பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கோரிக்கை நடைமுறைப்படுத்தாமல் உள்ளதைக் கண்டித்து, அனைத்து பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினரின் வேலை நிறுத்த போராட்டம் இன்றும் தொடர்கின்றது.
நாடளாவிய ரீதியிலான வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு யாழ். பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாக ஊழியர் சங்கத்தினர் தமது ஆதரவைத் தெரிவித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அரசியல் தலையீடுகளற்ற புதிய நியமனங்கள் வேண்டும், மொழிக் கொடுப்பனவு வேண்டும், சம்பளத்தை அதிகரிக்க வேண்டும், மாதாந்த இழப்பீட்டு தொகையை சமமாக வழங்கு, ஓய்வூதியத்...
இலங்கையிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயமானது , புதிய இணையத்தள விண்ணப்பப் படிவத்தைப் பயன்படுத்தி பிரித்தானியாவுக்கான விசாக்களுக்கு வாடிக்கையாளர்கள் மிகவும் இலகுவாக விண்ணப்பிக்க முடியும் என அறிவித்தள்ளது.
‘அக்சஸ் யு.கே.’ என்றழைக்கப்படும் இந்த இணையத்தள விண்ணப்பப் படிவம் ஒழுங்குபடுத்தப்பட்ட தர்க்க ரீதியான கேள்விகளுடனான குறுகிய படிவம், எடுத்துச் செல்லக்கூடிய நட்புறவான முறைமை, அனுமதியின்றி பயணத்தை மேற்கொள்ளக் கூடிய ஐரோப்பிய ஷெங்கன் பிராந்திய நாடுகளுக்கான விசா படிவங்களின் பதிவிறக்கம் ஆகிய வசதிகள் உள்ளடங்கலாக ஒரு...
சீனாவில் நடந்த உலக அழகி போட்டியில் பங்கேற்பதற்காக வந்த கொலம்பியா நாட்டு அழகிக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கொலம்பியாவைச் சேர்ந்த ஜூலியானா லோபஸ் சர்ரசொலா(22), இவர் அங்கு நடைபெற்ற மிஸ் ஆண்டிகுவா 2014-வாக தெரிவானதை அடுத்து சீனாவில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற உலக அழகி போட்டியில் பங்கேற்பதற்காக கடந்த ஆண்டு யூலை 18 ஆம் திகதி கங்க்ஜோ பையூன் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.
அப்போது, அவரது உடமைகளை...
முத்தையா முரளிதரன் எப்போதும் தற்காப்பு மனநிலையை கொண்டவர் என்று இலங்கை அணியின் முன்னாள் தலைவர் ஜெயவர்த்தனே வெளிப்படையாக கூறியுள்ளார்.
இலங்கை அணியின் தலைவராக இருந்த போது முரளிதரன் விடயத்தில் அவரை ஊக்குவிப்பது தனக்கு சவாலாக இருந்ததாக ஜெயவர்த்தனே தெரிவித்துள்ளார்.
பிரபல இணையத்தளம் ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், நான் இலங்கை அணியின் தலைவராக இருந்த போது முரளிதரனை தற்காப்பு மனநிலையில் இருந்து வெளியே கொண்டு வருவது சவாலாக இருந்தது.
இருப்பினும் அவரது அந்த...
கபாலி படம் 6 நாட்களில் ரூ.320 கோடி வசூலித்து சரித்திர சாதனை படைத்துள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்..
கடந்த வாரம் வெளிவந்து திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வரும் படம் ‘கபாலி’. ரஜினி நடிப்பில் உருவாகியிருந்த இப்படத்தை பா.ரஞ்சித் இயக்கியிருந்தார். கலைப்புலி எஸ்.தாணு பிரம்மாண்டமாக தயாரித்திருந்தார். இப்படத்தின் புரோமோஷன்கள் இதுவரை எந்த தமிழ் படத்துக்கும் இல்லாத அளவுக்கு பிரம்மாண்டமாக செய்யப்பட்டிருந்தது.
‘கபாலி’ வெளியாகி ஒருவாரம் கடந்த நிலையில், வசூலில் மிகப்பெரிய சாதனையை...
ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் கீழே கொடுப்பட்டுள்ள வழிமுறைகைளை பின்பற்றுங்கள்,
தினமும் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸ் குடித்தால், உடலில் ரத்த அழுத்தம், கொழுப்பு, நச்சுத்தன்மை என பல பிரச்சனைகளுக்குத் தீர்வாக இருக்கும்.
