த வழக்கு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 20ம் மற்றும் 21ம் திகதிகளில் கொழும்பு உயர் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.நீதவான் நிசாங்க பந்துல கருணாரட்ன இதனைத் தெரிவித்துள்ளார்.உடுவே தம்மாலோக்க தேரர் கைதுசெய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தார் என்பது...
பீகாரில் தலித் பெண் ஒருவரை கொடுமைப்படுத்தி நிர்வாணப்படுத்தியதுடன் சிறுநீரை குடிக்க வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகாரின் தர்பங்கா மாவட்டத்தில் பிப்ரா என்ற கிராமத்தை சேர்ந்தவர் அஜய் பாஸ்வன், கூலித் தொழிலாளி.
இவரின் வீட்டுக்குள் நுழைந்த நபர்கள் இவரின் மனைவியை நிர்வாணப்படுத்தி சிறுநீரை குடிக்க வைத்துள்ளனர்.
அதுமட்டுமின்றி வெளியே கூறினால் கொலை செய்து விடுவோம் எனவும் மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதனால் அச்சமடைந்த பெண் வீட்டை விட்டு வெளியேறி அவருடைய தந்தை விட்டு சென்றதாக...
கடந்த 6 மாதங்களில் பாதுகாப்பு விதிமுறைகளை மீறி செயற்பட்டதற்காக 62 விமானிகள் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் இருந்து 29 பேருடன் புறப்பட்டு சென்று மாயமான இந்திய விமானப் படைக்கு சொந்தமான விமானம் ஒருவார காலம் ஆகியும் இ்ன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்த சூழலில், விமானத்தில் பணிபுரியும் விமானிகள் முறையாக பாதுகாப்பு அம்சங்களை கடைபிடிக்கின்றனரா என்பது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கேட்கப்பட்டது.
இதுகுறித்து இந்திய விமானக் கட்டுப்பாட்டு ஒழுங்குமுறை ஆணையம்...
பிரேசிலில் பெர்னான்டா டெனிலான் என்ற பத்திரிக்கையாளர் குப்பைகளில் வீணாக கொட்டப்படும் உணவுப்பொருட்களை சேகரித்து உரமாக்கி பயன்படுத்தி வருகிறார்.
பிரேசிலின் மிகப் பெரிய நகரமான சாவோ பாலோவில் பெரும்பாலான உணவுகள் வீணடிக்கப்படுகின்றன.
இதனை சரிசெய்யும் முயற்சியில் தற்போது களத்தில் குதித்துள்ளார் பெர்னான்டா டெனிலான் என்ற முன்னாள் பத்திரிக்கையாளர்.
இதற்காக உணவகங்களுக்குச் சென்று அங்கு வீணாகும் உணவுப் பொருட்களை சேகரிப்பதுடன் அதை உரமாக மாற்றுகிறார்
பின்னர் அந்த ஹோட்டல்களின் வளாகத்தில் தோட்டம் அமைத்து உரமாக பயன்படுத்தவும் உதவுகிறார்.
அதுமட்டுமின்றி...
அசாம், பிஹாரில் கனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை 96 ஆக அதிகரித்துள்ளது.
இரு மாநிலங்களிலும் சுமார் 10 லட்சம் பேர் நிவாரண முகாம்களில் தக்கவைக்கபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த சில நாட்களாக அசாம் மற்றும் பிஹார் மாநிலங்களில் பெய்த கனமழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் லஷ்மிபூர், கோலாகாட், ஜோர்கட், சோனிட்பூர் உட்பட 24 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
பிஹார் மாநிலத்தில் பெய்யும் கனமழையால் புர்னியா, கிஷான் கன்ஞ், பகல்பூர்,...
ஜெர்மனியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பேரணியில், துருக்கி அதிபர் ரசீப் தயிப் எர்துவான் காணொளி இணைப்பு மூலம் உரையாற்றியதை ஜெர்மனி தடைசெய்த முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், துருக்கியிலுள்ள ஜெர்மனியின் மூத்த ராஜிய அதிகாரி ஒருவரை அழைத்து துருக்கி கண்டனம் தெரிவித்திருக்கிறது.
கலோனில் நடைபெற்ற துருக்கிய அதிபர் ஆதரவு பேரணி நடைபெறும்போது, எர்துவான் உரையாற்றுவது, அரசியல் முறுகல் நிலையை தூண்டும் என்று அஞ்சி, அதற்கு அனுமதி கோரி எர்துவான் சமர்ப்பித்த விண்ணப்பத்தை...