குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் தொடர்ந்து ஹிலாரி கிளிண்டனுக்கு எதிராக வசைபாடுகளில் ஈடுபட்டு வருகிறார்.
அமெரிக்காவின் பென்சில்வேனியா நகரில் நேற்று (திங்கள்கிழமை) நடந்த பேரணியில் உரையாற்றிய டிரம்ப், "ஜனநாயக கட்சியின் சார்பாக அமெரிக்க அதிபர் வேட்பாளர் போட்டியில் ஹிலாரி கிளின்டனுடன் போட்டியிட்ட பெர்னி சாண்டர்ஸ், ஹிலாரிக்கு பணிந்து அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதன் மூலம் பெர்னி சாண்டர்ஸ் ஒரு சாத்தனுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளார்” என்றார்.
பேரணியில் டொனால்டு...
குஜராத் முதல்வர் ஆனந்திபென்னை ராஜினாமா செய்யவைத்து அவரை பலியாடாக மாற்றியுள்ளது பாஜக. ஆனால் இந்த நடவடிக்கையால் குஜராத்தை தக்கவைத்துக் கொள்ளலாம் என்ற பாஜகவின் கனவு இனியும் நனவாகாது என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
குஜராத் முதல்வர் ஆனந்திபென் படேல் தனது பதவியை ராஜினாமா செய்ய விரும்புவதாக நேற்று அறிவித்தார். அவர் தமிழகத்தின் ஆளுநராக நியமிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்...
தாய்லாந்தில், சிராவித் செரிவித் என்ற முக்கிய அரசியல் ஆர்வலரின் தாயார், அந்நாட்டு மன்னரை அவமானப்படுத்திய குற்றச்சாட்டின்பேரில், ராணுவ நீதிமன்றத்தில் ஆஜரானார்.
சமூக வலைத்தளத்தில், ஒரே ஒரு வார்த்தையைப் பயன்படுத்தியதற்காக அவர் மீது இந்தக் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. பட்னரி சங்கிஜ் என்ற அந்தப் பெண் பயன்படுத்திய வார்த்தை ஜா. அதாவது, ஆம் என்று அர்த்தம்.
அரச குடும்பத்தை விமர்சித்து, ஃபேஸ்புக் பக்கம் ஒன்றில் தனிப்பட்ட முறையில் வெளியான கருத்துக்கு அவர் அந்த வார்த்தையைப்...
நரம்பு மண்டலங்களில் ஏற்படும் அழற்சி மற்றும் பாதிப்பால் கை, கால், பாதங்களில் எரிச்சல் ஏற்படுகிறது. சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும், அதிகம் மது குடிப்பவர்களுக்கும் பொதுவாக உடல் எரிச்சல் ஏற்படும். வேப்பம் பூவை பயன்படுத்தி உடல் எரிச்சலுக்கான மருந்து தயாரிக்கலாம். ஒரு ஸ்பூன் வேப்பம் பூ, அரை ஸ்பூன் சீரகம் எடுக்கவும். இதில், ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விட்டு கொதிக்க வைக்கவும். உடல் எரிச்சல் இருக்கும்போது, இதை வடிக்கட்டி குடித்தால்...
கோடைகாலத்தில் கொளுத்தும் வெயிலுக்கு பின் பெய்யும் மழையால் சீதோஷண மாற்றம் ஏற்படுகிறது. இதனால் சளி, தொண்டை கட்டு, இருமல் போன்றவை வருகிறது. திடீரென உடல் குளிர்வதால் தலைநீர் ஏற்றம், மூக்கடைப்பு, நெஞ்சக சளி, தலைவலி, உடல் வலி ஏற்படுகிறது. மூக்கடைப்பை சரிசெய்யும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: கற்பூரவல்லி, புதினா, மஞ்சள் பொடி.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து கொள்ளவும். இதில், 2 கற்பூரவல்லி இலைகள், புதினா, சிறிது மஞ்சள்...
