நல்லெண்ணெய் மற்ற எண்ணெய்கள் போல் அல்லாமல், உடலில் கொழுப்பு சேர விடாமல் தடுப்பது தான் இதன் தனிச்சிறப்பு. கொழுப்பை தடுக்கும் நல்லெண்ணெய், ரத்தத்தில் உள்ள கொழுப்பை அகற்றி, அதை சுத்திகரிக்கக் கூடியது. நல்லெண்ணெயில், சீசேமோல் என்னும் பொருள் நிறைந்துள்ளது, எனவே, இதை உணவில் அதிகம் சேர்க்கும் போது, இருதயத்துக்கு, சரியான பாதுகாப்பை அளித்து, இருதய நோய் வராமல் தடுக்கிறது. இதில் உள்ள அதிகப்படியான மக்னீசியம், இன்சுலின் சுரப்பை தடுக்கும் பொருளை எதிர்த்து...
அமெரிக்காவின் அரசியல் நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டே இந்த வாரத்திற்கான நிஜத்தின் தேடல் நிகழ்ச்சிஅமைந்துள்ளது. சில தினங்களிற்கு முன்னர் இடம்பெற்ற டெமொகிரட்டிக் மாநாடு படுபாதள பிரச்சினையைச் சந்திக்க இருந்தது. கிளாரிக்கு ஆதரவாகவும், பேர்ணி சாண்டஸிற்கு எதிராகவும் கட்சியின் தலைமைப்பீடம் செயற்பட்டதை ஆதரப்படுத்தும் 19,000 மின்னஞ்சல்கள் கசியவிடப்பட்டன. இதன் பின்னணியில் ரஸ்யா இருந்தது என்பது தொடர்பான விவகாரங்களையும், டொமோகிரட்டிக் கட்சியே உடைந்து பல துண்டுகளாக சிதற இருந்த நிலையில் மிசேல் ஒபாமா ஒப்பேற்றிய திறமையான...
நாட்டில் சில ஊடக நிறுவனங்கள் ஒழுக்கத்தை மீறி கட்டுக்கடங்காமல் செயற்பட்டு வருவதாகவும், இவற்றை நெறிப்படுத்தி ஒழுங்குபடுத்தும் வகையில் விரைவில் சுயாதீன ஊடக ஆணைக்குழுவை நிறுவவுள்ளதாகவும் அமைச்சரவையின் இணை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அத்தோடு, அனைத்து ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடனும் கலந்துரையாடியதன் பின்னரே, அதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுமென அமைச்சர் மேலும் தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே,...
  இலங்கையின் வைத்தியர்கள் 11 ஆயிரம் பேர் லண்டனில் பணிபுரிகின்றனர். அப்படியாயின் ஏன் வெளிநாட்டு வைத்தியர்களுக்கு இலங்கையில் பணிபுரிய முடியாது என்று அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன கேள்வி எழுப்பினார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலளார் எழுப்பிய கேள்விக்கு பதிளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அமைச்சர் மேலும் இங்கு குறிப்பிடுகையில், இந்தியாவுடன் செய்து கொள்ளப்படவுள்ள எட்கா உடன்படிக்கை தொடர்பில் கடும் விமர்சனங்களை முன்வைக்கின்றனர்....
பாம்பு என்று சொன்னாலே படையே நடுங்கும் என்பார்கள். இந்த சிறுவனை பார்த்தால் அந்த பயம் துளி கூட இல்லை. ஆம் ராட்சத பாம்பின் மேல் சவாரியைப் பாருங்க... அவருக்கு பயம் இருக்குதோ என்னவோ நமக்கு பயம் தொற்றிவிடும். எல்லோரும் மெத்தையில்தான் தூங்குவார்கள் ஆனால் இந்த சிறுவன் மலைப்பாம்புவையே மெத்தையாக்கி படுத்து கொள்கிறான் பாருங்களேன். மலைப்பாம்பின் மீது சிறுவன் விளையாடுவது, சிறுவன் மீது மலைப்பாம்பு ஏறிச் செல்வதும் அப்பப்பா பயங்கரம்..... இந்த சிறுவனின்...
