அவுஸ்திரேலியாவில் இருந்து 2016 ஜனவரி மாதம் 20ஆம் திகதி நாடு திரும்பிய மட்டக்களப்பைச் சேர்ந்த சுயாதீன தமிழ் ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சசிகரன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றத்தின் அடிப்படையில் மீண்டும் 6 மாதங்களுக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
புண்ணியமூர்த்தி சசிகரனுடைய வழக்கு விசாரணை நேற்று செவ்வாய்க்கிழமை நீர்கொழும்பு நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், அவ்வழக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 21ஆம் திகதி வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளதுடன், மாதம் ஒரு முறை கொழும்பு குற்றப் புலனாய்வுப்...
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி கண்டி பல்லேகெலே மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில், போட்டியின் முதல் நாளான நேற்று இடையே மழை குறுக்கிட்ட காரணத்தால் போட்டி நின்றது.
இதன்போது , வெளிநாட்டவர் ஒருவர் நிர்வாணமாக மைதானத்தில் ஓடியமை பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
வீடியோவை இங்கே அழுத்தி பார்க்கவும்…..
தமிழ், தெலுங்கு, மலையாள கதாநாயகிகள் இந்தி படங்களில் நடிப்பதை பெருமையாக கருதுகிறார்கள். அதிக சம்பளம், பெரிய நட்சத்திர அந்தஸ்து, உலகளாவிய வியாபாரம் போன்றவை அவர்களை இந்தி பக்கம் இழுக்கின்றன.
ஆனால் அங்கு தலைகாட்டிய நடிகைகள் பலருடைய எதிர்பார்ப்பு ஏமாற்றத்தில் முடிந்துள்ளது. திறமை இருந்தும் அவர்களால் நிலைக்க முடியாமல் போனது. ஸ்ரீதேவி, ஹேமாமாலினிக்கு பிறகு தென்னிந்திய நடிகைகள் யாரும் இந்தியில் ஆதிக்கம் செலுத்தவில்லை.
இந்தி ‘கஜினி’யில் நடித்து ஒரு படத்திலேயே உச்சத்துக்கு...
மாந்தை கிழக்கு உதவி பிரதேசசெயலருக்கு இடமாற்றம் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட சென்ற மக்கள் முல்லைத்தீவு அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரனின் உறுதிமொழியை அடுத்து மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்துசென்றனர்.
தமது பிரசேத்திற்கு தண்டைனை இடமாற்றம் பெற்றுவரும் பிரதேச செயலாளர் ஒருவரை நியமிப்பதற்கு இடமளிக்கமாட்டோம் என எதிர்ப்புத்தெரிவித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட தீர்மானித்தனர்.
முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து 90 கிலோமீட்டருக்கு அப்பாலுள்ள மாந்தை கிழக்கு பிரதேசசெயலகத்தில் உதவிப்பிரதேச செயலாளரான இ.ரமேஸ் தமது...
ஸ்ரீலங்காவில் பணிபுரியும் கப்பற் பணியாளர்களிற்கு சுவிஸ்லாந்தில் பணியாற்றுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இரு தரப்பினருக்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம், வணிக கப்பற்றுறை செயலகத்தில் அத்தியட்சகர் அஜித் செனவிரத்ன மற்றும் ஸ்ரீலங்காவுக்கான சுவிஸ்லாந்து தூதுவர் ஹெயின்ஸ் வோக்கர் நெய்டர்கோன் ஆகியோருக்கிடையே துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவின் கண்காணிப்பின் கீழ் கைச்சாத்திடப்பட்டது.
இதேவேளை எதிர்காலத்தில் ஸ்ரீலங்கா கப்பற் பணியாளர்கள் சுவிஸ்லாந்து நாட்டு தேசிய கொடியின் கீழ் பணியாற்றுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படுவதாக, துறைமுகங்கள் மற்றும்...
முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்திற்கு இருமருங்கிலும் இராணுவத்தினரினால் அமைக்கப்பட்டுள்ள முகாமை அகற்றி, முகத்துவாரத்திற்குச் செல்லும் பாதையை திறந்துவிடுமாறு அப்பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சட்டத்தரணி மனோரி முத்தெட்டுவேகம தலைமையில் 11 பேர் அடங்கிய குழுவினர் நேற்று முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் அலுவலகத்திற்குட்பட்ட பாதிக்கப்பட்ட மக்களிடம் கருத்தறியும் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். இதன்பின்னர் பாதிக்கப்பட்ட மீனவர் ஒருவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
முள்ளிவாய்க்காலின் யுத்த மௌனிப்புடன் அங்கு வாழ்ந்த மக்களின் சொத்துக்கள், சுகங்கள் யாவும்...
பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கோரிக்கையினை நடைமுறைப்படுத்தாமல் இருப்பதை கண்டித்து பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் இன்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாடளாவிய ரீதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த வேலை நிறுத்ததிற்கு யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் தமது ஆதரவினை தெரிவித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அரசியல் தலையீடுகள் அற்ற புதிய நியமனங்கள் வேண்டும், மொழிக்கொடுப்பனவு வேண்டும், சம்பளத்தை அதிகரி, மாதாந்த இழப்பீட்டு தொகையை சமமாக அபகரி போன்ற பதாதைகள் பல்கலைக்கழகத்தில்...
அரசுக்கு எதிராக கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி இடம்பெறவுள்ள பாதயாத்திரை மாவனெல்ல நகருக்குள் பிரவேசிக்க நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, கண்டியில் நாளை ஆரம்பமாகவுள்ள பாதயாத்திரைக்கு மஹிந்த அணியின் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மகிந்தவிற்கு வியாழன் பகையானதால் தான் இன் நிலமை ஏற்பட்டுள்ளதாக கூறும் ஜோதிடர்கள் வியாழக் கிழமை இவ் யாத்திரை செய்ய வேண்டாம் எனக் கூறியும் அதைப் பெருட்படுத்தாமல் இதைச் செய்ததன் விளைவு...
இலங்கையின் முன்னாள் சுழற் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் இலங்கையில் நடைபெறும் அவுஸ்திரேலிய -இலங்கை அணிகளுக்கு இடையிலான கிரிக்கட் போட்டிகளில் அவுஸ்திரேலியாவுக்கான பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக பணியாற்றியமை தொடர்பில் இலங்கை கிரிக்கட் சபை அவுஸ்திரேலிய கிரிக்கட் சபைக்கு முறையிட்டு முரளீதரண்மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருக்கும் நிலையில், அவுஸ்திரேலிய அணியின் பயிற்றுவிப்பாளர் பணியில் இருந்து முரளீதரன் விலகியுள்ளார்.
இதனை சிட்னி மோர்னிங் ஹெரால்ட் பத்திரிகையை மேற்கோள் கட்டி இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது. இதனை...
ரஜினி நடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகி, திரையரங்களில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘கபாலி’. இப்படம் வசூலில் பல்வேறு சாதனைகளை முறியடித்து வருவதாக கூறப்பட்டுவரும் வேளையில், ‘கபாலி’ ஒரு தோல்வி படம் என்று வைரமுத்து பேசிய பேச்சு தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாகி வருகிறது.
வைரமுத்து சமீபத்தில் பங்கேற்ற ஒரு விழாவில், நான் புரிந்துகொள்கிறேன் ஒவ்வொருவரையும் என்று ஆரம்பித்து, அரசியலை, விஞ்ஞானத்தை என்று ஒவ்வொன்றாக பட்டியலிட்டுக்...