இலங்கைக் கடற்பரப்பில் அத்து மீறி பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்கள் விடுதலை செய்யப்படுவர் என கடற்படை அறிவித்துள்ளது.
சில மாதங்களுக்கு முன்னதாக இலங்கைக் கடற்படையினரால் கைதான 70 இந்திய மீனவர்களையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவி விஜேகுணரட்ன சிங்கள பத்திரிகையொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
இன்னும் ஒன்றிரண்டு நாட்களில் இவர்கள் விடுதலை செய்யப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
எனினும் கைப்பற்றப்பட்ட...
வற் வரி அதிகரிப்பு என்ற பெயரில் நல்லாட்சியால் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை மீண்டும் மக்களிடமே வழங்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த வற் வரி குழப்பங்களுக்கு அரசாங்கமே முழு பொறுப்பு ஏற்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த வற் வரி அதிகரிப்பு யோசனை பாராளுமன்றத்தின் அனுமதியுடன் அல்லாமல் தன்னிச்சையாகவும், சட்டவிரோதமாகவும் கொண்டு வரப்பட்ட ஒன்றெனவும்...
யாழ். பல்கலைக்கழகத்தில் அண்மையில் இடம்பெற்ற மோதல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கல்வி நடவடிக்கைகள் இன்று மீண்டும் ஆரம்பமாகவுள்ளன.
மருத்துவ பீடம், சித்த மருத்துவ அலகு, வவுனியா வளாகம், விவசாய பீடம் ஆகிவற்றின் கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாகவுள்ளன.
கலைப்பீடம், சித்திரமும் வடிவமைப்பும், நடனம், இசைத்துறைகளின் பரீட்சைகள் திட்டமிடப்பட்டவாறு எதிர்வரும் 25 ஆம் திகதி நடைபெறும் என பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் குறிப்பிட்டார்.
இதனையடுத்து பல்கலைக்கழக்தின் கல்வி நடவடிக்கைகள் முழு அளவில் செயற்படுவதற்கான நடவடிக்கைகள்...
அமெரிக்க குடியரசுக் கட்சியின் வேட்பாளராக டொனால்ட் ட்ரம்ப் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலி;ல் ட்ரம்ப் குடியரசு கட்சியின் வேட்பாளராக போட்டியிட உள்ளார். இது தொடர்பில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்னும் இரண்டு நாட்களில் ஜனாதிபதி வேட்பாளர் பதவியை ட்ரம்ப் உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ள உள்ளார்.
குடியரசு கட்சியின் தேசிய பேராளர் மாநாடு இன்னும் இரண்டு தினங்களில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ட்ரம்ப் தரப்பு முன்னாள் அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஹிலரி கிளின்ரை...
தேர்தல்கால துப்பாக்கிப் பிரயோகம்: 3 வருடங்களின் பின் கைது செய்யப்பட்ட சர்வானந்தாவுக்கு பிணைகோரி மனு.
Thinappuyal -
வடமாகாண சபைக்கான தேர்தல் பரப்புரை காலத்தில் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தி பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரைக் காயப்படுத்தியதன் மூலம் கொலை முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறி மூன்று வருடங்களின் பின்னர் கைது செய்யப்பட்டு மூன்று மாதங்களுக்கு மேலாக நீதவான் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டவரை பிணையில் விடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு மீதான உத்தரவு வரும் 25 ஆம் திகதி வழங்கப்படும் என யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி...
இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டமும் நோர்வேயும்மீள்குடியேறியோருக்கான உதவிதிட்டங்களை விஸ்தரிப்பது தொடர்பில் உடன்படிக்கையை செய்துள்ளன.
இன்று இதற்கான உடன்படிக்கை, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின்இலங்கைப்பிரதிநிதி Lovita Ramguttee மற்றும் நோர்வேயின் தூதுவர் Thorbjørn Gaustadsæther ஆகியோருக்கு இடையில் கையெழுத்தானது.