எளிதாக கிடைக்க கூடிய பொருட்களை கொண்டு குறட்டையை குறைக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: கற்பூர துளசி, தேன். கற்பூர துளசி இலைகளை நன்றாக சுத்தம் செய்து நீர் விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி தேன் சேர்த்து இரவு தூங்கப்போகும் முன்பு குடித்துவர குறட்டை குறையும். இந்த தேனீர் நுண்கிருமிகளை அழிக்கும். நோய்களை போக்கும் தன்மை உடையது. வீக்கத்தை வற்ற செய்யும். கற்பூர துளசி வயிற்று கோளாறுகளை...
வெள்ளைப்போக்கால் பெண்களுக்கு உடல் சோர்வு ஏற்படும். மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். உடல் வலி, இடுப்பு வலி, வயிற்று வலி, கன்னம் வற்றிப்போகுதல் போன்றவை ஏற்படுகிறது. நீண்டகாலம் இப்பிரச்னை தொடர்ந்தால், கருப்பையில் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது. இப்பிரச்னைக்கு இட்லி பூ, மாதுளை ஆகியவை அற்புதமான மருந்தாகிறது.
சிவப்பு நிற இட்லி பூக்களை பயன்படுத்தி வெள்ளைப்போக்குக்கான மருந்து தயாரிக்கலாம். சிறிது இட்லி பூக்கள் எடுக்கவும். இதனுடன், அரை ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து ஒரு...
உடல் எடை அதிகரிப்பு, ஒபிசிட்டி என்று அழைக்கப்படும் உடல் பருமனுக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. உணவு கட்டுப்பாடு இன்மை, உரிய நேரம் தவறி சாப்பிடுவது, எப்போதும் நொறுக்கு தீனிகளை தின்று கொண்டே இருப்பது போன்றவை உடல் பருமன் என்கிற நிலையை உருவாக்கி விடுகிறது. அதே நேரத்தில் தைராய்டு சுரப்பி பாதிப்பு காரணமாகவும், சர்க்கரை நோய் பாதிப்பு காரணமாகவும், மன அழுத்தம் போன்றவையும் உடல் எடையில் மாறுபாடு தோன்ற வாய்ப்பு...
அரசாங்கத்திற்கு எதிராக மஹிந்த ஆதரவு அணி ஏற்பாடு செய்திருந்த பாத யாத்திரை நேற்று மாலை கொழும்பை வந்தடைந்தது.
10 லட்சம் பேரை அரசாங்கத்துக்கு எதிராக கொழும்பில் திரட்டுவதாக மஹிந்த ஆதரவு அணி அறிவித்திருந்த போதும் குறைந்தளவானவர்களே நேற்று கொழும்பில் திரண்டதாக அரசியல் அவதானிகள் தெரிவித்தனர்.
புதிய அரசியலமைப்பை உருவாக்கும் நடவடிக்கை, வரிச்சுமை, எட்கா ஒப்பந்தம், விசேட யுத்த நீதிமன்றம் என்பவற்றை எதிர்ப்பதாக தெரிவித்து மஹிந்த ஆதரவு அணி ஒழுங்கு செய்த பாதயாத்திரை...
தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சிறப்பு உள்ளது. எனினும் இவை அனைத்தைக் காட்டிலும் ஆடி மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
ஆடி மாத செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் விரதம் இருந்து அம்மனை வழிபட்டு வருவது காலம் காலமாக இருந்து வருகிறது.
சிவனை அடையும் நோக்கில் அன்னை பராசக்தி இம்மாதத்தில் விரதம் இருந்து இறைவனின் இடப்பாகத்தை பெற்று அர்த்தநாரீஸ்வரியாகும் வரம் பெற்றார்.
ஆடிச்செவ்வாய் விரதம் துர்க்கை, முருகனுக்குரிய விரதமாகும். முருகப் பெருமானின் அவதாரமே...