பெர்லின்,
ஜெர்மனி கால்பந்து அணியின் கேப்டன் பாஸ்டியன் ஸ்வெய்ன்ஸ்டீகர் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். சமீபத்தில் நடந்த ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டியில் உடல் தகுதி பிரச்சினையுடன் பங்கேற்ற 31 வயதான பாஸ்டியன் ஸ்வெய்ன்ஸ்டீகர் பிரான்ஸ் அணிக்கு எதிரான அரை இறுதி ஆட்டத்தில் கையால் பந்தை கையாண்டதால் எதிரணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைக்க காரணமாக அமைந்தார். இதனால் இந்த ஆட்டத்தில் ஜெர்மனி அணி தோல்வி கண்டு...
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கிரிக்கெட்: இந்திய அணியின் வெற்றி தொடருமா? 2–வது டெஸ்ட் இன்று தொடக்கம்
Thinappuyal -
கிங்ஸ்டன்,
இந்தியா– வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2–வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிங்ஸ்டனில் இன்று தொடங்குகிறது.
டெஸ்ட் கிரிக்கெட்
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஆன்டிகுவாவில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 92 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை தோற்கடித்து தொடரில் 1–0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது....
சசிகுமாரின் புதிய படமான கிடாரியின் டீசர்கள் வெளியிடப்பட்டுள்ளன. சசிகுமார், நிகிலா விமல் நடிக்கும் இந்தப் படத்தை புதுமுக இயக்குநர் பிரசாத் முருகேசன் இயக்கியுள்ளார். சசிகுமாரின் கம்பெனி புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.
கபாலி படத்தில் ரஜினியும் ராதிகா ஆப்தேவும் இடம்பெறுகிற காட்சிகள் தொலைக்காட்சிகளில் விளம்பரங்களாக வெளியிடப்பட்டு வருகின்றன. அவற்றின் வீடியோக்கள்.
இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரரும் சுழற்பந்து வீச்சாளருமான ஹர்பஜன் சிங்குக்கும் (35), அவரது நீண்டகால தோழியும், பாலிவுட் நடிகையுமான கீதா பாஸ்ராவுக்கும் பஞ்சாப் மாநிலம், ஜலந்தரில் உள்ள குருத்துவாராவில் கடந்த அக்டோபர் மாதம் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் இந்தத் தம்பதியருக்குப் புதன்கிழமையன்று லண்டனில் பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து இந்திய கிரிக்கெட் வீரர்கள் பலரும் ஹர்பஜன் சிங்குக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள்.
ஆகஸ்ட் 15 அன்று ஐக்கிய நாடுகள் சபையில் இந்திய சுதந்தர தினம் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி சிறப்பு இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியை ஏ.ஆர். ரஹ்மான் நடத்த உள்ளார். அவருடைய இசைப் பயணத்தில் இது ஒரு பொன்னான தருணமாகும். ஐ.நா. சபையில் இதற்கு முன்பு 1966-ம் ஆண்டு பிரபல கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமி இசை நிகழ்ச்சியை நடத்தினார். அதற்குப் பிறகு 50 ஆண்டுகளுக்குப் பிறகு...
எல்லாத் தமிழர்களுக்கும் நான் முன்னுதாரணமாக இருக்கவேண்டும்: ‘கபாலி’ இயக்குநர் பா. இரஞ்சித் விருப்பம்
Thinappuyal -
கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் கபாலி. பா. இரஞ்சித் இயக்கியுள்ளார். இந்தப் படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது.
இந்நிலையில் கபாலி படக்குழு செய்தியாளர்களை நேற்று சந்தித்தது. அப்போது இயக்குநர் பா. இரஞ்சித் கூறியதாவது:
தலித் மக்களின் குரலை வெளிப்படுத்தும் இயக்குநராக மட்டும் நான் இருக்கவில்லை. சாதி வேறுபாடுகள் குறித்து என் படங்களில் வெளிப்படுத்தியுள்ளேன். ஏனெனில் நான் அவற்றால் பாதிக்கப்பட்டவன். இல்லாவிட்டாலும் சமுதாயத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளை என் படத்தில் தொடர்ந்து...
கடந்த வாரம் வெளிவந்து திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வரும் படம் ‘கபாலி’. ரஜினி நடிப்பில் உருவாகியிருந்த இப்படத்தை பா.ரஞ்சித் இயக்கியிருந்தார்.
கலைப்புலி எஸ்.தாணு பிரம்மாண்டமாக தயாரித்திருந்தார். இப்படத்தின் புரோமோஷன்கள் இதுவரை எந்த தமிழ் படத்துக்கும் இல்லாத அளவுக்கு பிரம்மாண்டமாக செய்யப்பட்டிருந்தது.
‘கபாலி’ வெளியாகி ஒருவாரம் கடந்த நிலையில், வசூலில் மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளதாக கூறப்பட்டது. எனினும், அதிகாரப்பூர்வமான வசூல் நிலவரங்கள் எதுவும் படக்குழு தரப்பிலிருந்து வெளிவரவில்லை. இந்நிலையில், நேற்று சென்னையில் நடந்த...
புலம்பெயர்ந்து வாழும் ஈழத்து அன்பர் ஒருவரின் பங்களிப்பில் பதினொரு குடும்பங்களுக்கு தற்காலிக வாழ்வுடைமை உதவுபொருட்கள் அண்மையில் வழங்கப்பட்டுள்ளன.
குறித்த உதவிகளானவை கடந்த 2016.07.27ஆம் நாளன்று ரவிகரன் அவர்களின் மக்கள் தொடர்பகத்தில் வைத்து வழங்கப்பட்டன.
இவ்வுதவித்திட்டத்தில் அகப்பை செய்து விற்கும் ஒருவருக்கு அதற்கான உபகரணங்களும், ஒரு குடும்பத்திற்கு சிறிய குழந்தைக்காக பால்மா பெட்டிகளும், ஏனைய குடும்பங்களுக்கு அரிசி, சீனி என்பனவும் வழங்கப்பட்டன.
நிகழ்வில், இவ்வுதவிகளுக்கான பங்களிப்பை வழங்கிய அவுத்திரேலியா வாழ் புலம்பெயர் உறவு, அன்பர்...
கிளிநொச்சியில் கிராம, மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களது அபிவிருத்திக்காக 2 மில்லியன் பெறுமதியான பொருட்கள் வழங்கிவைப்பு…
Thinappuyal -
கிளிநொச்சியில் கிராம, மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களது அபிவிருத்திக்காக 2 மில்லியன் பெறுமதியான பொருட்கள் வழங்கிவைப்பு...
வடக்கு மாகாண, மாகாண அபிவிருத்தி நன்கொடை 2016 (PSDG ) கீழ் வடக்கு கிராம அபிவிருத்தி அமைச்சால், கிராம அபிவிருத்தி திணைக்களத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் இருந்து வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும் சிறப்பாக இயங்கிவரும் மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்கள் மற்றும் கிராம அபிவிருத்தி சங்கங்களுக்கான தளபாட தொகுதிகள் மற்றும் சமையல் பாத்திரத்...