இந்த உடன்படிக்கையின் மூலம் மீளக்குடியேற்றப்பட்ட யாழ்ப்பாணம் தெல்லிப்பளை மற்றும் திருகோணமலை சம்பூர் பகுதி மக்கள் நன்மை பெறவுள்ளனர்
குறித்த மக்களுக்கு பொருளாதார முன்னேற்ற உதவிகளே வழங்கப்படவுள்ளன. இதன் காரணமாக இந்த பகுதியின்...
நாவல் எழுதும் ஒரு நாவராசிரியர். இலங்கையின் இலக்கிய விருது பெற்றவரம், சர்வதேச எழுத்தாளர்கள் திட்டத்தின் உலகின் இளம் தேசிய வேட்பாளருமான அரசியல் பொருளாதாரம் மற்றும் கல்வி சீர்திருத்த கல்வி
கற்றுவருபவருமான கொழும்பை சேர்ந்த திருச்சி வன்னியாராச்சி என்ற 22 வயதுடைய பெண்னே இந்த கட்டுரையை எழுதியுள்ளார்.
எனக்கு தெரிந்த உரிமை குறித்து நான் இதை எழுதுகின்றேன்.
நான் நன்மைகள் குறித்து நன்கு அறிவேன்.நான் சாதாரண சிங்கள பௌத்த குடும்பத்தில் பிறந்தவர்.
தாய்நாட்டை விட்டு சற்று...
இலங்கை அகதி ஒருவர் அவுஸ்திரேலியாவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சடலம் மெல்போர்ண் டன்டினொங் பகுதியில் இருந்து நேற்று மீட்கப்பட்டுள்ளது.
வன்னி மல்லாவியை சேர்ந்த 36 வயதான திருநாவுக்கரசு திருவருள்குமார் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
குறித்த நபர் கடந்த ஞாயிற்றுக்கிழமை நித்திரைக்கு சென்ற நிலையில் மறு நாள் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் புகலிடம் கோரி அவுஸ்திரேலியா சென்ற குறித்த நபர் அதன் பின்னர் நாடு...
தனது கேசம் கலைந்த நிலையில் தகரக் கொட்டகையின் கீழ் அமர்ந்தவாறு பகலுணவு சமைத்துக் கொண்டிருக்கிறார் அந்தப் பெண்.
தகரக் கொட்டகை சுட்டெரிக்கும் வெயிலை உள்வாங்கி அவளுடைய உடல் முழுவதும் பரவவிட, அவளது அடுப்பிலிருந்து வெளிவரும் சூடும் கலந்து வெப்பக் காற்றை உமிழ்கின்றது.
விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையிலான யுத்தத்தால் தமது சொந்த இருப்பிடங்களை விட்டு இடம்பெயர்ந்து கடந்த 20 வருடங்களாக பூந்தோட்டம் நலன்புரி முகாமில் வசித்து வரும் ஆயிரக்கணக்கானவர்களில் ஒருவர்தான் அபலைப்...
தான் பெற்ற மழலைச்செல்வங்களைப் பரிதவிக்கவிட்டு, தொலைதூரத்திலுள்ள குழந்தைகளுக்குத் தாயாகி மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்களாகச் செல்லும் பல தாய்மார்களின் எதிர்பார்ப்பு தனது பிள்ளைகளுக்கு சிறந்த எதிர்காலத்தை பெற்றுக்கொடுக்க வேண்டுமென்பதே.
அதுவும் பெண்பிள்ளைகளைப் பெற்ற தாய்மார்களின் எதிர்பார்ப்பு சற்று அதிகமாகவே இருக்கின்றது. மகளை நன்றாகப் படிக்க வைக்க வேண்டும், அவளை நல்ல இடத்தில் மணம் முடித்து வேண்டும், என்றெல்லாம் அந்தப் பட்டியல் நீண்டுகொண்டே செல்கின்றது.
ஆனால், பெண்பிள்ளைகளுக்கு வளரும் பருவத்தில் தாயின் அன்பும்,...