ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை எதிர்வரும் ஆகஸ் மாதம் 21 ஆம் திகதி நடைபெறும் என பரீட்சைகள் திணைகளம் தெரிவித்துள்ளது.
30 வருடங்களுக்குள் பிரித்தானியவிற்கு அழிவு நேரிட வாய்ப்புள்ளதாக காலைநிலை நிபுணர்கள் எச்சரித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
இங்கிலாந்து காலநிலை மாற்றம் இடர் மதிப்பீடு 2017 என்ற தலைப்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 8 சிறந்த காலநிலை நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இவர்கள் நடத்திய ஆய்வில், வரவிருக்கும் 30 ஆண்டுகளுக்குள் பிரித்தானியா வெள்ளம், வெப்பநிலை, தண்ணீர் பற்றாக்குறை போன்றவற்றால் கடும் அவதிக்குள்ளாகி கடும் அழிவினை சந்திக்கும் என்று கூறியுள்ளனர்.
வெளியிட்டுள்ள அறிக்கையில்,
குளர்ச்சி மிகுந்த நாடான பித்தானியாவில்...
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதியிலிருந்து, இலங்கை போக்குவரத்துச் சபை பேரூந்துகளுக்கான கட்டணங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, போக்குவரத்து பிரதி அமைச்சர் அஷோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி நூற்றுக்கு 6 வீதத்தினால் பேரூந்து கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார். இதற்கமைய ஆரம்ப பேரூந்து கட்டணமான 8 ரூபா 9ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இலங்கை போக்குவரத்துச் சபைக்கு ஏற்படும் செலவுகளை ஈடுசெய்யவும், இந்த துறையினை நட்டத்திலிருந்து காப்பாற்றவுமே இவ்வாறு, பேரூந்து கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர்...
இறக்குமதி செய்யப்படும் சீனி மீது விதிக்கப்பட்டிருந்த விசேட சந்தைப் பொருள் இறக்குமதி வரி 25 சதத்தினால் குறைக்கப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
அதன் மூலம், ஏற்கனவே கிலோ கிராம் ஒன்றுக்கு ரூபா 30 ஆக இருந்த குறித்த வரி, இன்று (18) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் ரூபா 29.75 ஆக மாற்றமடைகின்றது.
குறித்த வரிக் குறைப்பின் மூலம், சீனி மீது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலை தொடர்பில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலை குறையும்...
சம்பூரில் மின்னுற்பத்தி நிலையத்தை அமைக்கும் வேலைத்திட்டத்தை இந்தியா கைவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இந்த வேலைத்திட்டத்துக்கு வெளியாக்கப்பட்ட எதிர்ப்புகள் மற்றும் சிறிலங்கா அரசாங்கத்தின் மாற்றுத்திட்ட கோரிக்கை என்பவற்றின் அடிப்படையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்திய ஊடகம் ஒன்றின் தகவல் படி, இந்தியாவினால் கொழும்புக்கு அருகில் உள்ள கெரவலபிட்டிய பகுதியில் இயற்கை எரிவாயு மின்னுற்பத்தி நிலையம் ஒன்று அமைக்கப்படவுள்ளது.
சம்பூர் நிலக்கரி மின்னுற்பத்தி நிலையத்துக்கு பதிலாக இயற்கை எரிவாயு மின்னுற்பத்தி நிலையத்தை அமைக்குமாறு,...
யாழ்பாண பல்கலைகழகத்தில் இடம்பெற்ற மாணவர்களுக்கு இடையிலான மோதல் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு அரசாங்கத்தின் மூன்று முக்கிய அமைச்சர்கள் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளனர்.
அமைச்சர்களான டி.எம். சுவாமிநாதன், அனுர பிரியதர்ஷ யாப்பா மற்றும் கருணாரத்ன பரணவிதான ஆகியோரே யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ளனர்.
அமைச்சர்களுடனான சந்திப்பிற்கு ஊடகங்களுக்கு அனுமதி வழங்க முடியாது என யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் உபவேந்தர் வசந்தி அரசரட்னம் கூறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
காலவரையறையன்றி மூடப்பட்டுள்ள பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பாக ஆராயும்...
அனுஷ்கா தனது உடல் எடையைக் குறைக்காமல் இருப்பது ராஜமௌலிக்கு கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறதாம்.
இதனால் அனுஷ்காவை அவர் எச்சரித்ததாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
‘பாகுபலி’ படத்தைத் தொடர்ந்து ‘பாகுபலி 2’ வை ராஜமௌலி தற்போது இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
முதல் பாகத்தில் வயதான தோற்றத்தில் நடித்த அனுஷ்காவிற்கு இதில் பிரபாஸுடனான காதல் காட்சிகள் அதிகம் இருக்கிறதாம்.
இதற்காக அனுஷ்கா தனது உடல் எடையைக் குறைத்து வருகிறார். ஆனால் ‘இஞ்சி...
கனேடிய நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்த சங்கரியின் புதல்வருமான கெரி ஆனந்த சங்கரி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
யாழ்ப்பாணத்திலுள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமையகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை இந்த சந்திப்பு இடம்பெற்றது.
இந்த சந்திப்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் எம்.பி, வடமாகாண சபை அவைத்...
துருக்கியில் ஜனாதிபதி தய்யீப் எர்டோகன் தலைமையிலான ஆட்சியை கவிழ்க்க இராணுவ புரட்சி நடத்தப்பட்டது. ஆனால் பொதுமக்கள் உதவியுடன் அப்புரட்சி முறியடிக்கப்பட்டது.அதை தொடர்ந்து இராணுவ புரட்சிக்கு உதவியவர்கள் மற்றும் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதையட்டி நடந்த துப்பாக்கி சண்டை மற்றும் மோதலில் 290 பேர் உயிரி ழந்தனர். 1500 இற்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
இராணுவ புரட்சியில் ஈடுபட்டதாக இதுவரை 8000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 34 இராணுவ...
துருக்கியில் ஜனாதிபதி தய்யீப் எர்டோகன் தலைமையிலான ஆட்சியை கவிழ்க்க இரவு இராணுவ புரட்சி நடத்தப்பட்டது. ஆனால் பொதுமக்கள் உதவியுடன் அப்புரட்சி முறியடிக்கப்பட்டது.
குறித்த சம்பவத்தில் நடந்த துப்பாக்கி சண்டை மற்றும் மோதலில் 265 பேர் உயிரி ழந்தனர். 1500 இற்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அதை தொடர்ந்து இராணுவ புரட்சிக்கு உதவியவர்கள் மற்றும் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இராணுவ புரட்சியில் ஈடுபட்டதாக இதுவரை 8000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில்...