இந்திய- சிறிலங்கா ஆயுதப்படைகளுக்கு இடையிலான இரண்டாவது மூலோபாயக் கலந்துரையாடல் முடிவுக்கு வந்துள்ளதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. நிபுணத்துவம் மற்றும் பரஸ்பரம் நன்மையளிக்கும் உறவுகளை இரண்டு நாட்டு ஆயுதப்படைகளுக்கு இடையில் ஊக்குவிக்கவும், இந்திய- சிறிலங்கா ஆயுதப்படைகளுக்கு இடையிலான மூலோபாயக் கலந்துரையாடல் 2013ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இதன் இரண்டாவது கலந்துரையாடல் சிறிலங்காவின் கூட்டுப்படைகளின் தலைமையகத்தில் இடம்பெற்றுள்ளது. இதில், இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தல், ஆயுதப்படைகளுக்கு இடையில், நேரடியாகவும், பரஸ்பரம் நலன்களை அடிப்படையாகக் கொண்ட விடயங்கள்...
  சிங்கப்பூர்-இந்தியா இடையிலான விரிவான பொருளாதார ஒத்துழைப்பு உடன்பாடும்(சீபா) , இந்தியா- சிறிலங்கா இடையில் கையெழுத்திடப்படவுள்ள பொருளாதார தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்பாடும் (எட்கா), தெற்காசியப் பிராந்தியத்துக்கு நன்மையளிக்கும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். சிங்கப்பூரில் நேற்று நடந்த தென்னாசிய புலம்பெயர்ந்தோர் மாநாட்டில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். “இந்த உடன்பாடுகள், சம்பந்தப்பட்ட எல்லா நாடுகளுக்கும் சாதகமான நிலையை ஏற்படுத்தும். சிறிலங்கா அரசியல் உறுதிப்பாட்டை அடைந்துள்ளது. இது உறுதியான பொருளாதாரத்துக்கு...
  திருகோணமலை உவர்மலையைச் சேர்ந்த அல்பிரட் நோயல் செல்லப்பிள்ளை 90 வயதுக்கு மேற்;பட்டவர்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் 4 தங்கப்பதக்கத்தை தனதாக்கி கொண்டுள்ளார். இலங்கை முதியோர் மெய்வல்லுநர் சங்கம் மத்திய மாகாண வளர்ந்தோர் மெய்வல்லுநர் சங்கத்தினருடன் இணைந்து நடத்திய 9வது வருடாந்த போட்டி கடந்த வாரம் 16.17ம் திகதிகளில் கண்டி போகம்பரை மைதானத்தில் நடைபெற்றது. இதில் 5000 மீற்றர் வேகநடை, 100 மீற்றர், 200 மீற்றர், ஈட்டி எறிதல் போட்டிகளில் பங்கு...
  துருக்கியில் ஜனாதிபதி தய்யீப் எர்டோகன்  தலைமையிலான ஆட்சியைக் கவிழ்க்க இராணுவத்தின் ஒரு பிரிவினர் புரட்சியில் ஈடுபட்டனர்.இந்த இராணுவ புரட்சியை பொதுமக்கள் வெற்றிகரமாக முறியடித்தனர். அப்போது ஏற்பட்ட மோதலில் 290 பேர் உயிரிழந்தனர். 1,500 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இராணுவ புரட்சியில் ஈடுபட்ட 6,000 போராளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர், பொலிஸாருக்கும், இராணுவீரர்களுக்கும் நடைபெற்ற சண்டையில் தோற்கடிக்கப்பட்ட இராணுவீரர்களை, துருக்கி குடிமகன்கள் அடித்து உதைக்கும் புகைப்படங்கள் மற்றும் இராணுவவீரர்களின் ஆடைகள் களையப்பட்டு, அவர்களின் கைகள்...
குறிப்பாக வடகிழக்கு ஊடகவியலாளர்களைக் குறிவைத்து அரசபுலனாய்வாளர்கள் ஊடகவன்முறைகளையும், ஊடகவியலாளர்கள் இடையே மோதல்களையும் தோற்றுவித்து வருகின்றனர். ஊடகவியலாளர்களை அரசாங்கம் உள்வாங்கிக் கொள்ளும் ஒரு திட்டமாக இவ் அரசாங்கம் தமது நடவடிக்கைகளைக் கட்டவிழ்த்துள்ளது. யுத்தகாலத்தில் கடமையாற்றிய ஊடகவியலாளர்களுக்கும், தற்போது கடமையாற்றிக்கொண்டிருக்கும் ஊடகவியாளர்களுக்குமிடையே நிறையவேறுபாடுகள் இருக்கின்றது. குறிப்பாக 2009ம் ஆண்டின் பின்னர் ஊடகத்துறைக்குள் நுழைந்தவர்கள் பெரும்பாலானோர் இலத்திரணியல் ஊடகங்களைச் சார்ந்தவர்களாகவே இருக்கின்றனர். இதனூடாக அரசாங்கம் தகவல் அறிந்துகொள்ளும் தொழில்நூட்பத்தின் ஊடாக குறித்த ஒரு சில ஊடகவியலாளர்களுக்கு...
