சம காலத்தில் பல்வேறு நிறுவனங்கள் ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்து வருகின்ற போதிலும் அப்பிளின் ஐபோன்களுக்கு என்று ஒரு தனி வரவேற்பு இருக்கத்தான் செய்கின்றது.
அப்பிள் நிறுவனம் தனது முதலாவது ஐபோனினை 2007ம் ஆண்டின் பிற்பகுதியில் அறிமுகம் செய்திருந்தது.
இக் கைப்பேசி முதன் முறையாக அறிமுகம் செய்வது தொடர்பில் அப்பிள் நிறுவனத்தினை உருவாக்கிய காலம் சென்ற ஸ்டீவ் ஜாப்ஸ் 2007ம் ஆண்டு அறிவித்தலை விடுத்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து இன்றுவரை பல்வேறு புதிய அம்சங்கள்,...
இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் பேராயர் வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில் நாளைய தினம் போதைப் பொருள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளது.
ராகம நகரில் நடைபெறவுள்ள இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கத்தோலிக்க திருச்சபையின் அனைத்து பங்குகளை சேர்ந்த மக்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
ராகம பிரதேசத்தில் உள்ள பிரதான கத்தோலிக்க பாடசாலை ஒன்றின் மாணவர்கள் கையில் போதைப் பொருள் இருந்து கண்டுபிடிக்கப்பட்டமையே இந்த எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொள்ள திருச்சபை தீர்மானித்துள்ளது.
மட்டக்களப்பு ஓட்டமாவடி கோறளைப்பற்று பிரதேசத்தில் புதிய தொழில்நுட்ப கல்லூரி ஒன்று அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள இளைஞர் யுவதிகளுக்கு மூன்றாம் நிலை கல்வியூடாக தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியின் முயற்சியினாலேயே குறித்த தொழிநுட்பக் கல்லூரி அமைக்கப்படவுள்ளது.
குறித்த தொழிநுட்ப கல்லூரி அமைய பெறவுள்ள காணியினை நேற்றைய தினம் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, ஓட்டமாவடி கோறளைப்பற்று மத்திய பிரதேச...
ஓய்வுபெற்ற பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஒருவரின் வீட்டில் இருந்து துப்பாக்கிகள், தோட்டா துளைக்காத அங்கிகள், தோட்டக்கள் என்பன கைப்பற்றப்பட்டதாக குருணாகல் மாவட்டத்தின் வீரம்புகெதர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது சம்பந்தமாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஒருவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
ஓய்வுபெற்ற முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபரின் நெருங்கிய உறவினர் ஒருவரே வீட்டில் ஆயுதங்கள் இருக்கும் தகவலை பொலிஸாருக்கு வழங்கியுள்ளார்.
மாண்புமிகு ஜனாதிபதி அவர்கள்,
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு,
ஜனாதிபதி செயலகம்,
கொழும்பு.
ஜனாதிபதி அவர்களே!
மீள்குடியேற்ற செயலணி தொடர்பாக
வடக்கு கிழக்கில் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்துவதற்காக அமைச்சர்களான றிசாட் பதியூதீன், பைசர் முத்தப்பா, சுவாமிநாதன் மூவரைக் கொண்ட விசேட செயலணி ஒன்றை தாங்கள் உருவாக்கியிருந்தீர்கள். வடக்கிலிருந்து ஒருவரையும் நியமிக்கப்படவில்லை என்ற வடக்கு மாகாணசபையின் ஏகமனதான தீர்மானத்தையடுத்து அமைச்சர் துமிந்த திசாநாயக்கவையும் இணைத்துள்ளீர்கள்.
யுத்தம் முடிந்து ஏழாண்டுகள் கழிந்த நிலையிலும், மக்கள் முழுமையாக தமது சொந்த இடங்களுக்குப் போக முடியவில்லை...
பிரகஸ்பதி என்று பிரபஞ்சமே போற்றித் துதிக்கும் குருபகவான்தான் ஞானத்தின் பிதாமகனாய்த் திகழ்கிறார். காலசர்ப்ப தோஷம், பிரம்மஹத்தி தோஷம் போன்ற சகல தோஷங்களையும் நீக்கும் ஆற்றல் கொண்டவர். குருவின் பார்வை பட்டால்தான் திருமணம் நடைபெறும். ஒருவரின் ஜாதகத்தில் மற்ற கிரகங்கள் எப்படி இருந்தாலும், குரு மட்டும் நல்ல நிலையில் இருந்தால் எதையும் சாதிக்கும் சக்தி கிடைக்கும்.
இந்த துர்முகி வருடம், ஆடி மாதம் 18 ம் தேதி (2.8.16) செவ்வாய்க்கிழமை கிருஷ்ண...
மகிந்தவை கொலை செய்ய வந்தவர்களுக்கு தங்குமிடத்தை வழங்கியதாக சமிதா மீது குற்றப் புலனாய்வு விசாரணை
Thinappuyal -
பிரபல சிங்கள பாடகி சமிதா எரந்ததி முதுன்கொட்டுவ குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இது குறித்து சமிதாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை கொலை செய்ய கொழும்புக்கு வந்திருந்த விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களுக்கு தங்குமிடத்தை வழங்கியதாக சமிதா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக விசாரணை நடத்தவே குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் அவரை அழைத்துள்ளனர்.
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மூலமாகவே சமிதாவுக்கு விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள்...
நடிகர் தனுஷ் நேற்று (28) தனது பிறந்த நாளை கொண்டாடினார். தனது வீட்டில், வடசென்னை திரைப்பட குழுவினருடனும், தனது குடும்பத்தினருடனும் தனுஷ் தனது பிறந்தநாளை கேக் வெட்டிக் கொண்டாடினார்.
அப்போது யாரும் எதிர்பாராத விதமாக அங்கு வந்த நடிகர் ரஜினிகாந்த், நேரில் வந்து தனுஷுக்கு வாழ்த்து கூறி, ஆசீர்வதித்தார்.
சுமார் 3 மணி நேரம் ரஜினி அங்கு இருந்தார். இது தனுஷுக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பதாக இருந்தது. தனுஷ் பிறந்த நாளுக்கு...
ஓமந்தை பேய்கள் உலாவும் இடம் என்கிறாராம் அமைச்சர் ஹரிசன் – வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன்
Thinappuyal -
பேய்கள் உலாவும் இடமான ஓமந்தையில் பொருளாதார மத்திய நிலையத்தை அமைத்தால் எவரும் அங்கு செல்ல மாட்டார்கள் என அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்ததாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடக்கிற்கான பொருளாதார மத்திய நிலையத்தை அமைப்பது தொடர்பில் நிலவும் சர்ச்சை குறித்து கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த விடயம் குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
பொருளாதார மையத்தை இரு இடங்களில் அமைப்பதற்கான காரணம் அதனை ஒரு இடத்தில் ஆரம்பித்திருந்தால் குறிப்பிட்ட...
பளை புதுக்காட்டுச் சந்தியில் கடைக்குள் புகுந்தது லொறி!! ஒருவர் படுகாயம் (photos) சற்றுமுன்னர் பளை புதுக்காட்டுச்சந்தி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளனர். கொழும்பிலிருந்து யாழ் நோக்கி சென்ற பாரவூர்தி ஒன்று வீதியைவிட்டு விலகி அருகிலிருந்த கடைகளுக்குள் புகுந்துள்ளது.
இதன் காரணமாக 5கடைகள் சேதமாகியதுடன் பாரவூர்தியின் சாரதியும் படுகாயமடைந்துள்ளார்.