சாலாவ இராணுவ முகாமில் அண்மையில் இடம் பெற்ற வெடிப்பு சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டிருந்த 3 விசாரணைகளும் தற்போது நிறைவடைந்த நிலையில் காணப்படுவதாக இராணுவ ஊடகப் பேச்சாளர்பிரிகேடியர் ஜயனாத் ஜயவீர தெரிவித்துள்ளார். இதேவேளை, வெடிப்பு தொடர்பான விபரங்கள் விரைவில் தெரிவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான விசாரணைகளை இராணுவ விசாரணை பிரிவு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவினர் தற்போது மேற்கொண்டு வருவதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார். சாலாவ வெடிப்பின் போது...
  ரஷ்ய கடற்படையின், தேடுதல் மற்றும் மீட்புக் கப்பலான ‘இகோர் பெலோசோவ்’, நான்கு நாள் நல்லெண்ணப் பயணமாக நேற்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. 96 மாலுமிகளுடன் வந்த ரஷ்ய கடற்படைக் கப்பலுக்கு சிறிலங்கா கடற்படையினர் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தனர். இதையடுத்து கப்பலின் கட்டளை அதிகாரி கப்டன் அலெக்சே நெகோட்சேவ், கப்பல் அணியின் தளபதி கப்டன் மாக்சிம் அலாலிகின் ஆகியோர், சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தனவைச் சந்தித்துப் பேச்சு...
பல்வேறு அரசியல் கட்சிகளினால் இன்று வியாழக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நடைபவனிகள் மற்றும் கட்சி ஊழியர் ஊக்குவிப்பு நிகழ்ச்சிகள் என்பனவற்றின் போது மோதல்கள் ஏற்படக் கூடிய சாத்தியம் இருப்பதாக பொலிஸ் மா அதிபர் புஜித ஜயசுந்தர தெரிவித்துள்ளார். கலவரம் ஏற்படும் விதமான செயற்படும் சகலருக்கும் எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் எனவும் பொலிஸ் மா அதிபர் புஜித ஜயசுந்தர எச்சரித்துள்ளார். அவர் விடுத்துள்ள விசேட அறிவித்தல் ஒன்றில் இதனை அறிவித்துள்ளார். கண்டியிலிருந்து ஆரம்பிக்கவுள்ள நடைபவனி...
கூட்டு எதிர்க்கட்சியினரின் கொழும்பு நோக்கிய பாதயாத்திரை இன்று காலை ஒன்பது மணியளவில் கண்டி புறநகர் கெடம்பேயில் இருந்து ஆரம்பமாகவுள்ளது. கண்டி மாநகருக்குள் இருந்து பாதயாத்திரையைத் தொடங்குவது குறித்து நீதிமன்றம் வழங்கியுள்ள இடைக்காலத் தடை உத்தரவு காரணமாக இந்த மாற்று ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கூட்டு எதிர்க்கட்சியின் அங்கத்துவ கட்சிகள் அனைத்தும் இந்தப் பாதயாத்திரையில் கலந்து கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாதயாத்திரைக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமை தாங்கவுள்ளார். எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி இப்பாத...
அரசியல்வாதிகள், அரசாங்க அதிகாரிகள் வெளிநாட்டு பயணங்கள், விஜயங்களை மேற்கொள்வது தொடர்பில் உரிய நடைமுறை பின்பற்றப்பட வேண்டுமென ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார். அமைச்சரவை கூட்டத்தின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நேற்று முன்தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது ஜனாதிபதி இது தொடர்பிலான யோசனை ஒன்றை சமர்ப்பித்து அனுமதி பெற்றுக்கொண்டுள்ளார் என ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார். அரசாங்க நிதியை சிக்கனமாக பயன்படுத்தும் நோக்கில் இந்த புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்படவுள்ளது. அரச நிதியை சிக்கனமாகவும்...