கடந்த கால ஆட்சியின் போது நாட்டில் இடம் பெற்ற ஊழல்கள் மற்றும் மோசடி தொடர்பான பட்டியலை முதலமைச்சர் இசுறு தேவபிரிய வெளியிட்டார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டார். மஹிந்த ராஜபக்க்ஷ ஆட்சியில் இருக்கும் போது, தன் குடும்ப நலன்களை கருத்திற் கொண்டு மாத்திரம் செயற்பட்டதாகவும் மக்களுடைய வறுமை தெரியாமல் இருந்ததாகவும் கூறினார். இதன்போது யுத்த காலத்தில் பிரபாகரன் எவ்வாறு தன்னுடைய பாதுகாப்பிற்கு மக்களை அரனாக பயன்...
சென்னையில் இருந்து புறப்பட்டு சென்று மாயமான விமானத்தை கண்டுபிடிக்க அமெரிக்காவின் உதவி நாடப்பட்டுள்ளது என்று ,ராணுவ அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார். சென்னை, தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து, அந்தமானில் உள்ள போர்ட்பிளேர் நகருக்கு கடந்த 22–ம் தேதி புறப்பட்டுச் சென்ற விமானப்படையின் ஏ.என்–32 ரக விமானம், நடுவானில் பறந்தபோது திடீரென மாயமானது. அந்த விமானத்தை தேடும் பணியில் கப்பல்கள், விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தாலும், அந்த விமானம் மற்றும் அதில் பயணம் செய்த...
அரசாங்கம் மேற்கொண்டு வரும் பல்வேறு தவறான செயல்கள் காரணமாக நல்லிணக்கம் ஏற்படாது என முன்னாள் ஜனாதிபதியான நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அனுராதபுரம் கலேன்பிந்துனுவெவ பிரதேசத்தில் விகாரை ஒன்றில் நடைபெற்ற வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அரசாங்கம் மேற்கொள்ளும் இப்படியான தவறான செயல்கள் காரணமாக மக்கள் ஆர்ப்பாட்டங்களிலும் ஏனைய செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வரும் நிலைமை ஏற்பட்டுள்ளது என்றும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்
சில வாரங்களுக்கு முன்னர் சென்னையில் பல இடங்களில் பள்ளி மாணவர்களுக்கு போதை சாக்லெட் விற்றதாக நடந்த சோதனையில் போதை சாக்லெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து தமிழக அரசு அதிரடி சோதனைகள் நடத்தியது. இந்நிலையில் தற்போது ஐதராபாத் போன்ற நகரங்களில் ஹூகா பேனா என்னும் போதை பேனா விற்கப்பட்டு வரும் செய்தி வருகிறது. இதனை தொடர்ந்து அரசு நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது. ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் மாணவன் ஒருவன் பேனாவை...
நான்கு வயதில் என்பது வயது தோற்றத்துடன் விசித்திரமான சிறுவன் வங்கதேசத்தில் வாழ்ந்துவருகிறார். பயசிட் ஹுசைன் என்ற இந்த சிறுவன் பிறந்து நான்கு வருடங்கள் மாத்திரமே ஆனபோதும் அவர் 80 வயது தோற்றம் மற்றும் முதியவர்களுக்கு உரிய உடல் நிலையுடன் காணப்படுவதாக அவரது பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். வங்க தேசத்தின் தென்பகுதி கிராமம் ஒன்றில் வசிக்கும் இந்த சிறுவம் பிரிகேரியா என்னும் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். சாதாரன மனித தோற்றத்தை விட 8 மடங்கு...
