சிரியாவில் 11 வயது மதிக்கத்தக்க சிறுவனை ஐஎஸ் தீவிரவாதிகள் தலைதுண்டித்து படுகொலை செய்வது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது.
ஈராக் மற்றும் சிரியாவின் பகுதிகளை கைப்பற்றிய தனி தேசத்தை உருவாக்கியுள்ள ஐஎஸ் தீவிரவாதிகள் நாளுக்கு நாள் தலை துண்டிப்பு, கற்பழிப்பு போன்ற மிக கொடூரமான குற்றங்களை செய்து வருகின்றனர்.
இதுதொடர்பான வீடியோக்களை வெளியிட்டும் பரபரப்பை அதிகப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் சிரியாவின் அலெப்போவில் 11 வயது சிறுவனை தலைதுண்டித்து படுகொலை செய்வது போன்ற வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
சிரியாவின் அரச...
அண்மைக்காலமாக இலங்கை முழுவதும் பரவலாகப் பாலியல் வன்முறைகளும், துஷ்பிரயோகங்களும் இடம்பெற்றுவருவது தெரிந்ததே. அத்தோடு இவை தமிழ் மக்களுக்குள்ளேயே பெருமளவில் நிகழ்வதும் வழமையானதொன்றாகிவிட்டது. பதின்ம வயதுச் சிறுமிகள் உட்படச் சிறுவர்கள் தமது தந்தைமார்கள், பேரன்மார்களுக்குச் சமான மான வயதுடைய முதியவர்களினாலேயே பாலியல் வன்முறைகளுக்கும், துஷ்பிர யோகங்களுக்கும் ஆட்படுத்தப்படுவது பெரும் வேதனையளிக்கக்கூடிய விடயமாகவுள்ளது.
யாழ்ப்பாணம், மலையகம் உட்படத் தமிழர் வாழ்விடங்களில் இவ்வாறான நிகழ்வுகளும், வாள்வெட்டுப்போன்ற வக்கிரமான செயல்களும் இடம்பெறுவதற்குத் தென்னிந்தியக் கருத்தற்ற தமிழ்ச்...
பீர் குடித்துக் கொண்டே உயிருடன் உள்ள சுண்டெலியை ருசித்து சாப்பிடும் இளைஞரின் வீடியோ வெளியாகி சமூக விலங்கு நல ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபகாலமாக விலங்குகளை துன்புறுத்தும் வகையிலான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி சமூக விலங்கு நல ஆர்வலர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
இந்த வகையில், ஒரு வாலிபர் பீர் அருந்திக் கொண்டே அதற்கு சைடிஷ் ஆக உயிருடன் உள்ள சுண்டெலியை குச்சியால் குத்தி சாப்பிடுவதும், பின்பு...
இங்கிலாந்தில் நடுரோட்டில் நபர் ஒருவரை சரமாரியாக தாக்கிய பொலிஸ் அதிகாரிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று காரில் சென்று கொண்டிருந்த நபரை Massachusetts- லிருந்து துரத்தி சென்றுள்ளனர்.
ஒரு கட்டத்தில் New Hampshire-ல் சிக்கிய நபரை, இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கையில் விலங்கிடுவதற்கு முன்பாக கொடுமையாக தாக்கியுள்ளனர்.
இதுதொடர்பான சிசிடிவி வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில், தாக்குதலில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக New Hampshire Attorney General...
உலக அழகன் போட்டியில் முதன் முறையாக இந்தியர் ஒருவர் பட்டம் வென்றுள்ளார்.
இங்கிலாந்தின் சவுத்போர்ட் பகுதியில் நேற்று உலக அழகன் போட்டி நடந்தது.
இதில் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த 47 பேர் பங்கேற்றனர், இவர்களிலிருந்து இந்தியரான ரோஹித் என்பவர் உலக அழகனாக தெரிவானார்.
பட்டம் வெல்லும் முதல் இந்தியரான ரோஹித்துக்கு 50,000 அமெரிக்க டொலர்கள் பரிசாக வழங்கப்பட்டது.