மனநலக் கோளாறு மற்றும் மூளை நரம்புகளில் பாதிப்பு உள்ளவர்களின் தினசரி உணவில் தர்பூசணி துண்டுகள் அவசியம். மன அழுத்தம், பயம் போன்ற பாதிப்புகளை தகர்க்கும், விட்டமின் பி-6 தர்பூசணியில் அதிகம்.
ஆப்பிள்...
வன்னி பெருநிலப்பரப்பில் நடந்த போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணை தேவை விசாரணையை கோருவதன் நியாயம் தெரிகிறதா?
Thinappuyal -
வன்னி பெருநிலப்பரப்பில் நடந்த போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணை தேவை என்று தமிழ் மக்கள் வலியுறுத்துவதற்கு வலுவான காரணங்கள் உண்டு.
வன்னி பெருநிலப்பரப்பில் நடந்த இன அழிப்புத் தொடர்பில் உள்நாட்டு விசாரணை நடைபெறுமாகவிருந்தால் உண்மையான குற்றவாளிகள் கண்டறியப்படாமல் போகலாம்.
குறிப்பாக குமாரபுரம் 26 பொதுமக்கள் படுகொலை வழக்கின் தீர்ப்பை குறிப்பிட்டுக் கூறலாம்.
அதேநேரம் தமிழின அழிப்பு எதுவும் நடைபெறவில்லை என்பதுடன் படையினர் எந்தக் குற்றமும் செய்யவில்லை என்பதான முடிவுகளே கிடைக்கும்.
இதன்காரணமாகவே போர்க்குற்ற விசாரணையில்...
தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம் வந்துகொண்டிருக்கும் தனுஷ் கைவசம் தற்போது நிறைய படங்கள் உள்ளன. பரபரப்பான படப்பிடிப்புகளுக்கு இடையிலும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருத்தியின் ஆசையை நிறைவேற்றி, அவளை சந்தோஷப்படுத்தியுள்ளார் தனுஷ்.
அந்த சிறுமியின் பெயர் கோட்டீஸ்வரி. 12 வயதான அந்த சிறுமி ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தனுஷின் தீவிர ரசிகையான கோட்டீஸ்வரிக்கு நீண்டநாட்களாக தனுஷை நேரில் பார்க்கவேண்டும் என்று ஆசை....
அதிக பயன்தரவல்ல பனைகள்பற்றி ஆய்வாளர்கள் அதிகம் கண்டுகொள்வதாக இல்லை பொ.ஐங்கரநேசன் விசனம்
Thinappuyal -
வடக்கில் ஏனைய மரங்களைவிடப் பனை மரங்களே அதிகம். மற்றெல்லா மரங்களையும் விட அதிக பயன்தரக்கூடியவையும் பனைகள்தான். ஆனால், அரிய வளமான பனைகள்பற்றி ஆய்வாளர்கள் அதிகம் கண்டுகொள்வதாக இல்லை என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் விசனம் தெரிவித்துள்ளார்.
வடமாகாண பனை அபிவிருத்தி வார இறுதி நாளான இன்று வியாழக்கிழமை (28.07.2016) பனை அபிவிருத்தி ஆய்வரங்கு யாழ் பொதுநூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. யாழ் பல்கலைக்கழக விவசாயபீட சிரேஷ;ட விரிவுரையாளர் கலாநிதி...
கொடியயுத்தம் கடின உழைப்பாளிகளான தமிழரை கையேந்தும் நிலைக்கு தள்ளியது- சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம்
Thinappuyal -
நாட்டில் ஏற்பட்ட கொடிய யுத்தமும் அதனால் ஏற்பட்ட இடம்பெயர்வுகளும் எமது சமூகத்தை மற்றவர்களிடம் கையேந்தும் நிலைக்கு தள்ளியுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் டாக்டர் பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.வவுனியா சுந்தரபுரம் சரஸ்வதி வித்தியாலயத்தில் நடைபெற்ற பாடசாலைக்கான போட்டோ பிரதி இயங்திரம் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவித்ததாவது இலங்கைத்தமிழர்கள் கடின உழைப்பாளிகள் என்று அனைவராலும் அழைக்கப்படுபவர்கள். தங்களின் தேவைகளை தாங்களே தேடிக்கொள்பவர்கள். எனினும்...