  தினப்புயல் பத்திரிகையின் வியாபார முகவர்களாகிய வவுனியா நகர பத்திரிகை விற்பனை நிலையங்களில் திடீரென அடையாளம் தெரியாத புலனாய்வு உத்தியோகத்தர்கள் என்ற போர்வையில் மிரட்டல்கள் செய்யப்பட்டுள்ளது. பதிவு செய்யப்பட்ட ஒரு ஊடக நிறுவனத்தின் மேல் மறைமுக ஊடக அடக்கு முறையாகவே மேற்படி விடயம் பார்க்கப்பட முடியும். ஊடக சட்டங்களுக்கு புறம்பாக செயல்பட்டால் நீதிமன்ற நடைமுறைகளை கடைப்பிடிப்பதே ஐனநாயகம். பிரபாகரனின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியே நாடுகடந்த அரசாங்கத்திற்கான அங்கிகாரம் என்ற தினப்புயல் பத்திரிகையில்...
  யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலை தொடர்ந்து பல்கலைக்கழக வளாகத்தில் புலனாய்வாளர்களின் பிரசன்னம் அதிகரித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். யாழ். பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீட மாணவர் குழுக்களுக்கிடையில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற மோதலைத் தொடர்ந்தே வவுனியா வளாகம் உள்ளிட்ட யாழ் பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் பல்கலைக்கழக வளாகத்திற்குள் இனந்தெரியாத நபர்களின் நடமாட்டம் மற்றும் புலனாய்வாளர்களின் பிரசன்னம் அதிகரித்துள்ளதாக...
  அம்பாறை பொத்­துவில் அறு­கம்பை அபி­வி­ருத்தி ஒன்­றியம் ஏற்­பாடு செய்த 21.5 கிலோ மீற்றர் தூரம் கொண்ட அரை மரதன் ஓட்­டப் ­போட்­டியில் ஜேர்மன் பிர­ஜை­யான மாகஸ் கோடர் முதலாம் இடத்தை பெற்றார். பொத்­துவில் அறு­கம்பை அபி­வி­ருத்தி ஒன்­றியம் ஏற்­பாடு செய்த “கல்­விக்­காக ஓடுவோம்” அரை மரதன் ஓட்­டப்­போட்டி நேற்று காலை பொத்­துவில் சின்ன உல்லை அல் அக்ஸா வித்­தி­யா­ல­யத்­துக்கு முன்னால் ஆரம்­ப­மா­கி­யது. இப்­போட்­டியில் ஜேர்­ம­னி­ய­ரான மாகஸ் கோடர் எக்படர் முத­லி­டத்தைப் பெற்று 30...
மட்டக்களப்பு மண்ணில் ஜனாதிபதியும் கிழக்கு மாகாண ஆளுநரும் உள்ளபோதே பொரும்பான்மை இனத்தவரால் எமது மாவட்டத்தின் எல்லை புறங்களில் காணிஅபகரிப்புக்கள் இடம் பெற்றுள்ளன. நல்லாட்சி அரசில் எமது மக்கள் சந்தேகம் கொள்ளாத அளவிற்கு நடந்து கொள்ள வேண்டும் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மா.நடராசா தெரிவித்தார். பெரியகல்லாறு மத்தியகல்லூரி தொழில்நுட்ப ஆய்வு கூட திறப்பு விழாவும், ஒன்று கூடல் மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவும் வித்தியாலய அதிபர் எஸ்.செல்வராசா தலைமையில் அண்மையில் நடைபெற்றது....
சமுதாயஞ்சார் சீர்திருத்தத் திணைக்களத்தின் மட்டக்களப்பு பிராந்திய அலுவலகத்தால் புனர்வாழ்வளிக்கப்பட்ட 146 கைதிகள் கடந்த 06 மாதகாலத்தில் விடுவிக்கப்பட்டுள்ளதாக அத்திணைக்களத்தின் மட்டக்களப்பு பிராந்திய அலுவலகத்தின் உத்தியோகஸ்தர் கே.சுதர்சன் தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் முதல் ஜுன் மாதம் 30ஆம் திகதிவரை சிறு குற்றங்கள் இழைத்த 101 கைதிகள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தாலும் 45 கைதிகள் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தாலும் சமுதாயஞ்சார் சீர்திருத்தத் திணைக்களத்தின் மட்டக்களப்பு பிராந்திய அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். இவர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளதாகவும்...