விஜய் டிவியில் பிரபலமான சீரியல்களில் ஒன்று சரவணன் மீனாட்சி. இந்த சீரியலின் முதல் பாகம் முடிந்ததை தொடர்ந்து 2வது பாகம் தொடரப்பட்டது. இதில் மீனாட்சியின் காதலனாக இதுவரை 4 பேரை காண்பித்துவிட்டனர்.
அண்மையில் இந்த சீரியலின் மூன்றாம் பாகம் தொடங்கப்பட்டது. சீரியல் முடிவுக்கு வந்தது என்று சந்தோஷத்தில் இருந்த ரசிகர்கள் இதற்கு ஒரு முடிவே இல்லையா என மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர்.
தமிழ் சினிமா நட்சத்திரங்களில் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் பாபி சிம்ஹா, ரேஷ்மி மேனன். கடந்த ஏப்ரல் மாதம் 22ம் தேதி இவர்களது திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் ரேஷ்மி மேனனின் தாயார் அஜிதா மேனன், புற்றுநோயால் அவதிப்பட்டு நேற்று (19.07.2016) கேரளாவில் உயிரிழந்துள்ளார்.
அவரை பிரிந்து துயரத்தில் இருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கு சினிஉலகம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது.
சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி இருவரையும் ஏதோ போட்டி நடிகர்களாகவே பார்த்து வருகின்றனர். ஆனால், உண்மையாகவே இருவரும் நெருங்கிய நண்பர்கள் தான்.
விஜய் சேதுபதி நடிக்கும் றெக்க படத்தில் கூட இவர் சிவகார்த்திகேயன் ரசிகராக நடிக்கின்றாராம், மேலும், சமீபத்தில் விஜய் சேதுபதி ரெமோ டீசரை பார்த்துள்ளார்.
உடனே சிவகார்த்திகேயனுக்கு போன் செய்து ‘சார், சூப்பர் பிகர் சார் நீங்க’ என்று கூறி கலாய்த்தாராம். இன்று நடந்த முடிஞ்சா இவன பிடி இசை வெளியீட்டு...
திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சம்பூர் கிராமத்தில் இறுதிக்கட்டமாக மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மக்கள் அடிப்படை வசதிகள் இன்றி பாரிய நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்து வருவதாக தெரிவிக்கின்றனர்.
2006 ஆம் ஆண்டு யுத்தம் காரணமாக சம்பூர் பிரதேசத்தை விட்டு இடம்பெயர்ந்த மக்கள் நலன்புரி நிலையங்கள் மற்றும் உறவினர் வீடுகளில் வசித்துவந்த நிலையில் 9 வருடங்களின் பின்னர் முழுமையாக மீளக் குடியமர்த்தப்பட்டனர். எனினும் இதுவரை தமக்கு எந்தவித அடிப்படை வசதிகளும் செய்துகொடுக்கப்படவில்லை...
கஷ்டமான நேரங்களில் நாம் மனதை ஒருமுகப்படுத்தி நினைத்தாலே போதும், பைரவர் ஓடோடி வந்து உதவுவார்.
கடவுளை வழிபடுபவர்களில் பெரும்பாலானவர்கள் எனக்கு அது வேண்டும், இது வேண்டும் என்றுதான் வழிபடுகிறார்கள். வெகு சிலரே வீடுபேறாகிய முக்தி வேண்டும் என்று கடவுளை உருகி, உருகி நினைப்பதுண்டு.
பைரவரை வழிபட்டால் நிச்சயம் உடனே கைமேல் பலன்கள் கிடைக்கும். காலம், காலமாக உள்ள இந்த உண்மையை சமீபகாலமாகத்தான் மக்கள் முழுமையாக உணர்ந்து கொள்ளத் தொடங்கியுள்ளனர். பைரவர் என்றால்...