2 வது இடத்தை அமெரிக்காவின் பியர்டோ ரிகோ தீவைச் சேர்ந்தவரும், 3வது இடத்தை மெக்சிகோவை...
12 கோடி ரூபா செலவில் தமிழ்ப் பிரதேசத்தில் புத்தர் சிலை அமைப்பது அவசியம்தானா? வட மாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரட்னம்.
Thinappuyal -
யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்கள் இன்னும் அகதி வாழ்க்கை வாழ்ந்து வரும் நிலையில், 12 கோடி ரூபா செலவில் தமிழ்ப் பிரதேசத்தில் புத்தர் சிலை அமைப்பது அவசியம்தானா என வட மாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரட்னம் கேள்வியெழுப்பியுள்ளார்.
நயினாதீவில் 67 அடி உயரமான புத்தர் சிலையை அமைப்பதற்கு மேற்கொண்ட நடவடிக்கைக்கு தமிழ் மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வந்த நிலையில், எதிர்ப்புகளை மீறி அங்கு புத்தர் சிலையை அமைக்கும் பணிகள் மீண்டும்...
ஓமந்தையில் பொருளாதார மத்திய நிலையம் அமைய வேண்டும். சிவசக்தி ஆனந்தன், பா.உ
பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைப்பதே பொருத்தமானது என்று ஜனநாயக ரீதியாக முடிவெடுக்கப்பட்டு விட்டாலும் சில சுயநலன் சார்ந்த சக்திகள் மேலும் குழப்பங்களையும், இழுபறியையும் உருவாக்கிய வண்ணம் உள்ளனர்.
ஜனநாயகம் என்பது வெறுமனே புள்ளடி போடும் ஒரு விவகாரமல்ல. ஜனநாயகம் என்பது நடைமுறையில் அதற்கான மரபுகளையும், சம்பிரதாயங்களையும், பண்பாட்டையும், வாழ்க்கைமுறையையும் கொண்ட அன்றாட நடைமுறையோடு பின்னிப்பிணைந்த விடயமாகும்.
பொருளாதார மத்திய...
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பான விசாரணைக்காக ஏற்படுத்தப்படவுள்ள உத்தேச நீதி விசாரணை பொறிமுறை குறித்து ஆராய, சட்டத்தரணிகள் மட்டத்திலான விசேட குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது.
ஐவரை கொண்டதாக அடுத்த வாரமளவில் குறித்த குழு நியமிக்கப்படவுள்ளதாக, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், ஏற்படுத்தப்படவுள்ள உத்தேச நீதி விசாரணை பொறிமுறையானது, இலங்கையின் அரசியலமைப்புக்கு ஏற்புடையதாகவே அமையவேண்டுமென்பதே இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் நிலைப்பாடென, அச் சங்கத்தின் உபதலைவர்...
வவுனியா குளத்தின் அலை கரைப்பகுதியில் இருந்து முதியவர் ஒருவரது சடலம் இன்று (புதன்கிழமை) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர், வவுனியா பூந்தோட்டம் பகுதியை சேர்ந்த 65 வயதுடைய அந்தோனி மயில்வாகனம் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த நபரின் உயிரிழப்பிற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
திருமணம் என்பது ஒவ்வொருவருடைய வாழ்விலும் மிகவும் இன்றியமையாதது. குறிப்பிட்ட பருவ வயதை அடைந்தவுடன் ஆண், பெண் இருவருக்கும் திருமணத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்படுவது கடமை மட்டும் அல்லாமல் இயற்கை நியதியும்கூட. மண வாழ்க்கை சிலருக்கு எளிதாக கூடி வந்துவிடும். சிலருக்கு அதிக முயற்சிக்கு பிறகு கூடிவரும். ஒரு சிலருக்கு கிரக தோஷ அமைப்பின் காரணமாக தடைகள், இடையூறுகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்.
திருமணம் என்றவுடன் பிள்ளையார் சுழி போடுவதுபோல முதலில் நிற்பது...