இந்த நாட்டில் தமிழ் மக்கள், தமிழ் போராளிகள் கொல்லப்பட்டால் விசாரணைகள் தேவையில்லை என்பது எழுதப்படாத சட்டமாகவுள்ளது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் நேற்று இடம்பெற்ற வெலிக்கடை படுகொலையின் 33ஆவது நினைவு தினத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், மனிதப்படுகொலை என்று சொல்லும் வகையில் இந்த நாட்டில் கொலைகள் நடைபெற்றுள்ளன. பல்லாயிரக்கணக்கான மக்கள் காணாமல் போக செய்யப்பட்டார்கள். சரணடைந்தவர்கள், கடத்தப்பட்டவர்கள் என இப்படி...
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டிற்கு வருகை தந்துள்ள கனடா வெளிவிவகார அமைச்சர் ஸ்டெபன் டியோன் இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை சந்திக்கவுள்ளார். 13 வருடங்களுக்கு பின்னர் கனடா வெளிவிவகார அமைச்சர் ஒருவர் நாட்டிற்கு வருகை தந்துள்ளது இதுவே முதல் தடைவையாகும். கனடா வெளிவிவகார அமைச்சரை நேற்று மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் வரவேற்றனர். இதேவேளை, அமைச்சர் ஸ்டெபன் டியோன் இந்த விஜயத்தின்...
தூக்கமின்மையால் இன்று பாதிக்கப்படுபவர்கள் பலர். ஆனால், ‘இதெல்லாம் ஒரு பிரச்னையா?’ என்று எண்ணி அதற்கு உரிய கவனம் கொடுத்து அவர்கள் சரிசெய்யாததால், உடல்நலக் குறைபாடுகள் பல அவர்களுக்கு ஏற்படும் . முழுமையான தூக்கம் கிடைக்க..! *  டி.வி, செல்போன் பாத்துக்கொண்டே தூங்கும் பழக்கங்களுக்குத் தடைவிதித்துக் கொள்ள வேண்டும். *  அடுத்தநாள் பற்றிய எந்த எண்ணமும் இல்லாமல், அமைதியான மனநிலையில் உறக்கத்துக்குள் செல்ல வேண்டும். *  ‘அப்பாடா... படுத்துட்டோம்... இப்போ நல்லா நிம்மதியா தூங்குவோம்’ எனச்...
டென்மார்க்கை சேர்ந்த தமிழ்பெண், துணை விமானியாகும் தனது விருப்பதை முகநூல் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். அர்ச்சனா செல்லத்துரை என்பவர், டீன் சர்வதேச விமான பள்ளியில் தனது துணை விமானிக்கான பயற்சியை தொடங்கவிருக்கிறார். தனது விமான போக்குவரத்து விமானி உரிமத்தை Learn to fly Aps - இல் பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, Commercial Pilot Licence மற்றும் Multi IFR Rating குறித்த படிப்பினை Diamond Flight Academy Scandinavia...
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து இலங்கை முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் விலகியுள்ளார். இந்நிலையில், இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் குமார சங்கக்காரா, அவருக்கு ஆதரவாகக் களத்தில் குதித்துள்ளார். இலங்கை கிரிக்கெட் அணிக்காக பல ஆண்டு காலம் விளையாடி வந்த முத்தையா முரளிதரன், தற்போது ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு அறிவுரையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது ஆஸ்திரேலிய அணி இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. கண்டியில் முதல் டெஸ்ட் போட்டி தொடங்கி...
பெண் ஒருவர் செய்த வித்தை ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. என்னடா இது பசங்க தான் இப்படியெல்லாம் வித்தை காட்டுறாங்கனு நினைத்தால் ஒரு பெண் இப்படியெல்லாம் வெளுத்து வாங்குறாங்க பாருங்க.... பயங்கர வேகத்துடனும், சுறுசுறுப்புடனும் திகழும் இப்பெண்ணின் செயலை நீங்களும் கண்டால் நிச்சயம் ஷாக் ஆகிடுவீங்க.... அப்பெண்ணின் துள்ளல் காட்சி இதோ உங்கள் பார்வைக்கு..... தாவி தாவி பல்டி அடித்தும், குதித்தும் என்னம்மா பட்டையக் கிளப்புறார் என்று பாருங்க... பெண்கள்...
வாழைப்பழம் எல்லாருக்கும் விருப்பமான பழம்தான். ஆனால் வாழைப்பழத் தோலின் பலன்களை நீங்கள் தெரிந்து கொண்டால், அதனை வீசி எறிய யோசிப்பீர்கள். முள்ளை எடுக்க வேண்டுமா? எளிய வழி: முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டுமென்பதில்லை. வாழைப் பழத் தோல் இருந்தா போதும் அன்பர்களே! கைகளிலோ, பாதத்திலோ, மரச்சில்லுகள் அல்லது முள் குத்தினால், வலியில் சுருக்கென்று உயிரே போகும்படி இருக்கும். இதனை எடுக்க முடியாமல் டாக்டரிடம் சென்று , கத்தி காயங்கள் வாங்கியவர்களும் உண்டு. இந்த...
  பிராண்சில் இடம்பெற்ற ஐ.எஸ்.ஐ தீவிரவாதிகளின் தாக்குதலில் யாழ்ப்பாணம் புங்குடுதீவைச் சேர்ந்த ஒருவரும் உயிரிழந்துள்ளதாக பாதிக்கப்பட்டவரின் குடும்ப உறவுகளிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தில் இராமலிங்கம் – ஞானசேகரம் வயது – 46 என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார். இது தொடர்பில் மேலும் தெரியவருவது , பிராண்சில் கடந்தவாரம் பார ஊர்தி ஒன்றினால் மோதி பலரின் உயிரைப் பறித்த தாக்குதலில் அகப்பட்ட குறித்த யாழ் வாசி தலையில் பலமாக தாக்கப்பட்ட நிலையில் மூளை செயல் இழந்து மரணமடைந்துள்ளதாக...
  தன் தந்தைக்கு ஆறாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சொத்து இருந்தும் பேக்கரி ஒன்றில் கூலிவேலை செய்து, நெகிழ வைத்துள்ளார் இளைஞர் ஒருவர். சமூக வலைத்தளங்களில் அவருக்குப் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. குஜராத் மாநிலத்தின் முன்னணி வைர வியாபாரி சாவ்ஜி தொலாக்கியா. 54 வயதான சாவ்ஜி, ஹரே கிருஷ்ணா என்ற பெயரில் வைரம் மற்றும் ஆபரணப் பொருட்கள் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். சூரத் நகரில் பெரிய கம்பெனி வைத்து நிர்வகித்து...
பாடசாலை மாணவர்களை குறிவைத்து பாடசாலைகளுக்கு அருகில் சட்டவிரோத போதைப்பொருட்கள் விற்பனை செய்வதை தடுப்பதற்கு போதைப்பொருள் ஒழிப்பு என்ற வேலைத்திட்டம் முன்னெடுக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். எதிர்கால தலைமுறைகளின் பாதுகாப்பு குறித்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். காலி கத்தலுவ மத்திய கல்லூரியில் இன்று இடம்பெற்ற பரிசளிப்பு விழாவில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். அத்துடன்...