அமெரிக்காவைச் சேர்ந்த யுவதியொருவர் 3 தடவைகள் இரட்டைக் குழந்தைகளை பிரசவித்துள்ளார். இந்த 6 குழந்தைகளும் 26 மாத கால இடைவெளியில் பிறந்தமை குறிப்பிடத்தக்கது.
கான்சாஸ் நகரைச் சேர்ந்த 20 வயதான டனேஷா கோச் எனும் யுவதியே இவ்வாறு தடவைகள் இரட்டைக் குழந்தைகளை பெற்றுள்ளார். இவர் தனது காதலரான ஜெப்ரி பிரெஸ்லருடன் இணைந்து வாழ்ந்து வருகிறார்.
இத் தம்பதியினர் 26 மாதங்களுக்கு முன் முதல் தடவையாக பெற்றோ ராகினர். அப்போது இவர்களுக்கு இரு...
அரசாங்கத்தைப் பொறுத்தவரை தமிழ் மக்களுக்கானத் தீர்வுத்திட்டம் என்கிற ஒன்று அவர்களிடத்தில் இல்லை என்றே கூறவேண்டும். 30ஆண்டுகால போராட்டத்தில் தமிழ் மக்களின் உரி மைகளை வென்றெடுப்பதற்கான யுத்தம் மௌனிக்கப்பட்ட பின்னர் சமாதானம் ஏற்பட்டுவிட்டதாகக் கூறிக்கொண்டிருக்கும் அரசு, யுத்தம் முடிவுற்று 07வருடங்களாகியுள்ளபோதிலும் தமிழ் மக்களுக்கானத் தீர்வுகளை வழங்க முன்வரவில்லை. வெளிநாட்டவர்களின் பேச்சுக்களும் ராஜதந்திர ரீதியில் என்றே தொடர்கிறது. அமெரிக்காவும், இந்தியாவும் தமது சுயநல அரசியலுக்காக செயற்பட்டு வந்தது. தொடர்ந்தும் செயற்படுகின்றது. தமிழ்...
உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில் உருவாகியுள்ள கபாலி திரைப்படம் யூன் 22ம் திகதி வெளியாகவுள்ளது.
படத்தின் முதல்நாள் காட்சியை பார்க்க ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ள நிலையில், முன்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகின்றது.
சுவிசில் கபாலி வெளியாகும் திரையரங்குகள்
Go to Videos
The story of 'Neruppu da' Revealed By Arunraja kamaraj - Kabali, Rajinikanth, Neruppu da song
பிரான்சின் நைஸ் நகர தாக்குதலில் பலியான நபர்கள் பெரும்பாலும் வெளிநாடுகளை சேர்ந்தவர்களே என பிரான்சின் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பிரான்சின் நைஸ் நகரில் கடந்த 14ம் திகதி கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் மீது லொறியை செலுத்தியதில் இதுவரையிலும் 84 பேர் பலியாகியுள்ளனர்.
மேலும் 70க்கும் அதிகமான நபர்கள் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், இவர்களில் 19 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர்.
இந்நிலையில் பலியான நபர்களில் பாதி பேர்...
சுவிசில் இந்த வாரம் கடும் வெயில் கொளுத்த இருப்பதால் மக்களை எச்சரிக்கையுடன் இருக்கும் படி வானிலை ஆய்வாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
சூரியனில் இருந்து ஓசோன் வளிமண்டலம் வழியாக வரும் வெப்பநிலை அதிகமாக உயர்ந்துள்ளது. இது கடந்த திங்கட்கிழமையன்று உச்சகட்ட நிலையை எட்டியது.
ஆபத்தான UV கதிர்வீச்சுகளை கொண்ட இந்த வெப்பம் உடல்நலத்திற்கு பல தீங்குகளை விளைவிக்க கூடியது. இது சுவாச பிரச்சனைகள், தோல் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
இதனால் வெளியில் உடற்பயிற்சி செய்வதையோ, வெயிலில் அலைவதையோ...