நடைமுறையில் உள்ள அரசியல் யாப்பில் பௌத்த சமயம் தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளதை அகற்றி புதிய அரசியல் யாப்பை தயாரிப்பதாக முன்னெடுக்கப்பட்டு வரும் பிரசாரங்கள் முற்றிலும் போலியானவை எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, மகா சங்கத்தினருக்கோ அல்லது பௌத்த சமயத்திற்கோ பாதிப்பு ஏற்படும் வகையில் எவ்வித நடவடிக்கையையும் அரசாங்கம் எடுக்காது எனத் தெரிவித்தார். பௌத்த மக்கள் உள்ளடங்களாக எல்லா சமயங்களும் எல்லா இனங்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய புதிய அரசியல் யாப்பை நாட்டுக்கு முன் வைப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். இன்று (27) பிற்பகல்...
தேசிய தமிழ் மொழி தின விழா கண்டி மாநகரில் கொண்டாடுவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. நாடளாவிய ரீதியில் காணப்படும் தமிழ் மொழி மூலமான பாடசாலைகளுக்கிடையில் தமிழ் மொழி சம்பந்தமான  போட்டிகள் வலய மாகாண மற்றும் தேசிய ரீதியில் நடைபெற்று வருகின்றன. இந்த போட்டிகளில் தேசிய ரீதியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவும் தேசிய தமிழ் மொழித்தின கண்டி மாநகரில் வெகு விமர்சையாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது....
நுவரெலியா அட்டன் மற்றும் அட்டன் கொழும்பு வீதிகளிலும் அதிக பனிமூட்டம் நிறைந்து காணப்படுவதனால் வாகண சாரதிகள்  அவதானத்துடன்  மின் விளக்குகளை ஒளிரவிட்டு வாகணங்களை செலுத்துமாறு  பொலிஸார் வேண்டுகோள் விடுக்கின்றனர்
மட்டக்களப்பில் இன்று 12. 30 மணியளவில் 300 க்கும் மேற்படட மாணவர்கள் பாரிய ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டு  வருகின்றனர் . பல நிர்மாண பணிகளை நிறைவு செய்து புதிய கட்டிடத்தை கையளிக்க கோரியும் ,இலவச கல்வியை  பாதுகாப்போம், SAITM  எனும் திருட்டுக் கடையை மூடு என இன்னும் பல   கோரிக்கைகளை  முன் வைத்து இந்த ஆர்ப்பாட்டத்தை அரசடி மருத்துவ பீடத்துக்கு அருகாமையில் முன்னெடுத்து வருகின்றனர் . அதே சமயம் கிழக்கு பல்கலை கழகத்துக்கு...
பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து பாடசாலைகளுக்கு அண்மையில் மேற்கொள்ளப்படும் பல்வேறு விஷ போதைப்பொருள் விற்பனையினை தடுப்பதற்கு போதைப்பொருள் தடுப்பிற்கான தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். மாணவர்களையும் நாட்டையும் பற்றிச் சிந்திக்காது பணம் உழைக்கும் நபர்களினால் மேற்கொள்ளப்படும் இவ்வாறான குற்றச்செயல்களில் இருந்து எதிர்கால சந்ததியினரை பாதுகாப்பதற்கு கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக ஜனாதிபதி அவர்கள் வலியுறுத்தினார். காலி கத்தலுவ மத்திய மகா வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் இன்று (27) முற்பகல் கலந்துகொண்டபோதே...
  போதை மருந்து கடத்தலுக்கும், எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என மும்பை நடிகை மம்தா குல்கர்னி தெரிவித்துள்ளார். மஹாராஷ்டிராவில் 2,௦௦௦ கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், மம்தாவுக்கும், அவரது கணவர் என கூறப்படும் கென்யாவைச் சேர்ந்த விக்கி கோஸ்வாமிக்கும் தொடர்பிருப்பது பொலிஸ் விசாரணையில் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து சி.பி.ஐ., மூலம் அவர்களுக்கு, ‘ரெட் கார்னர்’ நோட்டீஸ் வழங்க சர்வதேச பொலிசிடம் மஹாராஷ்டிர பொலிசார் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர். இந்நிலையில்...
  குடும்பத்தினரின் யாருடைய பேச்சையும் அமலாபால் கேட்பதில்லை என்று இயக்குனர் விஜய்யின் அப்பா கூறியுள்ளார். அதுகுறித்த செய்தியை பார்ப்போம்… கேரளாவைச் சேர்ந்த நடிகை அமலாபால், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஏ.எல். அழகப்பனின் மகனும், டைரக்டருமான விஜய்யை கடந்த 2014–ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு டைரக்டர் விஜய்–நடிகை அமலாபால் இருவரும் சென்னை போட்கிளப் பகுதியில் சேர்ந்து வாழ்ந்தனர். 2 ஆண்டுகள் இனிமையாக சென்ற இவர்களின் இல்லற வாழ்க்கையில் கடந்த...
சர்வதே நாடுகளின் எதிர்ப்பை மீறி போதை பொருள் கடத்திய குற்றத்திற்காக இந்தோனேசியா அரசு 4 கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியா நாட்டிற்குள் போதை பொருள் கடத்தியதாக கடந்த 2004ம் ஆண்டு 14 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர், நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் இவர்கள் அனைவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. மரண தண்டனை நிறைவேற்றுவதற்கு 72 மணி நேரம் முன்னதாக கைதிகளுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் தகவல் அளிக்கப்படும். இதனை தொடர்ந்து,...
பிரான்ஸ் நாட்டில் தேவாலயத்தில் புகுந்து பாதிரியாரை கொன்றதாக சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதி அந்த நாட்டு ஜனாதிபதிக்கு பிரான்ஸ் நாட்டை அழித்து விடுவதாக மிரட்டல் விடுத்திருந்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. பிரான்ஸ் நாட்டில் ரூயன் நகருக்கு அருகே உள்ள செயிண்ட் எடுன்னே டூ ரவ்ரே என்ற பகுதியில் இருந்த தேவாலயத்தில் இரண்டு தீவிரவாதிகள் நுழைந்து அங்கிருந்த பாதிரியார், கன்னியாஸ்திரி மற்றும் பக்தர்கள் என 6 பேரை பணயக்கைதிகளாக பிடித்து வைத்திருந்தனர். அப்போது, தகவலறிந்து...
இஸ்ரேல் நாட்டில் உள்ள பேருந்து நிலையத்தில் அந்நாட்டு விமானப்படை தளபதி சுட்டுக்கொல்லப்பட்ட காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த பெப்ரவரி 24ம் திகதி விமானப்படை தளபதியான Eliav Gelman(30) பேருந்து நிலையம் ஒன்றில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் நிகழ்ந்தபோது காட்சிகள் அனைத்தும் அங்குள்ள கண்காணிப்பு கமெராவில் பதிவாகியுள்ளன. இந்த வீடியோ தற்போது இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது. பேருந்து நிலையம் ஒன்றில் ராணுவ வாகனத்திற்காக தளபதி நின்றுக்கொண்டு இருந்துள்ளார்....