இலங்கை விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் நடவடிக்கைகள் குறித்து திருப்தி அடைய முடியாது என ஐக்கிய நாடுகள் பொதுச்செயலாளர் பதவிக்காக போட்டியிட உள்ள ஹென் கிளார்க் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் அரசாங்கப் படையினருக்கும் இடையிலான யுத்தத்தின் போதுஐக்கிய நாடுகள் அமைப்பின் பங்களிப்பு போதுமானதல்ல என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். உலகில் ஏற்படும் வன்முறைகளுக்கான மூல காரணிகளை கண்டறிந்து அதற்கு தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். தாம் ஐக்கிய நாடுகள்...
  காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள காத்தான்குடியைச் சேர்ந்த பாடசாலை மாணவியொரவரை அழைத்துச் சென்று மாணவியை தலைமறைவாக வைத்திருந்தார் எனும் குற்றச்சாட்டில் வாழைச்சேனையைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் நேற்று (20) கைது செய்யப்பட்டுள்ளார். வாழைச்சேனை கோழி, இறைச்சிக்கடை வீதியைச் சேர்ந்த 28 வயதான எம். முஹம்மட் பர்ஸாத் என்பவரே கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர். குறித்த சந்தேகநபர் வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள நாவலடி பிரசேத்திலுள்ள வீடொன்றில் மறைந்திருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த திங்கட்கிழமை...
சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து கூலி வேலையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இரு பெங்காலிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பாணந்துறை பிரதேசத்தில் தங்கியிருந்த நிலையில் இவர்கள் கைதுசெய்யப்பட்டதுடன், குறித்த இருவரையும் பாணந்துறை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வாழப்பாடி அருகே தற்கொலைக்கு முயன்ற எஜமானின் உயிரை தக்க சமயத்தில் காப்பாற்றிய பாசக்கார நாய் பிஸிசை குடும்பத்தினர் பாராட்டி விருந்து அளித்தனர். சேலம் மாவட்டம் வாழப்பாடி, அக்ரஹாரம், வைத்தி படையாச்சி தெரு, ஆடு அடிக்கும் தொட்டி பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 50). கூலி தொழிலாளி. இவரது குடும்பத்தினர் வீட்டில் ஒரு நாயை செல்லமாக வளர்த்து வருகிறார்கள். அதற்கு பிஸி என்ற பெயரை சூட்டி உள்ளனர். இந்த வளர்ப்பு நாய், ரவிச்சந்திரன்...
  ரிதிகம பகுதியில் போலி நாணயத்தாள்கள் வைத்திருந்த இளைஞர் (21) ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். குறித்த இளைஞரிடமிருந்து 1000 ரூபா போலி நாணயத்தாள்கள் இரண்டு கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த இளைஞர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த இளைஞர் ரிதிகம பகுதியை சேர்ந்தவரென பொலிஸார் தெரிவித்தனர். குறித்த போலி நாணயத்தாள்கள் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கரீபியன் பிரிமியர் லீக் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் கிறிஸ் கெய்ல் தலைமையிலான ஜமைக்கா டாலவாஸ் அணி 36 ஓட்டங்களால் அசத்தல் வெற்றி பெற்றது. பார்படாஸ் டிரிடன்ஸ் அணிக்கு எதிராக முதலில் துடுப்பெடுத்தாடிய ஜமைக்கா டாலவாஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 195 ஓட்டங்கள் குவித்தது. தொடக்க வீரர் வால்டன் 97 ஓட்டங்களும், சங்கக்காரா 50 ஓட்டங்களும் குவித்தனர். கடந்தப் போட்டியில் டக்-அவுட் ஆன அணித்தலைவர் கெய்ல், இந்தப்...
இந்தியா- மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி இன்று ஆண்டிகுவாவில் நடைபெறுகிறது. இந்திய அணி மேற்கிந்திய தீவுகளில் சுற்று பயணம் மேற்கொண்டு நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்திய அணியை பொறுத்த வரையில் டெஸ்ட் போட்டிகளில் அனைத்து விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என்பதால் 5 பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கும் என்று கூறப்படுகிறது. இதனால் ஒரு நாள் அணியின் துவக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மாவுக்கு இடம் கிடைப்பது...
இங்கிலாந்து மண்ணில் அதிக டெஸ்ட் போட்டியை வென்ற ஆசிய அணி என்ற பெருமையை பாகிஸ்தான் அணி பெற்றுள்ளது. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் பாகிஸ்தான் அணி லார்ட்சில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றது. இதன் மூலம் பாகிஸ்தான் அணி,இங்கிலாந்தில் 50 போட்டிகளில் விளையாடி 11 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் பாகிஸ்தான் அணி 1982, 1992, 1996, 2016 லாட்ஸ்சில் நடைபெற்ற நான்கு டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்து...
டெஸ்ட் போட்டியை மிஸ் பண்றேன், ஆனால் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றது சரியான முடிவு என்று டோனி கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணித்தலைவர் என்றால் அது டோனி தான். ஆனால் வெளிநாடுகளில் நடைப்பெற்ற டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெறமுடியாததால் ஏற்பட்ட நெருக்கடியால், கடந்த 2014-ம் ஆண்டு திடீரென டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக டோனி அறிவித்தார். இந்நிலையில் குர்கானில் நடைப்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய டோனி,...
கரீபியன் பிரியமிர் லீக் போட்டியில் நேற்று முன் தினம் நடந்த 18வது லீக் போட்டியில் ஜமைக்கா டாலவாஸ்- டிரின்பகோ நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் கிறிஸ் கெய்ல் தலைமையிலான ஜமைக்கா டாலவாஸ் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 158 ஓட்டங்கள் எடுத்தது. இதன் பின்னர் 159 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய டிரின்பகோ நைட் ரைடர்ஸ் அணிக்கு தொடக்க வீரர்களாக அம்லா, பிராண்டன் மெக்கல்லம் களமிறங்கினர். மெக்கல்லம்...