வேறு நாடுகளின் முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு எதிர்பார்த்து காத்திருப்பதாக அமைச்சர் சஜித் பிரேமதாஸ கூறுகின்றார். இலங்கை தற்போது விரைவான வளர்ச்சியடைந்து வருவதாக அவர் சுட்டிக்காட்டுகின்றார். இதன்காரணமாக எதிர்காலத்தில் பல தொழில் வாய்ப்புக்கள் உருவாகும் என்று அவர் கூறியுள்ளார். கூட்டு எதிர்க்கட்சியினால் இவை அனைத்தையும் இல்லாமல் செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக சஜித் பிரேமதாஸ கூறியுள்ளார். பாதயாத்திரை மூலமாக, இந்த நாட்டிற்கு வரும் முதலீட்டாளர்களின் எண்ணங்களை திரிவுபடுத்துவதற்கு கூட்டு எதிர்க்கட்சியினர் எதிர்பார்ப்பதாக அமைச்சர் கூறுகின்றார். ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில்...
பாக்கிஸ்தானின் தேசிய விமான நிறுவனம் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸிடம் இருந்து ஏ-330 ரக விமானங்களை குத்தகை பெறும் வகையிலான உடன்படிக்கையில் இன்று கைச்சாத்திட்டுள்ளது. இதற்கான நிகழ்வு இன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது என்று பாக்கிஸ்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த ஒப்பந்தத்திற்கமைய முதலாவது விமானம் அடுத்த வாரம் பாக்கிஸ்தானின் தேசிய விமான நிறுவனத்திடம் கையளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய 2 விமானங்கள் எதிர்வரும் மாதங்களில் கையளிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் நட்டத்தை ஈடுசெய்யும் நோக்கில்...
இந்துக்கள் தங்களின் புனித ஆடி அமாவாசை விரத நாளன்று கீரிமலையின் புனித இடங்களில் வழிபட அனுமதிக்குமாறு சைவ மகாசபை கோரிக்கை விடுத்துள்ளது. சைவ மகாசபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்போது வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘இந்துக்களின் ஆன்மீக ஈடேற்றத்துக்காக பிதிர்க்கடன் செலுத்தி பக்திபூர்வமாக கடைப்பிடிக்கும் விரதமே ஆடி அமாவாசை. இதனை கடைப்பிடிப்போர் அன்றைய தினம் உணவை சுருக்கி கீரிமலை தீர்த்தக்கரையில் தமது முன்னோர்க்கு சிரார்த்த கடனை செய்து அருகில் உள்ள...
  உலக விட­யங்­களில் பொது நலம், சுய­நலம் போன்று பலம், பல­வீனம் என்­பதும் பல­ரினால் பல­வி­தங்­களில் ஆரா­யப்­பட்­டுள்­ளது. பொது நலத்தில் சுய­ந­லமா? அல்­லது சுய­ந­லத்தில் பொது­ந­லமா? என்­பது போல் பலம் பல­வீ­ன­மா­கி­றதா? பல­வீனம் பலம் ஆக்­கப்­ப­டு­கி­றதா என்ற கேள்­விக்கு இன்று உலகில் பதில் கிடைத்­ததா­க­வில்லை. இலங்­கைத்­தீவு வாழ் ஈழத்­த­மிழர், அதா­வது, வடக்கு கிழக்கு மாகா­ணங்­களை தமது தாய­க­மாகக் கொண்ட தமி­ழர்­க­ளது கலை கலா­சாரம், வாழ்­வா­தாரம் என்­பவை ஓர் நீண்ட சரித்­தி­ரத்தை...
  யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தமிழ் சிங்கள மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் பல்வேறு மட்டங்களில் விவாதங்களை உருவாக்கியிருக்கிறது.   சிங்கள ஊடகங்கள் மற்றும் இனவாத போக்குடைய சிங்கள அரசியல்வாதிகள் இந்த சம்பவத்தை பயன்படுத்தி தமது வழமையான இனவாதத்தை கக்க ஆரம்பித்திருக்கின்றன. தமிழர் தரப்பிலும் சிலர் இனவாதத்தை மட்டுமல்ல பிரதேசவாதத்தையும் கிளப்பும் வகையில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களை கேலி செய்யும் வகையிலும் எழுதிவருகின்றனர். பல்கலைக்கழகங்களில் தமிழ் சிங்கள மாணவர்களிடையே மோதல்கள் ஏற்படுவது இதுதான் முதல் தடவையல்ல. பல...