இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் உருவாகவேண்டுமானால் தமிழ் மக்களுடைய மீள்குடியேற்றம், காணாமல் போனவர்களுடைய பிரச்சினைகள் மற்றும் தமிழ் அரசியல் கைதிகளுடைய பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டும். அதனை செய்யாமல் நல்லிணக்கம் தொடர்பாக வார்த்தைகளால் ஒன்றையும் செய்ய இயலாது. செயற்பாடே வேண்டும் என நல்லிணக்க பொறிமுறைகளுக்கான குழவினரிடம் மக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். நல்லிணக்க பொறிமுறைகளுக்கான குழுவினர் இன்றைய தினம் யாழ்.கரவெட்டி பிரதேச செயலகத்தில் பொதுமக்களிடம் கருத்தறியும் கூட்டத்தை நடத்தியிருந்தனர். இதன் போது கருத்து வெளியிட்டுள்ள பொது மக்கள் இவ்வாறு...
ஈழத்தின் வரலாற்று புகழ்மிக்க ஆலயங்களுள் ஒன்றான மூர்த்தி, தலம், தீர்த்தம் என ஒருங்கே அமையப்பெற்ற மட்டு. மாமாங்கேஸ்வரர் ஆலய  தேர் திருவிழா இன்று  சிறப்பாக இடம்பெற்றதுடன் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டதை படங்களில் காணலாம்.
‘ஆள்கடத்தல் மற்றும் காணாமல் ஆக்கப்படுதல்’ சம்பவத்தினால் பாதிக்கப்பட்டுள்ள வவுனியா, கல்மடு, பூம்புகார் முகவரியில் வசித்துவரும் திரு.திருமதி.பழனிநாதன் - சந்தனம் குடும்பத்தினர், தமது மகளின் திருமாங்கல்யதாரணத்தை இனிதே நிறைவேற்ற வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவினரிடம் நிதியுதவி கோரியிருந்தனர். இவர்களின் குடும்ப நிலைவரத்தை கவனத்தில் கொண்டு, சிவனருள் தொழில் பயிற்சி நிலையத்தினர் மனமுவந்தளித்த இருபது ஆயிரம் (20,000) ரூபாய் நிதியை, வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவர் கோ.ராஜ்குமார், ஊடகப்பேச்சாளர் அ.ஈழம் சேகுவேரா ஆகியோர் கடந்த 30.07.2016 வெள்ளிக்கிழமை...
நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியினர் பாதயாத்திரை ஒன்றை மேற்கொண்டுள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த பாதயாத்திரையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டுள்ளனர். இந்நிலையில் பாதயாத்திரையின் முன்னால் எடுத்துச் செல்லப்படும் பதாகையில் தமிழ் மொழி கொச்சைப்படுத்தப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குறித்த பதாகையில் "பாதயாத்திரை" என்பது பிழையாக எழுதப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள சமூக ஆர்வல்கள், தமிழ் மொழி குறித்து பொருட்படுத்தாமையே இதற்கான காரணம் எனவும் தெரிவித்துள்ளனர். இதேவேளை, கடந்த அரசாங்கத்தின்...
தங்கத்திற்கு மாற்றாக 'லீடிங் ஜுவல்லர்ஸ் ஆப் தி வேர்ல்டு' என்ற, உலக தங்க நகை கூட்டமைப்பு, 'லுமினக்ஸ் யூனோ' என்ற புதிய மதிப்புமிகு உலோகத்தை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. தங்கம், பிளாட்டினம், பலேடியம், வெள்ளி ஆகிய உலோகங்களின் கலவையில் இருந்து, 'லுமினக்ஸ் யூனோ' உலோகம் தயாரிக்கப்படுகிறது. தற்போது, 10 கிராம், 'லுமினக்ஸ் யூனோ' உலோகத்தின் விலை, 1,250 ரூபாய். தங்கம் மற்றும் பிளாட்டினம் நகைகளுக்கு அடுத்தபடியாக, 'லுமினக்ஸ் யூனோ' என்ற உலோகத்தில் முதலீட்டாளர்கள்...
இராணுவ நீதிமன்றில் விதிக்கப்பட்ட தண்டனையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ரத்து செய்துள்ளார். அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோத ஆட்கடத்தல்களில் ஈடுபட்டமை மற்றும் கப்பம் பெற்றுக் கொள்வதற்காக தமிழ் இளைஞர்களை கடத்தி கொன்றமை உள்ளிட்ட பாரிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள சிரேஸ்ட கடற்படை அதிகாரிகளுக்கு எதிரான விசாரணைகளில் பிரதான சாட்சியாளரான லெப்டினன் கமாண்டர் கே.சீ. வெலகெதரவிற்குஇராணுவ நீதிமன்றில் விதிக்கப்பட்ட தண்டனை ஒன்றை ஜனாதிபதி இவ்வாறு ரத்து செய்துள்ளார். குறித்த அதிகாரியை பழிவாங்கும் நோக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டதாகக்...
திருமணம் செய்யும் வயது பூர்த்தியாகாத இளம் யுவதியை கர்ப்பமாக்கிய இளைஞர் ஒருவரை சிலாபம் பொலிஸார் கைது செய்துள்ளனர். ஆராச்சிக்கட்டு- ஆடிப்பல பிரதேசத்தை சேர்ந்த 24 வயதான இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சட்ட ரீதியாக திருமணம் செய்யாது பால்ய வயது யுவதி கர்ப்பமடைந்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்த தகவலை அடுத்து, சிலாபம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான யுவதியே இளைஞரால்...
ஐரோப்பியா நாடுகளான ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் அண்மைய நாட்களாக தொடர் தீவிரவாத தாக்குதல்களுக்கு முகங் கொடுத்துள்ளன. இதில் பிரான்ஸில் சற்று பாராதூரமான தாக்குதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் அந்நாட்டு அரசாங்கம் சில விடங்களுக்கு தடை விதிப்பது குறித்து ஆலோசித்து வருக்கின்றது. அந்த வகையில், பிரான்ஸில் முஸ்லீம் பள்ளிவாசல்கள் நிர்மானிப்பதற்கு வெளிநாடுகளில் இருந்து பணம் பெறுவதற்கு தற்காலிகமாக தடை விதிப்பது குறித்து அந்நாட்டு அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. பிரான்ஸ் நீஸ் நகரில்...
அவுஸ்திரேலிய அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 106 ஒட்டங்களால் திரில் வெற்றிபெற்றுள்ளது. 268 என்ற வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 161 ஒட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்து அதிர்ச்சி தோல்வி அடைந்தது. டெஸ்ட் தரப்படுத்தலில் முதல் இடத்தில் உள்ள அவுஸ்திரேலிய அணியை சுழல் பந்தவீச்சால் மிரட்டிய இலங்கை அணி இங்கிலாந்துடன் பெற்ற தொடர் தோல்வியை ஈடுகட்டியுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி முதல் இன்னிங்ஸில்...
அவுஸ்திரேலிய அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 106 ஒட்டங்களால் திரில் வெற்றிபெற்றுள்ளது. 268 என்ற வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 161 ஒட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்து அதிர்ச்சி தோல்வி அடைந்தது. டெஸ்ட் தரப்படுத்தலில் முதல் இடத்தில் உள்ள அவுஸ்திரேலிய அணியை சுழல் பந்தவீச்சால் மிரட்டிய இலங்கை அணி இங்கிலாந்துடன் பெற்ற தொடர் தோல்வியை ஈடுகட்டியுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி முதல் இன்னிங்ஸில்...