அவுஸ்திரேலிய அணியின் சுழற் பந்து வீச்சாளர் ஸ்டீவ் ஓகீபீ தசை பிடிப்பு உபாதையினால் ஒகீபீ பாதிக்கப்பட்டுள்ளார். ஒகீபீக்கு பதிலாக அடம் சம்பா அல்லது ஜோன் ஹொலான்ட் ஆகிய இருவரில் ஒருவர் இலங்கைக்கு அழைக்கப்பட உள்ளனர். எதிர்வரும் வாரம் காலியில் நடைபெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கீபீக்கு விளையாட சந்தர்ப்பம் கிடைக்காது என தெரிவிக்கப்படுகிறது. ஓகீபிக்கு ஏற்பட்ட உபாதை இலங்கை அணிக்கு சாதகமாக அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தற்போது கண்டி பல்லேகலேயில் நடைபெற்று வரும்...
சிவில் யுத்தத்திற்கு பின்னரான வடுக்கள் தொடர்ந்தும் தமிழ் மக்களிடத்தில் உள்ளன. அதன் பிரகாரம் நல்லிணக்க பொறிமுறைகளை உருவாக்குவதில் உள்ள தடைகளை கண்டறிந்து அதனை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் முன்வர வேண்டும் என கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் டையோன் தெரிவித்தார். அதேதேநேரம் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் பேரவையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் பக்கபலமான அம்சமாக விளங்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இலங்கைக்கான உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள...
கொழும்பில் மீண்டும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டமானது இன்று ஆரம்பமாகவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இன்று தொடக்கம் எதிர்வரும் முதலாம் திகதி வரை இந்த டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் நடைபெறும் என சுகாதார பணிப்பாளர் வைத்தியர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார். மேலும் இராணுவம்,பொலிஸ் ஆகியோரி;ன் ஒத்துழைப்புடன் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும், ஏற்கனவே இவர்களின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்ட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தினால் டெங்குவின் தாக்கம் குறைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் குறித்த நான்கு நாட்களுக்கு 450...
பாத யாத்திரை சென்ற இளைஞர்களை சுட்டுக் கொலை செய்தவர்கள் இன்று பாத யாத்திரை செல்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜூபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறுகையில், சுதந்திரமாக ஒன்று கூடுவதற்கு, பாத யாத்திரை செல்வதற்கு அனுமதியளிக்காது இளைஞர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி கொலை செய்து, அடக்கியவர்கள் இன்று பாத யாத்திரை செல்கின்றார்கள். ஏகாதிபத்திய ஆட்சி நடத்தியவர்கள் இன்று ஜனநாயகம் பற்றி பேசுகின்றார்கள். ராஜபக்ச ஆட்சிக்...
இந்தியா இலங்கை இடையேயான உறவு எப்போதும் நிலைத்திருக்கும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்தியா சார்பில் 50.61 கோடி ரூபாய் செலவில் புதிய ஆம்புலன்ஸ்கள் இலங்கைக்கு வழங்கப்பட்டன. இந்த திட்டத்தின் தொடக்க விழா நேற்று கொழும்பில் நடைபெற்றது. இதற்கு பிரதமர் நரேந்திரமோடி வீடியோ செய்தி ஒன்றை அனுப்பியிருந்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது: இந்தியா உதவியுடன் இலங்கையின் பல பகுதியில் பல்வேறு திட்டப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தியா இலங்கை இடையேயான உறவு எப்போதும் நிலைத்திருக்கும். இவ்வாறு மோடி தெரிவித்துள்ளார். விழாவில்...
கடைக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள லொறி தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. நாவிதன் வெளி 15ம் கொலனியில் தயாபரன் கெமிக்கல் ஸ்ரோர் உரிமையாளரின் லொறிஇன்று அதிகாலை 3.30 மணியளவில் எரியூட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக தெரியவருவதாவது. வழமைபோன்று தொழிலை முடித்துவிட்டு அவரது கடைக்கு முன்னால் லொறியைநிறுத்திவிட்டு நித்திரைக்கு சென்றதாகவும் பின்னர் 3.30 மணியளவில் லொறிஎரிந்து கொண்டிருந்ததாகவும் பின்னர் அயலவர்களின் உதவியுடன் தீயை ஓரளவுகட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரமுடிந்ததாகவும் வாகனத்தின் முன்பகுதி முற்றுமுழுதாக எரிந்துள்ளதாகவும் தெரியவருகின்றது. எரியூட்டப்பட்ட வாகனத்தின் உரிமையாளர் கிழக்கு மாகாணசபை...
நிலாவை காட்டி சோறு ஊட்டிய காலத்தில், நிலாவில் காலடி எடுத்து வைத்து உலக மக்களை உறைய வைத்தனர் அமெரிக்கர்கள். 1969ஆம் ஆண்டு அப்பலோ- 11 என்ற விண்கலத்தில் நீல் ஆம்ஸ்ட்ராங், எட்வின் ஆல்ட்ரின் மற்றும் மைக்கேல் கொலின்ஸ் ஆகியோர் நிலாவுக்கு பயணமானார்கள். இவர்களை தொடர்ந்து வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு நபர்கள் நிலாவுக்கு சென்று வந்தனர். இவ்வாறு நிலாவுக்கு சென்று கால் பதித்தவர்களில் மூன்று பேர் ஒரே வகையான நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதில்...
ஆப்கானிஸ்தானில் 6 மாத காப்பிணி மனைவியின் தலைமுடியை அறுத்து கருவை கலைத்த கணவனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Ashkamish மாவட்டத்தை சேர்ந்த 20 வயது பெண்மணி ஒருவரை, அவரது கணவர் கொடுமையாக தாக்கியுள்ளார். தனது மனைவி 6 மாத கார்ப்பிணி என்று கூட பாராமல் அவரது தலைமுடியை அறுத்து கட்டையை வைத்து தாக்கியதில் அவரது 6 மாத கரு கலைந்துள்ளது. மேலும், கணவரின் தாயும், சகோதரியும் இப்பெண்ணை கயிற்றில் கட்டி வைக்க, அதனை...
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 77 பேர் இன்று தாயகம் திரும்பியுள்ளனர். குறித்த அனைவரும் கடந்த மே மாதம் 31ஆம் திகதி முதல் இம்மாதம் 15ஆம் திகதி வரை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் தடுத்து வைக்கப்பட்டனர். இந்நிலையில் மீனவர்களின் விடுதலையை வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். இதனையடுத்து மீனவர்களை விடுவிக்க இந்திய மத்திய அரசு இலங்கை அரசாங்கத்தினை...
ஓமான் தலைநகர் மஸ்கட்டில் இருந்து சென்னை நோக்கி பயணித்த ஓமன் ஏயார் விமானம் கோவாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. குறித்த விமானத்தில் பயணித்த பெண் பயணி ஒருவருக்கு ஏற்பட்ட திடீர் உடல்நல குறைவு காரணமாக விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 7 மணியளவில், அந்த விமானம் கோவாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து குறித்த பெண் வைத்தியசாலைக்கு அனுப்பிய பின்னர் விமானம் திட்டமிட்டபடி கோவாவில் இருந்து சென்னைக்கு வந்து சேர்ந்ததுள்ளது. எனினும்,...